
Post No. 8974
Date uploaded in London – –27 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்
பண்டிகை நாட்கள் – டிசம்பர் 16- மார்கழி மாதப் பிறப்பு; 25-வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் ; 30-ஆருத்ரா தரிசனம்
அமாவாசை- 14; பௌர்ணமி-29; ஏகாதஸி-11,25;
சுபமுகூர்த்த தினங்கள்—4, 10, 11
Xxx

டிசம்பர் 1 செவ்வாய்க் கிழமை
துணிவுள்ளவனுக்கே செல்வம் சேரும்
சத்வமநுதாவந்தி சம்பதஹ – கதா சரித் சாகரம்
xxxx
டிசம்பர் 2 புதன் கிழமை
நல்ல காலம் வந்துவிட்டால் எல்லா ரத்தினங்களும் , முயற்சி செய்யாமலே கிடைத்து விடும் – ராமாயண மஞ்சரி
விபவே சர்வரத்னானாமயத்னேனைவ சங்கமஹ
xxxx
டிசம்பர் 3 வியாழக் கிழமை
சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க வேண்டும் – பஞ்ச தந்திரம் 2-81
சநைஹி சனைஸ் ச போக்த்வயம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்
xxx
டிசம்பர் 4 வெள்ளிக் கிழமை
ஹேமம் போஜன பாஜனம் பவதி சேத் ப்ருச்சயேத் கிம் வ்யஞ்ஜனம்
சாப்பாட்டுத் தட்டே தங்கம் ; அதில் போடப்படும் கறி கூட்டு வகை பற்றி என்ன கேள்வி? – சம்ஸ்க்ருத பழமொழி
xxx
டிசம்பர் 5 சனிக் கிழமை
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் -659
பிறரை அழச் செய்து சேர்த்த பொருள் அவரை அழவிட்டு ஓடி விடும்.நல்ல வழியில் வந்த செல்வம் போனாலும் அது பின்னர் நல்லதையே செய்யும் –
xxx

டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள் நீர் பெய்திரீ இ யற்று -குறள் -660
கெட்ட வழியில் பொருள் சேர்த்து காப்பாற்ற எண்ணுவது பச் சை மட்பாண்டத்தில் தண்ணீரை சேகரிக்க முயல்வது போன்றதாகும்
xxxx
டிசம்பர் 7 திங்கட் கிழமை
அதிக செல்வம் இருக்குமிடத்தில் தீமையும் இருக்கும் -பாதகாதிதக 56-1
ஸர்வதா நாஸ்த் யபி சா சமைஸ்வர்ய ம்
xxx
டிசம்பர் 8 செவ்வாய்க் கிழமை
யாருடைய செல்வம் நிலையாக நின்றது ?- ராஜ தரங்கிணி
ஸ்திராஹா கஸ்ய விபுதய
xxxx
டிசம்பர் 9 புதன் கிழமை
சர்வே குணாஹா காஞ்சனம் ஆச்ரயந்தே – நீதி சதகம்
நல்ல குணங்களே தங்க கட்டிகள் ஆகும்
xxxx
டிசம்பர் 10 வியாழக் கிழமை
ஹரதி தனிநாம் வித்தன்யாஹோ டாம்பிகாஹா — சுபாஷிதாவலி
ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்
xxxx

டிசம்பர் 11 வெள்ளிக் கிழமை
அந்தி நேரமும் , மின்னலும், செல்வமும் எங்கே எப்போது நிலையாக நின்றது -கதாசரித் சாகரம்
சந்த்யா வித்யுச்ச லக்ஷ்மிஸ் ச த்ருஷ்டா குத்ர கதா ஸ்திரா
xxxxx
டிசம்பர் 12 சனிக் கிழமை
ஒருவருக்குப் பணம் இல்லாவிடினும் அவருடைய செல்வாக்கே பெருஞ் செல்வமாகும் – கஹாவத் ரத்னாகர்
xxxx
டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை
ஒருகாலத்தில் செல்வ ச் செழிப்புடன் இருந்தவன் பணக்காரனிடத்தில் கைகட்டி நிற்பானா – வால்மீகி ராமாயணம் 2-8-35
சம்ருத்த்தார்த்தஸ்ய நாஷ்டார்த்தோ ஜிவிஷ்யதி காதம் வஸே
xxxxx
டிசம்பர் 14 திங்கட் கிழமை
செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு- குறள் 752
ஒரு ஆளுக்கு பணம் இருந்தால் எல்லாரும் அவரை இந்திரனே சந்திரனே என்று தலை மேல் வைத்துக் கூத்தாடுவர்.
XXX
டிசம்பர் 15 செவ்வாய்க் கிழமை
பொருள் என்னும் பொய்யா விளக்கு -குறள் 753
பணம் என்பது நந்தா விளக்கு- அணையாத விளக்கு
xxxx

டிசம்பர் 16 புதன் கிழமை MAARKAZI MONTH BEGINS
அறன் ஈனும் இன்பமும் ஈனும் …… தீதின்றி வந்த பொருள் –குறள் 754
நல்ல வாயில் சம்பாதித்த பணம் இன்பத்தையும் அறத்தின் பயனையும் கொடுக்கும்
xxx
டிசம்பர் 17 வியாழக் கிழமை
அரசனுக்கு கிடைக்கும் செல்வம் – 1.வரிகள், 2.திறை .3.சுங்கம் -குறள் 756
xxxx
டிசம்பர் 18 வெள்ளிக் கிழமை
அன்பு பெற்று எடுத்த குழந்தையின் பெயர் அருள்; அதை வார்ப்பது பணம் என்னும் செவிலித் தாய் ஆவாள் -குறள் 757
xxx
டிசம்பர் 19 சனிக் கிழமை
நிறைய பணம் சம்பாதித்தல் அறமும் இன்பமும் எளிதில் கிடை க்கும் – குறள் 760
xxx
டிசம்பர் 20 ஞாயிற்றுக் கிழமை
கையில் பொருள் இருந்து காரியத்தைத் தொடங்கினால் , மலை மீது ஏறிக்கொண்டு யானைகள் சண்டை இடுவதை பார்ப்பது போல ஜாலியாக இருக்கலாம் – குறள் 758
xxx

டிசம்பர் 21 திங்கட் கிழமை
பொருள் அல்லவரை பொருளாகச் செய்யும் பொருள் – குறள் 751
மதிக்க முடி யாத ஆளையும் மதிக்கவைத்துவிடும் செல்வம்
xxx
டிசம்பர் 22 செவ்வாய்க் கிழமை
துணிவும் திறமையும் உள்ளவரிடத்தில் லக்ஷ்மீ வசிக்கிறாள் – ஹிதோபதேசம் 3-116
நயே ச சவுர்யம் ச வசந்தி சம்பதஹ
xxx
டிசம்பர் 23 புதன் கிழமை
அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ நீண்ட காலம் நீடிக்காது – ஹனுமான் நாடகம்
ந பவந்தி சிரம் ப்ராயஹ சம்பதோ விபதோபி வா
xxx
டிசம்பர் 24 வியாழக் கிழமை
தனேன வர்த்ததே த்ருஷ்ணா – பாரத மஞ்சரி
பணம் பேராசையை வளர்க்கிறது
xxx

டிசம்பர் 25 வெள்ளிக் கிழமை VAIKUNDA EKADASI
அலிகளிடத்தில் செல்வம் சேராது –பாரத மஞ்சரி
ந க்லீ பாஹா ஸம்பதாம் பதம்
xxx
டிசம்பர் 26 சனிக் கிழமை
பணம் இருந்தால் குணம் இருப்பது அரிது – பழமொழி
தனவத்சு குணா ந த்ருஷ்யந்தே
xxx
டிசம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை
பணம் பணத்தோடு சேரும் – கஹாவத் ரத்னாகர்
தனாதேவ தனம் பவேத்
xxx
டிசம்பர் 28 திங்கட் கிழமை
அருள், அன்பு ஆகிய இரண்டுடன் வராத செல்வத்தை உடனே நீக்கி விட்டு- குறள் 755
xxx
டிசம்பர் 29 செவ்வாய்க் கிழமை
லக்ஷ்மீ ம் வினா நாதரஹ – பழமொழி
பணம் இல்லாவிடில் மதிப்பும் இல்லை
xxxx

டிசம்பர் 30 புதன் கிழமை ARUDRA DARISANAM
லக்ஷ்மியை தேடிச் சென்றால் அவள் கிடைக்க மாட்டாள்; அவள்
நம்மை நாடிவந் தால் கிடைப்பாள் – சாகுந்தலம் 3-12
லபேத வா ப்ரார்த்தயிதா ந வா ஸ்ரியம் ஸ் ரியா துராபஹ கதமீப் சிதோ பவேத்
xxxx
டிசம்பர் 31 வியாழக் கிழமை
செறுநர் செருக்கறுக்கும் எ ஃகதனிற் கூ ரியது இல் – குறள் 759
பொருள் என் பது பகைவரின் செறுக்கை வெட்டி முறிக்கும் வாள் ஆகும் .
xxx
ஜனவரி 1 வெள்ளிக் கிழமை ,2021
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

tags- லக்ஷ்மீ , செல்வம் , பொன்மொழிகள், டிசம்பர் 2020
Raman Narasimhachariar
/ November 29, 2020good collection on wealth