38,000 கல்வெட்டுகளில் 1100 சுவையான வானியல் செய்திகள் (Post No.8977)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8977

Date uploaded in London – –28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெங்களூரில் வானியல் காட்சிக் கூடம் (PLANETARIUM) இருக்கிறது. இதில் கல்வி கற்பிப்பவராகச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்மணி டைரக்டராக உயர்ந்து அண்மையில் 2017-ல் ஓய்வும் பெற்றுவிட்டார். இவர் பட்டதாரிகளுக்கு வானியலும்,  வான் பவுதீக இயலும் கற்பித்து வந்தார். இவருடைய பார்வை வரலாறு பக்கமும் திரும்பியது. இதன் விளைவு? 38,000 கல்வெட்டுகளில் இருந்து 1100க்-கும் அதிகமான வானியல் செய்திகளை சேகரித்து ஆராய்ந்து வருகிறார்.

கிரஹணங்கள் , கிரஹச் சேர்க்கைகள், தக்ஷிணாயன , உத்தராயண புண்ய காலங்கள் புகழ் பெற்ற அமாவாசை , பவுர்ணமி விழா கொண்டாட்டங்கள், வருஷப் பிறப்புகள் என்று சூரிய, சந்திர, கிரஹ நிலைகள் பற்றிப் பேசும் எவ்வளவோ செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன.

கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்த செய்திகள் பற்றியவையே. ஆயினும் முக்கியமான கிரஹ நிலைகள், தேதி , மாதம், வருஷம் ஆகியனவும் அவற்றில் உள்ளன. இதுவரை இவைகளை ஒட்டுமொத்தமாக ஆராயவில்லை. இப்பொழுது ஷைலஜா அந்தப் பணியை செய்துவருகிறார்.

கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகள் இவருடைய கவனத்தை ஈர்த்தபோதிலும் , தென் கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, நேபாளம், இப்போதைய பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா முதலிய  நாடுகளில் உள்ள சம்ஸ்கிருத, தமிழ் ,கன்னட, பிராகிருத கல்வெட்டுகளையும் இவர் ஆராய்கிறார்.

இந்தியாவில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அசோகர் காலத்தில் இருந்து நிறைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவருக்கு கே.ஜி. கீதா என்பவரும் உதவி வருகிறார். இருவரும் பர்மா வரையுள்ள கன்னட கல்வெட்டுகளை நுணுக்கமாக ஆராய்கின்றனர். கன்னட மொழியைப் பொறுத்தவரையில் கி.பி.450 தேதியிட்ட கல்வெட்டுதான் பழமையானது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ் நாடு ஆகிய இடங்களில் பரவிக் கிடைக்கின் றன.

கி.பி.754-ல் நடந்த பூரண சூரிய கிரஹணம் பட்டடக்கல் கல்வெட்டில் பதிவாகியுள்ளது.1665–ம் ஆண்டில் மைசூர் மஹாராஜா ‘துலா புருஷ தானம்’ செய்தார். அதாவது அவருடைய எடைக்குச் சமமான தங்கத்தை தானம் கொடுத்தார். அப் போது சூரிய கிரகணமும் ஆறு கிரஹச் சேர்க்கையும் நடந்ததே இதற்கு காரணம்.

இந்த நிகழ்சசிகளையும் வானியல் குறிப்புகளையும் ஆராய்வதன் மூலம் புதிய வரலாற்றுச் செய்திகள் கிடைக்கலாம். பழைய புதிர்கள் விடுவிக்கப்படலாம்.

ஆதாரம் – மீரா பரத்வாஜ் , நவம்பர் 22ம் தே தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் NEW INDIAN EXPRESS 22-11-2020 நாளேட்டில் எழுதிய கட்டுரை.

–SUBHAM—

tags — கல்வெட்டு, சுவையான,  வானியல் செய்திகள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: