
Post No. 8997
Date uploaded in London – –4 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“டுக்ருஞ் கரனே” என்ற பாணினி சூத்திரத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தம் துதியில் முதல் பாடலில் பாடியதை செப்டம்பர் 21 பதிவில் குறிப்பிட்டேன்.(பாணினி சூத்ரம் 1-3-5 விளக்கம்- தாது பாடம் 8-16)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ன வேறுபாடு என்பதை மற்றொரு சூத்திரத்தில் விளக்குகிறார்.
சூத்திரம் 1-2-56-ல் எதை கற்பிக்க வேண்டும், எது கற்பிக்காமலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதை விளக்குகிறார்.இதற்கு பாஷ்யக்காரர் (உரை ஆசிரியர்) விளக்கம் தருகிறார்.,
“ராஜ புருஷன் ஆனய” என்றால் ராஜ புருஷனை அழைத்து வா என்று பொருள். படித்தவனாக இருந்தால் இது ராஜாவினிடம் வேலை பார்க்கும் ஆள் என்பது விளங்கும். அவன் ராஜாவிடம் வேலை பார்க்கும் ஆளை அழைத்து வருவான்.இலக்கணமே அறியாதவனாக இருந்தால் ராஜாவை அழைத்து வா என்று நினைத்து பிரமித்து நிற்பான் . ராஜாவை எப்படி நான் அழைத்து வருவது என்று திகைத்து நிற்பான்.
இதிலிருந்து சொற்களின் பொருள் அதன் வழக்கிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ற உண்மை புலனாகிறது .
இதற்கு அடுத்த சூத்திரத்தில் பாணினி இன்னும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.
காலம் பற்றிய விஷயத்துக்கு விதியமைப்பதும் தேவை இல்லை (1-2-57) என்று செப்புகிறார். இலக்கணமே கற்காதவர்கள் கூட இன்று இதைச் செய்யவேண்டும், நேற்று அதைச் செய்தேன் என்று இலக்கணப்படி பேசுகிறார்கள் . அதனால் இதற்காகத் தனி விதி அமைக்கத் தேவையில்லை என்கிறார். பாணினி மேலே குறிப்பிட்டவற்றை வரையறுக்கவில்லை என்பது குறிப்பிட்டது தக்கது.
tags– ராஜ புருஷன், ஆநய ,
–subham–