ஸ்ரீ அரவிந்த ரகசியம்! (Post No.8998)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8998

Date uploaded in London – – 5 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 5 அரவிந்தர் சமாதி தினம்

ஸ்ரீ அரவிந்த ரகசியம்!

ச.நாகராஜன்

1

மிக பிரமாண்டமான தெய்வீக அறிவும் அருளும் ஸ்ரீ அரவிந்தர் உருவில் பூமியில் அவதரித்தது.

அவரது அருளுரைகள், சம்பாஷணைகள் ஆகிய அனைத்தும் நமக்கு உள்ளது உள்ளபடி கிடைத்துள்ளன.

அரவிந்த இலக்கியம் மிகப் பரந்தது. அதை ஆழ்ந்து உன்னிப்பாகக் கற்றால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

அரவிந்தருடன் அன்றாட வாழ்வில் நெருக்கமான சிஷ்யர்களாக பலர் இருந்துள்ளனர்.

நிரோத்பரன், சம்பக்லால்,  நளினி காந்த குப்தா (நளினி தா என்று அனைவராலும் அறியப்படுபவர்), போன்றோர் தங்களின் அனுபவங்களை எழுதி வைத்துள்ளனர்.

அரவிந்தர் அவதரித்த நாள் : 15, ஆகஸ்டு, 1872

அரவிந்தர் சமாதி தினம் : 5, டிசம்பர் 1950

அரவிந்தர் புதுச்சேரியை அடைந்த நாள் 4, ஏப்ரல், 1910

படிக்கத் தெவிட்டாத அரவிந்த இலக்கியத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!

சில துளிகளை இங்கே காண்போம் : உத்வேகம் பெற்று முழுவதையும் படிக்க முனைவதற்காக!

2

ஸ்ரீ அரவிந்தர் :

It is a fact that I was hearing constantly the voice of Vivekananda speaking to me a fortnight in the jail in my solitary meditation and felt his presence.

சிறைச்சாலையில் எனது தனிப்பட்ட தியானத்தின் போது விவேகானந்தரின் குரலை இரு வாரங்கள் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். அவர் என் முன் இருப்பதையும் உணர்ந்தேன்.

3

ஸ்ரீ அரவிந்தர் :

Put yourself with all your heart and all you strength into God’s hands. Make no conditions, ask for nothing, not even for siddhi in the yoga, for nothing at all except that in you and through you His will may be directly performed.

உன்னை முழுமையாக உன் இதயத்துடனும் முழு வலிமையுடனும் கடவுளின் கையில் ஒப்படை. ஒரு நிபந்தனையையும் விதிக்காதே. எதையும் கேட்காதே – யோக சித்தியைக் கூடத் தான்! ஏனெனில் உன் மூலமாகவும் உன்னிலும் அவனது விருப்பம் நேரடியாகவே நடைபெறும்.

4

10, டிசம்பர், 1938

மாலை ஏழு  மணி.

டாக்டர் மணிலால் : நீங்கள் ஏன் பாண்டிச்சேரியை உங்கள் சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ அரவிந்தர் : ஏனெனில் ஒரு கட்டளையினால், ஒரு ஆதேஷினால். இங்கு வருமாறு ஒரு குரலினால் கட்டளையிடப்பட்டேன்.

16/17 டிசம்பர் 1938

நிரோத்பரன் : அன்றொருநாள் நாம் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் வேதத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினீர்கள். வேதம் மற்றும் உபநிடத மந்திரங்கள் எப்படி இயற்றப்பட்டன என்பதை அறிய நான் விரும்புகிறேன். உண்மையாகவே அவை ரிஷிகளால் கேட்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உள்முகமாக கேட்கப்பட்டவையா அவை?

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், அவை உள்ளிருந்து கேட்கப்பட்டவையே. சில சமயம் ஒரு வரியோ அல்லது ஒரு பகுதியோ அல்லது ஒரு முழுக் கவிதையோ ஒருவரால் கேட்கப்படுகிறது. சில சமயம் அவை தானாகவே வருகின்றன. மிகச் சிறந்த கவிதை அப்படித்தான் எப்போதுமே எழுதப்படுகிறது.

20, டிசம்பர் 1938

டாக்டர் சவூர் (DR Savoor) :சில யோகிகள் உடலில் ஏற்படும் வலியையும் கஷ்டத்தையும் போக்க, அதிலிருந்து விடுபட, சமாதி நிலைக்குச் செல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ அப்படிச் செய்யாமல் வலியைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

நிரோத்பரன் : ராமகிருஷ்ண(பரமஹம்ஸர்) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், யோகிகள் சமாதி நிலையை எய்தி சம்ஸ்காரத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம்.  ஆனால் வலியிலிருந்து நிவாரணம் பெற ஒருவர் சமாதிக்குச் செல்வதால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, ஒருவர் வியாதியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தால் அது அதை ஒருவிதமாக ஏற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு முறை மிகத் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது ராமக்ருஷ்ணர் கேசவ சேனரிடம் தனது உடல் ஆன்மீக முன்னேற்றத்தின் அழுத்தத்தினால் உடைந்து போகிறது என்றார். ஆனால் ஆன்மீக முன்னேற்றமானது எல்லா சமயத்திலுமே வியாதியில் கொண்டு விடும் என்பதில்லை.

நிரோத்பரன் : ராமகிருஷ்ணர் நினைத்திருந்தால் அவர் வியாதியைத் தடுத்திருக்கலாம், இல்லையா?

ஸ்ரீ அரவிந்தர்: ஆம், ஆனால் அவர் தனது இச்சையை உபயோகிப்பதிலோ  அல்லது வியாதி குணமாக தெய்வீக சக்தியிடம் பிரார்த்தனை செய்வதிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

நிரோத்பரன்: அவர் தனது சீடர்களின் பாவத்தினால் (sins) தான் கான்ஸர் நோயை அடைந்தார் என்று கூறப்படுகிறதே.

ஸ்ரீ அரவிந்தர் : அதை அவரே சொல்லி இருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். சீடர்களின் விஷயங்களை குரு தான் ஏற்க வேண்டும்.

(சம்பாஷணை நீண்டு தொடர்கிறது)

7

இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பற்றி அரவிந்தரிடம் அணுக்கத் தொண்டர்கள் பேசி தெளிவு பெற்றிருக்கின்றனர்.

அனைத்தையும் நிதானமாகப் படித்தால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் அறியலாம்; சில புரியாத புதிர்களுக்கு விடைகளையும் காணலாம்.

அரவிந்தரைக் கற்போமாக; ஆன்ம உயர்வு பெறுவோமாக!

***

ஆதாரம் : அரவிந்த இலக்கியத்தில் பல நூல்கள்

1.Reminiscences and Anecdote of Sri Aurobindo my M.P.Pandit

2.Prayer and Mantra Published by Sri Aurobindo Society, Pondicherry -2

3. The Incarnate World – Talks with Sri Aurobindo – Nirodbaran

tags– அரவிந்த ரகசியம், அரவிந்தர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: