
Compiled BY KATTUKKUTY
Post No. 9018
Date uploaded in London – – 10 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஊத்திச்சூடியும், சில இடக்கு– மடக்கு விஷயங்களும்!!!
(தொகுப்பு —கத்துக் குட்டி)
ஊத்திச்சூடி
அ – அதிகமாய் குடி
ஆ – “ஆப்”அடித்தால் ஆடாதே
இ – இறங்கும் போது எரியும்
ஈ – ஈ விழாமல் பார்த்துக்கொள்
உ – உளறாமல் பேசு
ஊ – ஊர் வம்பை இழுக்காதே
எ – எதிரில் இருப்பவனிடம் கவனம் வை
ஏ – ஏமாறாதே
ஐ – எந்த ஐட்டங்களையும் மிச்சம் வைக்காதே
ஒ – ஒரே “பிராண்டா” சாப்பிடு
ஓ – ஓவரனால் அப்படியே படு

xxxxx
சாப்பிட முடியாத கனி. பால்கனி
சுவரில் அடிக்க முடியாத ஆணி பிரியாணி
ஆபத்தான சிட்டி. எலக்ட்ரிசிட்டி
அதிர்ஷ்டம் இல்லாத நகரம். லக் “நோ”
தொங்க விட முடியாத திரை. குதிரை
டெய்லருக்கு பிடிச்ச காய். “கத்தரி”க்காய்
எப்போதும் சிரிக்கும் பூச்சி. ஈ
உட்கார முடியாத கடை. சாக்கடை
கையுடன் கூடிய காய். முருங்”கை”க்காய்
அழைக்கும் காய். “வா”ழைக்காய்
அசைவக்காய். “ முட்டை”கோஸ்
குத்தும் காய். முள்ளங்கி
குடிமகனுக்குப் பிடித்த காய். “பீர்”கங்காய்
போர்முரசு கொட்டும் காய். “சேனை”க்கிழங்கு
இரக்கமுள்ள கிழங்கு. “கருணை”கிழங்கு
டை கட்டிய காய். வெண்”டை”க்காய்
காயம் பட்ட காய். வெங்” காயம்”
கோபப்படும் காய். தக்”காளி”
தின்ன முடியாத காரம். கடிகாரம்
மனிதனை வாட்டி வதைக்கும வலை. கவலை
சாப்பிடும் பாத்தி. சப்பாத்தி
கடலில் ஓடும் பல். கப்பல்
இலவசம் கொடுக்காத பாரி வள்ளல். வியாபாரி
சாப்பிடும் கல். பொங்கல்
பல் இருந்தும் கடிக்க முடியாதது. சீப்பு
பல் இல்லாமலே கடிப்பது. செருப்பு
இருக்க இருக்கக் கூடுவது. வயது
இருக்க இருக்கக் குறைவது. ஆயுள்

tags – ஊத்திச்சூடி, இடக்கு- மடக்கு, விஷயம்
***