
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9028
Date uploaded in London – – 12 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இசையும் இசையின் கதையும்!
BY Katukutty
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

பொய்யா மொழிப்புலவர், தெய்வப்புலவர், திருவள்ளுவர் ஒரு் செய்தியைச் சொல்ல ஒரு வார்த்தையை ஐந்து முறை உபயோகப்படுத்தியுள்ளார் என்றால் அதன் பெருமை தான் என்னே!!!
ஐம்புலன்களில் மிகவும் நுட்பமானது “செவி”.
மற்ற நான்கு புலன்களான மெய் – அதிகம் வேலை செய்தால் உடலில்
வலி உண்டாகும். கண் – வெகு நேரம் பார்த்தால், கண் எரியும்.
வாய் – பேசினால் தொண்டை வலிக்கும். மூக்கு – வெகு நேரம் வாசனை அல்லது
துர் நாற்றம் பிடித்தாலோ, கேட்கவே வேண்டாம்.
மூக்கு எரியும், தொண்டை கமரும்.
காது – எவ்வளவு நேரம் கேட்டாலும் சோர்வடையாது.!!!
இந்தக் காதினால் நாம் ஒருவருக்கொருவர் விஷயங்களை பரிமாறிக்
கொண்டு தான் உலகமே நடக்கிறது!!!
காதினால் கேட்டு பயனடையும், வழியை இன்பமடையும் வழியை, நமது முன்னோர்கள் முதன் முதலில் கண்டு பிடித்தார்கள் 5000 வருடங்களுக்கு முன் “வேதம்” மூலமாக!!! இதுதான் இசையின்ஆரம்பம்!!! . மிகப்பழமையான
“ரிக்”வேதம், “உதாத்தம்”,”அனுதாத்தம்”, “ஸ்வரிதம்”, தீர்க்க ஸ்வரிதம் என்று நான்கு உச்சரிப்பு அளவினைக் கொண்டு ஓதப்பட்டது..பின்னர் அந்த ரிக் வேதத்தை வைத்து “சாம வேதம்”பாடப்பட்டது. இப்படியாக வளர்ந்தது தான் “இசை”!!!
ஒலி எப்படி உண்டாகிறது???
”ஒலி”ஒரு பொருளின் அசைவினால், காற்று மூலமாக உண்டாவதாகும்.
இதை இரண்டாக பிரிக்கலாம்.
ஒன்று இசை, மற்றொன்று இரைச்சல்.
இசை என்றால் என்ன ???
இசை என்றால் கட்டுப்பாடான, ஒழுங்கான, இனிமையான “ஒலி”ஆகும். உள்ளத்திற்கும், உணர்விற்கும் இன்பத்தை செவி மூலமாக கிடைக்கும் ஒலியையே “இசை “என்கிறோம்.. இந்த இசைக்கு
ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, ஏற்றத்தாழ்வுகள், மேலும் அழுத்தமும் உண்டு.
இரைச்சல் – ஒழுங்கற்ற, கட்டுப் பாடில்லத , அதிகமான ஒலியுடன்
செவிக்கும், உணர்வுக்கும் எரிச்சல் உண்டாக்குவதே “இரைச்சல்”
(NOISE) ஆகும்.

MUSIC – விளக்கம்
இந்த “MUSIC” என்ற சொல் கிரேக்க இசை தேவதையான “ MUSES”என்ற பெயரிலிருந்து வந்தது. பின்பு அது ஆங்கிலத்தில்
“MUSIC” என்று ஆயிற்று.
நம் வாழ்க்கையும் இசையின் பலன்களும்
நம் வாழ்க்கையே தாயினுடைய தாலாட்டு பாடலுடன் தான் ஆரம்பிக்கிறது.
பள்ளியில் பாடங்களுடன் இசையும்,சில சமயம் பாடங்களையே இசை மூலமாகவும் சொல்லிக் கொடுக்கும் பழக்கமும் உள்ளது்
இசை மூலமாக நினைவாற்றல் பெருகுகிறது.
மாணவர்களின் மனது ஒருமைப்படுகிறது.
கடினமான வேலை செய்பவர்களும், இசையினால், தங்கள் வலியை
போக்கிக் கொள்கிறார்கள்
மன இறுக்கம் கொண்டவர்களுக்கும், உடல் நலம், மனநலம், குன்றியவர்களுக்கும், இசை ஒரு அருமையான மருந்தாகும்.
இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இசையே மருந்து.
மனைவியை விட்டு பாடச்சொல்லி, மன அமைதி பெற்று
தூங்குவார்கள் பெரியவர்கள். தூங்காமல் அடம்பிடிக்கும்
குழந்தைகளையும் தூங்க வைக்கும் பாட்டு.
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டிற்கென்றே பாடல்களும்
தோத்திரங்களும் வைத்திருக்கிறார்கள்
காலையில் கடவுளை சுப்ரபாதம் முதல், மதியம் பூஜை, இரவு
பள்ளியறை பூஜை முடிய,பிரார்த்தனை,வேண்டுகோள்,பதிகங்கள்
பாடி இறை வழிபாட்டுடனேயே வாழ்க்கை முடிகிறது.
“இறை வணக்கம்” பாடாத கூட்டங்களே கிடையாது!!!
கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம்……பெண்பார்க்க
வந்தவர்கள் முதலில் கேட்கும் கேள்வி “பெண்ணுக்கு பாடத்
தெரியுமா”???கல்யாணப் பாட்டுக்கள் ஏராளம்! ஊஞ்சல், நலுங்கு
சாந்தி முகூர்த்தம் வரை ஒரே நக்கலும் கேலியும் தான்……
கற்பனையின் எல்லைக்கே போய்விட்டார்களோ என்று தோன்றும்
அளவுக்கு அந்தபாடல்களில் ராகங்களும், அர்த்தங்களும்
இருக்கும். சீமந்தம், வளைகாப்பு, முதலியவற்றிலும் பொருள் செறிந்த பாடல்கள் உண்டு.
இறந்தாலும் இறந்தவரின் புகழைப்பாடும் “ஒப்பாரி”, பாடி,
கொட்டுடனேயே அடக்கம் செய்வார்கள்.
பெண்களுக்கென்றே இசையைப் படைத்தது போன்று பெண்களின் குரல் வளையை அப்படி படைத்திருக்கிறான் ஆண்டவன்!!!!
பாடுவதற்கென்றே உண்டான விழா தான் “நவராத்திரி” !!!
கொலுவுக்கு வரும் பெண்களோடு துணைக்கு வரும்ஆண்களும்
வித்யாசமின்றி பாடக்கூடிய பாடல் திருவிழா தான் “நவராத்திரி”

மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம், குளிரை பொருட்படுத்தாமல் அதி காலையில் தெருவெங்கும் பஜனை பாடல்கள்.இரவு எல்லா சபாக்களிலும் பாட்டுக்கச்சேரி……. பாட ஆரம்பித்தவர் முதல் பத்ம பூஷன் வாங்கியவர்களின் கச்சேரி வரை நடக்கும்!!!
அதில் பாட்டு கேட்க வந்தவர்கள் பாதி, விதம் விதமான பண்டங்கள்
விற்கும் ஓட்டல்களில் சாப்பிட வந்தவர்கள் மீதி!!!
இன்றைய இசையின் “மெயின்” காரணமே சினிமா!!! திரைப்படம்
தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை இதை ஆட்டிப் படைப்பது இசைதான்!!!ஆரம்பத்தில 50 அல்லது 60 பாடல்களுடன்
ஆரம்பித்த சினிமா தற்சமயம் 7 அல்லது 8 பாடல்களுடன் நிற்கிறது. பாட்டே பிரதானம் என்று ஆரம்பித்த சினிமா இப்போது நடனத்தையும் சேர்த்துக் கொண்டது. கர்நாடக இசையில்ஆரம்பித்த சினிமா,வட இந்திய இசைக்குசென்று, மேற்கத்திய இசைக்கு சென்று “ஆட்டம்” போட்டது. சாதாரண பாடல்களை விட்டு
“குத்தாட்டத்தையே “ மக்கள் ரசிக்கின்றனர்!!! குடித்துவிட்டு ஆடும் பாடல்கள்
“யு ட்யூபில் ”ஒரு கோடி ஹிட்ஸ்” என்று. பெருமையுடன் பீற்றிக் கொண்டிருக்கிறது!!!
தெருவுக்குத் தெரு காளியம்மன், மாரியம்மன் போன்ற
தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கஞ்சி ஊற்றும் திருவிழாவில்
குத்தாட்ட பாடல்கள் இல்லாமல் நடை பெறுவதே கிடையாது.!!!
பாவம் தெய்வங்கள்!!!! எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனவோ ???
ஒவ்வொரு திருமண ரிஸப்ஷன்களிலிலும், கட்சி மீட்டிங் ஆரம்பகளிலும் இந்த “குத்தாட்ட கச்சேரி”நடக்கிறது!!! சில சமயங்களில் “குடி மகன்கள்”, காரணமாக போலீஸ் தடியடியும் உண்டு!!!
TO BE CONTINUED…………………………..

tags — இசை, கதை,