
Post No. 9027
Date uploaded in London – –12 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்திலும் யஜுர் வேதத்திலும் குங்கிலியம் குறிப்பிடப்படுகிறது. பெரிய புராணத்தில் குங்கிலியக் கலய நாயனார் கதை வருகிறது . உலகெங்கிலும் யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களில் குங்கியப் புகை போடப்படுகிறது. உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் குங்கிலியம் இருக்கிறது. இதன் மருத்துவப் பயன்களோ சொல்லி மாளாது. மூட்டு வலியிலிருந்து இருதய நோய் வரை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சர்வ ரோக நிவாரணி குங்கிலியம் ஆகும்.

இதுபற்றிய மர்மம் என்ன?
சம்ஸ்கிருதத்தில் குக்குலு ! தமிழில் குங்கிலியம்!!
அதர்வண வேதம் கி.மு. 1000க்கு முந்தியது. அப்போது வேறு எந்தமத நூல்களும் கிடையாது. இந்து மத நூல் மட்டுமே உலகில் இருந்தது.
பெரிய புராணத்தில் குங்கிலியக் கலய நாயனார் பற்றி இரண்டு அபூர்வ நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் திருஞான சம்பந்தர் காலத்தவர். அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆக 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரி வரை குங்கிலியம் பயன்படுத்தப்பட்ட நாடு பாரதம். அந்தக் காலத்தில் பாரதம் போல பெரிய நாடு எதுவும் உலகில் இல்லவும் இல்லை. பெயரோ தமிழும் சம்ஸ்கிருதத்திலும் ஒன்று !
சம்ஸ்கிருதத்தில் குக்குலு !தமிழில் குங்கிலியம் !
இரண்டும் நெருக்கம் என்பதை பெயரிலும் காண்கிறோம். கிமு.600-ல் அதாவது இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள் இதை விதந்து ஒதுகின்றன.
இன்றும் பூஜையின் கடைசியில் தூப, தீபம் காட்டுகையில் ‘தசாங்கம் குக்குலோ பேத’மென்ற மந்திரத்தைச் சொல்லி குங்கிலியப் புகை போடுகிறோம் .
இது இந்தியாவிலிருந்து உலகம் முழுதும் ஏற்றுமதியானதை 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நூலும் செப்புகிறது. அதன் பெயர் பெரிப்ளூஸ் ஆப் எரித்ரியன் ஸீ (Periplus of Erythrean sea )என்பதாகும். இது கப்பல் பயண அட்டவணை. சிந்து நதித் துறைமுகமான பார்பாரிகத்தில் இருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கும் , பாபிலோனியாவுக்கும் குங்கிலியம் சென்றது.
இப்போது இதுபற்றிய மர்மத்தைத் துலக்குவோம். இந்தப் பெயர் சம்ஸ்க்ருதம் போல இல்லையே என்று சில வெள்ளைத் தோல்கள் வழக்கம்போல ஒரு சந்தேகத்தை எழுப்பின. ஏனெனில் அவர்கள் மத வழிபாட்டுத் தல ங்களில் அதர்வண வேதம் சொல்லும் பொருள், பெரிய புராணம் சொல்லும் பொருள் இருப்பதை ஒத்துக்கொள்ள அவர்கள் மனம் இடம் தரவில்லை. ஆயினும் குங்கிலியம் என்ற தமிழ் பெயரும் நமக்குத் துணை வருகிறது .

குங்கிலியம் என்றால் என்ன ?
குங்கிலியம் என்பது ஒரு மரப் பிசின். அதாவது கோந்து. அந்தச் சொல்லும் ‘குங்’ என்பதிலிருந்து வந்ததே .
மரத்தின் பட்டையில் ரப்பர் பால் எடுப்பதற்கு வெட்டு (cut) போடுவது போல வெட்டுவார்கள் அதிலிருந்து வரும் பாலை வடித்துக் காய்ச்சி குன் மற்றும் கற்பூர தைலம், டர்பன்டைன் முதலியன எடுப்பர். இது பல வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன. ஆயினும் தேவதாரு(Deodar, Sal) மற்றும் குங்கிலிய மரத்தில் இருந்து கிடைப்பது சிறப்பு வாய்ந்தவையாகும்
குங்கிலியம் அல்லது எருமைக் கண் குங்கிலிய மரத்தின் பெயர் காமிப்போரா விக்கட்டி.
Commiphora wightii, Commiphora mukul
இது பெருமளவு விளையும் இடம் ராஜஸ் தான் , குஜராத் முதலிய மாநிலங்கள் .
இந்தியாவுக்கு வெளியே, அரேபியா ஆப்பிரிக்காவின் கிழக்கில் உள்ள சோமாலியா முதலிய நாடுகளாகும். பூகோள ரீதியில் பார்த்தால் ஒன்றையொன்று கடல் வழியாக அணுகுவது மிக சுலபம் என்பதைக் காணலாம். ஆக இந்தியாவில் இருந்து இது பல நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.
வெவ்வேறு தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த மரங்களில் இருந்து இது கிடை ப்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகையால் ஒருவரைப் பார்த்து மற் றொருவர் கற்றுக் கொண்டிருக்கும் வாய்ப்பும் உண்டு.
இந்துக்களைப் போல உலகில் நறுமணப் புகையைப் பயன்படுத்துவோர் கிடையாது. அகில் புகை பற்றிய குறிப்புகள் 2000 ஆண்டு சங்க இலக்கியத்தில் நிறையவே உண்டு. சாம்பிராணி, குங்கிலியப் புகையும் இன்றுவரை பயன்படுகிறது

Bdellium
இதற்கு எபிரேய/ ஹிப்ரு மொழியில் பிடெல்லியம்(Bdellium) என்று பெயர். ஆனால் அவர்களுடைய பழைய நூலில் உள்ள இச் சொல் இது குங்கிலியம் போன்ற ரத்தினைக் கல்லைக் குறிக்கிறதா அல்லது குங்கிலியத்தைக் குறிக்கிறதா என்ற சர்ச்சை இன்றுவரை நீடித்து வருகிறது. நாமோ சம்ஸ்கிருத மந்திரத்திலும் பெரிய புராணப்பா டலிலும் இன்று வரை சொல்லி வருகிறோம்.
ப்ளினி (Pliny) என்பவரும் சிறந்த குங்கிலியம் இந்தியாவிலிருந்து வருகிறது என்கிறார்
இந்த மரத்துக்கே (Indian Bdellium Tree) இந்திய பிடெல்லியம் மரம் என்று கலைக்களஞ்சியங்களும் சொல்லும்
குக்குலு பற்றி அதர்வ வேதத்தில் வரும் இடங்கள் :-
AV 19-38-2
AV 2-36-7
தைத்ரீய சம்ஹிதையிலும் / யஜுர் வேதம் இருக்கிறது. இது அதர்வண வேதத்துக்கும் முன்னதாவும் இருக்கலாம் YV 6-2-8-6 பின்னர் பல வேத நூல்களில் வருகின்றது.
அதர்வண வேதக் குறிப்புதான் சிறப்புமிக்கது. ஏனெனில் ‘குக்குலு கடல் மூலமும் நதி மூலமும் வருகிறது’ என்பதால் ஏற்றுமதி பற்றிய குறிப்பு தொனிக்கிறது. கடல் என்பதால் இது ஆம்பர் (Ambergris??) எனப்படும் தென் மெழுகையும் குறிக்கலாம். அதுவும் சென்ட் (Scent, Perfume) முதியலிய வாசனைத் திரவியங்களில் பயன்படுகிறது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி வேதத்தில் இருப்பது நமது கடல் வணிகத்தையும் ஆயுர்வேத , வாசனைத் திரவிய தொழில் (Perfume Industry) அறிவையும் காட்டுகிறது
1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குங்கிலியாக் கலய நாயனாரின் வாழ்க் கையில் இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்தன . அவற்றைக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் காண்போம்
தொடரும் …….. Tags –
Tags – குங்கிலியம் அதர்வண வேதம், பாபிலோனியா , குக்குலு
