
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9045
Date uploaded in London – – 17 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மகாபலியும் சுக்கராச்சாரியாரும்
மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம்
எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன்
என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன்.
வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து
கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது,
கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு
ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது.
அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்!
பிறகு நடந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே……
விவரம் தெரிந்தவர்கள் வெள்ளிக்கிழமை கண் ஆபரேஷன்
வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால்
பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை,
சுகர், அழகுக்கு உபயோகப்படுத்தபடும் ரசாயன கலவைகளினால் அரிப்பு , சொறி, சிரங்கு
ஜன்னேந்திரியத்தில் எல்லா கோளாறுகளும், கண்ணோய்களும்,பெண்களுடைய
மாதாந்திர கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெண்குஷ்டம் …………போன்றவை வரும்!

சுக்கிரன் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து சுக்கிரன் 6 கோடியே, 72 லட்சத்து 40மைல்கள்
சூரியனை ஒரு முறை சுற்றி வர – 225 நாட்கள்
பூமிக்கு சந்திரன் போல் சுக்கிரனுக்கு துணைக்கோள் கிடையாது.
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 23 1/2 மணி நேரம்
பகலிலும், தெரியக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்தான்!!! சூரியனுக்கு அருகில் இருப்பதாலும்,
சூரியனுடைய ஒளியை அப்படியே பிரதி பலிப்பதாலும் “விடி வெள்ளி”யாகவும்
“மாலை வெள்ளி”ஆகவும் மிளிர்கிறார் சுக்கிரன் !!!

சுக்கிரன் பற்றிய மற்ற விவரங்கள்
வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி,
பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு
மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி
ஜாதி – பிராமணர்
கோத்திரம் – பார்க்கவ
இனம் – ஸ்திரீ
நிறம் – வெண்மை
குணம் – ராஜஸம்
உத்யோகம் – மந்திரி
அதி தேவதை – இந்திரன்
ப்ரத்யதி தேவதை – சசி தேவி
திசாதிபதி – தென் கிழக்கு
பூதம் – நீர்
மொழி – ஸம்ஸ்கிருதம்
உடலில் தாது – இந்திரியம்
நாடி – சிலேத்துமம்
அவஸ்தை. நடு வயது
வாகனம் – கருடன்
இஷ்ட காலம் – பிற்பகல்
சுவை – புளிப்பு
சுபாவம் – சௌமியம்
தானியம் – மொச்சை
சமித்து – அத்தி
புஷ்பம் – வெண் தாமரை
ரத்தினம் – வைரம்
உலோகம் – வெள்ளி
மிருகம் – ஆண் யானை
பறவை – மயில்
ஸ்வரம் – நி
வஸ்திரம் – வெண் பட்டு
ஆசனம் – ஐங்கோணம்
ருது – வஸந்தம்
குணம் – சுபர்
தன்மாத்தரை -ரஸம்
எழுத்து – இ
தேசம் – காம்போஜம்
நிவேதனம் – நெய் சோறு
ஆட்சி – ரிஷபம், துலாம்

உச்சம் – மீனம்
நீசம் – கன்னி
நட்பு – சனி, செவ்வாய்
சமம் – குரு, சூரியன்
பகை – சந்திரன்
பார்வை- 7ஆம் பார்வை
சுக்கிர திசை – 20 வருடங்கள்

பரிகார ஸ்தலங்கள்
சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்)
கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம்,
நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை
நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம்
சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர்.
உடலில் சுக்கிரன் வலுவாக இருக்க உண்ண வேண்டிய உணவுப்
பொருள்கள்- பாதாம், சூரிய காந்தி விதை, சிவப்பு பூசணி விதை,
சுரைக்காய், நிலக்கடலை, பிஸ்தா……..
சுக்கிர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரப் ப்ரசோதயாத்
சுக்கிர ஸ்லோகம்
ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம் குரு
ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.
மேற் கண்ட ஸ்லோகங்களாலும், சுக்கிர ஸ்தலங்களுக்கு சென்று
வழிபடுவதனாலும், சுக்கிர தோஷங்கள் நீங்கி சந்தோஷகரமான வாழ்க்கை ,
இதைக் கேட்ட, tamilandvedas ப் பார்த்த அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
நன்றி , வணக்கம்.
tags- சுக்கிரன்-2, Venus-2,
***