
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9060
Date uploaded in London – – 21 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 12
Kattukutty
முடியும் ஆனா……….முடியாது
நம்ம கைகளை முன்னால் மடக்க முடியும் பின்னால் மடக்க முடியாது.
நம்ம கால்களை பின்னால் மடக்க முடியும் முன்னால் மடக்க முடியாது
Xxxx
இட்லி மாவை வைச்சு இட்லி போடலாம்,
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்,
ஆனா கடலை மாவை வைச்சு கடலை போட முடியுமா???
xxxx
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்,
ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா????
xxxx
என்னதான் ஸ்பீடா போனாலும், பிரண்ட் வீல், பேக் வீலை
முந்த முடியுமா???
xxxxx
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம், ஆனா ஓடர பஸ்ஸுக்கு முன்னாடி நிற்க முடியாது!
xxxx
உங்க உடம்புல கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஏதாவது ஒரு செல்லுலியாவது “சிம்”கார்டு போட்டு கால் பேச முடியுமா???
xxxxx
T நகர்ல போனா டீ வாங்கலாம், விருது நகர் போனா விருது
வாங்க முடியுமா???
xxxx
என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும் வெயிலடிச்சா திருப்பி
அடிக்க முடியுமா???
xxxx
வண்டியில்லாம டயர் ஓடும், ஆனா டயர் இல்லாம வண்டி ஓடுமா???
வாழை மரம் தார் போடும், அத வச்சு ரோடு போட முடியுமா???
xxxx
பல்வலி வந்தா பல்ல புடுங்கலாம், தலவலி வந்தா தலைய புடுங்க
முடியுமா???
xxxxx

இளநீர்ல தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு,
அதனால் இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில
ஸ்டரா போட்டு தண்ணி குடிக்கவும் முடியாது.
xxxx
என்னதான் லேடீஸ் ஹீரோ ஹோண்டா ஓட்டினாலும்
ஹீரோயின் ஹோண்டா ஆக முடியாது!!!
Xxxxx
என்னதான் பசங்க வெண்டக்காய் சாப்பிட்டாலும் “லேடீஸ் பிங்கர் “
“ஜெண்ட்ஸ் பிங்கர்” ஆக முடியாது!!!
Xxxxx
நிக்கும் ஆனா…….. நிக்காது!!!
பஸ் ஸ்டாண்டுல பஸ் நிக்கும், ஆட்டோ ஸ்டாண்டுல ஆட்டோ நிக்கும், ஆனா கொசு ஸ்டாண்டுல கொசு நிக்குமா???
xxxxxx
சைவம் ஆனா……… சைவம் இல்ல
பாலே அசைவம்ன்னு பால்சாப்பிடாதவர்கள் சைவம் அதாவது
“VEGANS”
நாங்க சைவம், ஆனா முட்டை சாப்பிடுவோம்….
நாங்க அசல் சைவம், முட்டை கூட சாப்பிட மாட்டோம்…..
xxxxx
வரும் ஆனா ……..வராது!!!
பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணினா பஸ் வரும்
புல் ஸ்டாப்புல வெயிட் பண்ணினா “புல்”வருமா???
“குவாட்டர்” கூட வராது!!!
xxxx
கொலுசு போட்டா சத்தம் வரும் ஆனா சத்தம் போட்டா
கொலுசு வருமா???
xxx
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது………
xxxx

சில விஷயங்கள்
டீக்கும் காப்பிக்கு என்ன வித்தியாசம் தெரியுமா???
டீ ல ஒரு” ஈ “ இருக்கும், காப்பில இரண்டு “ ஈ” இருக்கும்!!!
xxxx
சைக்கிள் ஒட்ரது சைக்ளிங் ன்னா,
ட்ரெயின் ஓட்டரது ட்ரெயினிங் கா????
ப்ளேன் ஓடரது ப்ளானிங்கா???
என்னதான் பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கூட்டல்
கழித்தல் கணக்கு போடும்போது கடன் வாங்கித்தான்
ஆக வேண்டும்!!!
Xxxxx
என்னதான் மனுஷனுக்கு வீடு, வாசல், காடு, கரை, இருந்தாலும் டிரெயின் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்துதான் ஆகணும்……
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்
என முட்டாள்கள் தான் சொல்வார்கள்.
ஆனால், ஒவ்வொரு பெண்ணும், வெற்றி பெற்ற மனிதனையே
தேர்நதெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்!!!
xxxxxx
லாரில கரும்பு ஏத்துனா காசு, கரும்பு மேல லாரி ஏறினா ஜூசு!!!
24 மணி நேரமும் திறந்திருக்கும் கடை எது???
சாக்கடை!!!
அந்த பூனை ஏன் அந்த ஸ்கூலயே சுத்திசுத்தி வருது???
அது “எலி”மெண்ட்ரி ஸ்கூல் என்பதால்!!!

Xxxxx
குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டா யிடுவோம்
எப்படி???
அது மேலதான் ”வெயிட்” போடறோமில்ல……..
காதல் ஒரு “மழை “மாதிரி ……..
நனையும் போது சந்தோஷம், நனைஞ்ச பிறகு ஜலதோஷம்!!!!
Xxxxxx
கவிதை எனபது வார்த்தை தொகுப்பு.
காதல் என்பது வயசுக் கொழுப்பு !!!
நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்???
வீட்ல இருக்கறவன ஒயின் ஷாப்புக்கு போக வைப்பது காதல்,
ஒயின் ஷாப்பில இருக்கிறவன வீட்டுக்கு கூட்டிட்டு வரது நட்பு!!!
ஆசையே துன்பத்திற்கு காரணம்ன்னா, துன்பம் வராம இருக்கணும்னு நினைக்கிறதும் ஆசை தானே???
xxx
முத்தம் கேட்டால் உடனே கொடுத்து விடுகிறார்கள்….
ஆனால் மிட்டாய் கேட்டால் யோசிக்கிறார்கள்,
குழந்தைகள்!!!
நான் நல்லவன் எனபதற்கு சாட்சி, நான் செய்யும் எந்த் தவறுக்கும்
சாட்சி இல்லாமல் பார்த்துக் கொள்வதே!!!
கடைசியில இது சரியாகும் என நம்புங்கள், சரியாகாவிட்டால், இது கடைசியில்லை என நம்புங்கள்!!!
tags– நவீன, ஞான மொழிகள் – 12
***