சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை! (Post No.9068)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9068

Date uploaded in London – –23 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான் அவனுக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்காது . அதிலும் தமிழ்ப் பாடம் என்றால் அவனுக்கு வேப்பங்காயாகக் கசக்கும் .ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லை. என்ன மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விடவில்லை. அவனுடைய அம்மா பக்கத்திலுள்ள கடைக்கு ஓடிப்போய் சில மருந்துச் சரக்குகளை வாங்கி வா; நான் உனக்கு கஷாயம் வைத்துத் தருகிறேன் . உடனே உடம்பு குணம் ஆகிவிடும் என்றாள் .

எப்படியாவது வெளியே போகவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பையனுக்கு இது வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது.

அவனும் அம்மா என்ன என்ன வாங்க வேண்டும் சொல்லுங்கள் என்று எழுதிக்கொண்டான் . ஆனால் தமிழ் எழுதி பழக்கம் இல்லாததால் அம்மா சொன்ன “சுக்கு , மிளகு, திப்பிலி” என்பதை

“சுக்குமி, ளகுதி ,ப்பிலி”  என்று தவறாகப் பிரித்து எழுதிக் கொண்டு கடைக்குப் போனான்

கடைக்காரனிடம் காஸைக் கொடுத்து அம்மா, “சுக்குமி,  ளகுதி ,ப்பிலி  வாங்கி வரச் சொன்னாங்க” என்றான் ; கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை ; பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அவன் கையில் இருந்த சீட்டை வாங்கிப் பார்த்தார் ;பையன் தப்பும் தவறுமாக எழுதியதை பார்த்து சிரித்துக் கொண்டே இவனுக்கு “சுக்கு, மிளகு, திப்பிலி” கொடுங்கள் என்றார் . அந்த சொற்களை அவன் தவறாக இடம்பிரித்து எழுதியிருப்பதை அவனிடம் சொல்லி  நன்கு “தமிழைப் படி, எழுது” என்று அறிவுரை கூறினார் . அன்று கடைக்காரரும் பெரியவரும் சிரித்த ஏளனச் சிரியப்பு  அவனை ஒழுங்காக தமிழ் படிக்கவும், எழுதவும் ஊக்குவித்தது.

tags- சுக்கு, மிளகு, திப்பிலி,

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: