
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9067
Date uploaded in London – – 23 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 14
kattukutty

வேண்டியதும் வேண்டாததும்
நேசிக்க வேண்டியது – காற்றையும், ஒளியையும்
கை விட வேண்டியது – ஆடம்பரத்தையும், அகந்தையையும்
உண்ண வேண்டியது – சோற்றையும், காய்கறியையும்
பருக வேண்டியது – நீரையும், மோரையும்
தவிர்க்க வேண்டியது – காலை உணவு
தள்ள வேண்டியது – வறுவலும் பொரியலும்
குறைக்க வேண்டியது. எண்ணெய், காரம், புளி, உப்பு

xxxx
துக்கத்துக்கு காரணம்
1.நான் என்ற அபிமானம்
2.உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது
என்ற அபிமானம்.
xxx
நமக்கு நாமே
என் மனைவியை பார்க்குபோதே பொறாமையாய் இருக்கிறது.
அவளுக்குத்தான் எவ்வளவு நல்ல கணவன் வாய்த்திருக்கிறான்!!!

xxx
யாராவது நாட்டுக்கு நல்ல கருத்து சொல்லும் போதெல்லாம்
தூக்கம் தூக்கமாக வருகிறது்
என்ன பண்ணறது, நம்ம நாடு கொடுத்து வச்சது அவ்வளவுதான்!!!
ரொம்ப நாளா ஒரு டவுட்டு………
கடிகாரம் கண்டு பிடிக்கும்போது எதைப் பார்த்து சரியா டைம்
வச்சாங்க???
xxx
மனிதர்களை நல்வழி படுத்துவது நான்கு
- ஒழுக்கம் 2) கொள்கை3) மதம் 4) நல்ல நண்பர்கள்
xxxx
சரித்திரத்தை படிப்பதின் நோக்கம்
அது போல் நம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற INSPIRATION
பெறுவதற்காகவும், என்னன்ன செயல்களால் என்னன்ன விளைவுகள்
ஏற்பட்டன என்று தெரிந்து கொள்வதற்காகவும்.
xxx


லங்கணம் (பட்டினி கிடத்தல்) ஔஷதம்
மௌனம் பரம ஔஷதம்!!!
xxx
மனம் என்பது ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள
JUNCTION BOX!!!
xxx

ஒருவன் செய்யும் அயோக்யத்தனத்தைப் பற்றி மற்றவரிடம்
தம்பட்டம் அடிக்காதே…….
கெட்டவனையும் அவன் செய்கையையும் பற்றி மற்றவர்களிடம்
விளக்கி கூறினால் அவ்வாறு ஏமாற்ற முடியும் என்பதை மற்றவர்களுக்கு நீ கற்றுக் கொடுக்கிறாய்……
Xxxx
ஞானம் அடைவது என்பது நீ கேட்டு தெரிந்து, புரிந்து கொள்ளக்கூடிய
விஷயம் இல்லை, அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டியது.
தெரியாமல் செய்வது தவறு, தெரிந்தே செய்வது தப்பு.
தான் செய்த தப்புகளை நியாயப் படுத்தினால் அது “குற்றம் “.
xxxx
படிக்கறவரைக்கும் வேளா வேளைக்கு சோறு, அதுக்கு மேல
வேலைக்கு போனாத்தான் சோறு !!!
To be continued……………………………
Tags -நவீன, ஞான மொழிகள் – 14,