ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 2 (Post.9082)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9082

Date uploaded in London – –28 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 2

ச.நாகராஜன்

ஹிந்து மதம் பூகோள ரீதியாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் பிரதானமாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் : பாரம்பரியமாகவே ஹிந்துமதம் பிறரை  மதம் மாற்றும் ஒரு மதமல்ல. ஹிந்துக்கள் மற்ற மதத்தைப் பின்பற்றுபவரை தங்கள் மதத்திற்கு சாதாரணமாக மாற்றுவதே இல்லை. கட்டாய மத மாற்றம் என்பது ஹிந்துக்களிடம் அறவே இல்லை. ஏன், அமைதியான முறையில் கூட அவர்கள் பிறமதத்தினரை தங்கள் மதத்திற்கு வருமாறு குறிப்பிடத்தக்க பெரிய அளவில் கூப்பிட்டதும் இல்லை. இதற்கு நேர் மாறாக செமிடிக் மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் செயல்படுகின்றன.

இரண்டாவது காரணம் :  சென்ற சில நூற்றாண்டுகளில் பிற நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் மதமாற்றத்தினாலோ அல்லது படுகொலைகளினாலோ அல்லது கொடுமைப்படுத்தப்பட்டதால் இந்தியாவுக்கு குடியிருக்க இடம் பெயர்வினலோ அல்லது அடுத்த மதத்தில் நிர்பந்தமாக சேர வேண்டிய காரணத்தினாலோ  பெரிய பின்னடைவை அடைந்து விட்டனர்.

என்றாலும் கூட ஹிந்து மதத்தின் சில அடிப்படையான கொள்கைகள் ஹிந்து அல்லாதோரால முழு மனதுடன் உலகெங்கும் ஏற்கப்பட்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவர் மறு ஜென்மம் என்பதை நம்புகின்றனர். ஹிந்து- புத்தமதத்தின் ஆன்மீக வழியான யோகா கடந்த பல காலமாகவே மேலை நாடுகளில் பிரசித்தம் அடைந்து வந்திருக்கிறது. சில சர்ச்சுகளினால் இதற்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்து சமூகத்தின் வரலாறு ரீதியான இறக்கம்

முன்பே கூறியது போல ஹிந்து மதம் கடந்த பல நூற்றாண்டுகளில் மிகவும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்ததது. இதன் காரணமாக ஏராளமான ஹிந்து சமூகங்கள் இடம் பெயர்தலுக்கு உள்ளாயின, சில அழிந்தே போயின. கீழே உலகின் பல பாகங்களில் உள்ள ஹிந்து சமூகத்தினர் பற்றிய ஒரு தொகுப்பு தரப்படுகிறது. (சுரிநாம், பிஜி போன்ற இடங்களில்  ஹிந்து சமூகங்கள் சந்திக்க நேர்ந்த அவலங்கள் இந்த ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் இதில் தரப்படவில்லை)

  1. சிங்கியாங் (சீனா) (Sinkiang, China)

ஹிந்து நூல்களில் இந்த பிரதேசம் ‘உத்தர குரு’ என்று குறிப்பிடப்படுகிறது. மிகப் பழங்காலத்தில் தோச்சாரியர் (Tocharians)

      என்று அழைக்கப்பட்ட ஆரியர் இங்கு வசித்து வந்தனர். கிழக்கிலிருந்து முதலில் மங்கோலியர்களின் தாக்குதலுக்கும் பின்னர் அராபியரின் தாக்குதலுக்கும் ஆளாகும்

முன்னர்,தோச்சாரியர்கள் அபிதம்ம புத்தமதத்தையும் ஹிந்துக்களின் சைவப் பிரிவையும் பின்பற்றி வந்தனர். இந்த தாக்குதலின் விளைவாக படையெடுத்து வந்தோர் அவர்களைத் தங்களுடன் சேர்த்து கொண்டதால் தோச்சாரியர்களே இல்லாமல் போய்விட்டனர். இந்திய பாரம்பரிய பழக்கத்தின் படி சாக த்வீபமும் காம்போஜ பிராமணர்களும் பிகானீர், காஜியாபாத் மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகள் உள்ளிட்டவற்றில் வசித்து வந்தனர். இந்தியாவிற்கு வந்த தோச்சாரியர்களின் வழித்தோன்றல்களே இவர்கள்.

  • மத்திய கிழக்கு (The Middle East)

பண்டைய ஹிந்து நூல்கள் காஸ்பியன் கடலை கஷ்யப சாகர் எனக் குறிப்பிடுகின்றன. முஸ்லீம்களால் பெரிதும் மதிக்கப்படும் மெக்காவில், காபாவில் உள்ள கருங்கல் ஒரு சிவலிங்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. (சிவனைக் குறிக்கும் உருவம் சிவலிங்கம் என பவிஷ்ய புராணம் குறிப்பிடுகிறது). ஹிந்து வியாபாரிகள் அந்தப் பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதை இது எடுத்துக் காட்டுகிறது. இரானின் கடற்கரை பகுதி, பாகு (அஜர்பைஜன்- Baku – Azebaizan), இராக் ஆகிய இடங்களில் சிதிலமடைந்த ஹிந்து கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புனிதர் க்ரெகாரி (St Gregory) யின் தலைமையில் ஒரு வெறி பிடித்த கும்பல் இப்போது இராக் என்று சொல்லப்படும் இடத்தில் வாழ்ந்த சிறிய அளவில் இருந்த ஹிந்து வணிகக் கூட்டத்தினரை படுகொலை செய்ததையும் கோவில்களை இடித்து அங்கிருந்த சிலைகளை நொறுக்கியதையும் வரலாற்று பதிவேடுகள் குறிப்பிடுகினறன.

                                 ***               தொடரும்

ஆதாரம்,  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

hindu census-2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: