
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9106
Date uploaded in London – –5 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

க-ட-ப-யா-தி எண் முறை என்றால் என்ன?
எழுத்துக்களுக்கு சில எண்களை ஒதுக்கும் முறையாகும்.
தமிழில் கூட ‘க’ என்பது ஒன்றையும் ‘அ’ என்பது எட்டையும் குறிக்கிறது.
இது போல சம்ஸ்க்ருத எழுத்துக்களுக்கு எண்களை ஒதுக்கும் முறை ‘க-ட-ப-யாதி’ எண் முறை எனப்படுகிறது.
ஏன் இதற்க்கு இப்படி ‘கட்டமுட’ சப்தம்?
தமிழில் 18 மெய் எழுத்துக்களையும்
கசடதபற,
ஙஞணநமன,
யரலவழள
—வல்லினம், மெல்லினம், இடையினம் என்று சொல்லுவோம்
அதில் முதலில் உள்ள வல்லின எழுத்துக்களின் பெயரில் அமைந்தது இது. க, ட , ப , ய என்ற வரிசைக்கு ‘எண் 1’- என்று சொல்லிக்கொண்டே போகும் . கீழே அட்டவணையில் முழு விவரம் உளது.
கடபயாதி முறையால் நமக்குக் கிடைக்கும் அதிசயச் செய்திகள் என்ன? வரருசி என்பவர் இதை உருவாக்கியதாக ஒரு கருத்து உளது. அவரது காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. சிலர் 2000 ஆண்டு என்றும் சொல்லுவார்கள். இவர் “ழ” சிறப்பு தமிழ் எழுத்தையும் இந்த முறையில் புகுத்தி அதற்கு எண் / நம்பர் கொடுத்துள்ளார். “ழ” என்னும் வளை நாமடி ஒலி (Retroflex) தமிழில் மட்டுமே உண்டு. ஆகையால் இவர் தமிழராகவோ, தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவோதான் இருக்க வேண்டும். இதற்கு சில இடங்களில் 3 என்றும் இன்னும் சில இடங்களில் 9 என்ற மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அதிசயச் செய்தி
இந்த முறையில் எழுத்தைக் கண்டுபிடிக்க, வலமிருந்து இடமாகப் படிக்க வேண்டும் . இதே முறையில்தான் மக்கள் சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் எழுத்துக்களை எழுதினர். ஒருகாலத்தில் அதை நாம் படிக்க இந்த எண்களும் உதவலாம்.
மூன்றாவது அதிசயச் செய்தி
இது 2500 ஆண்டுக்கும் முந்தைய பழமையுடைத்து.சாம வேதத்திலேயே இப்படிப்பட்ட முறை உளது. அதை பரப்பும் பணியை ஜைமினி என்னும் மகரிஷியிடம் ஒப்படைத்தார் வியாச முனிவர். அந்த ஜைமினிக்கும் வரருசிக்கும் தொடர்பு உண்டு.
நாலாவது அதிசயச் செய்தி
உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் syllabus / பாடத்திட்டம் போட்டுக்கொடுத்தவர் வாத்ஸ்யாயன மகரிஷி. அவர் எழுதிய காம சூத்திரம் உலகின் முதல் sex செக்ஸ் புஸ்தகமாகும். அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்தார் ( இந்தப் பட்டியல் இந்த பிளாக்கில் இரு முறை புதிய தவல்களுடன் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது) . இந்த 64 கலைகளில் ஒன்று ரகசியக் குறியீடு. அதாவது சங்கேத மொழியில் (coded language) செய்தி அனுப்ப எண்களைப் பயன்படுத்துவது . இதையும் அவர் பெண்கள் பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார். (காண்க காமசூத்திர நூல் பற்றிய எனது கட்டுரை)

ஐந்தாவது அதிசயச் செய்தி
எண் ஜோதிடம் என்னும் நியூமெராலஜிக்கும் (numerology) இந்துக்களே வித்திட்டனர் . இதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ‘ஜய’ . இதை கடபயாதி முறையில் எண் ஆக்கினால் கிடைப்பது 18. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததும், 18 டிவிஷன்/ அக்ஷவ்ணி (11+7) படைகள் பங்கேற்றதும், மஹாபாரதம் 18 பிரிவுகளாக (பர்வம்) பிரிக்கப்பட்டதும், மாபாரதத்திலுள்ள பகவத்கீதை 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டதும் 18-ன் மஹிமையை உணர்த்தும். யாருடைய பெயரின் கூட்டுத் தொகையாவது 18 (நியூமராலஜி) என்று வந்தால், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னரே வெற்றி கிட்டும் என்பது வெளிப்படை.
மற்றோர் அதிசயச் செய்தி தமிழர்களும் ஸம்ஸ்ருத முறையைப் பின்பற்றியதாகும். நீளத்திற்கு ஏற்ப செய்யுட்களை ‘குறு’ந்தொகை, ‘நெடு’ந்தொகை என்று வகைப்படுத்துவது. இதை வேதத்திலும் காண்கிறோம் .
அதே போல 4, 40, 400, 4000 என்று செய்யுட்கள் செய்தது தமிழர்களின் புதுமை.(ஏற்கனவே இவ்வகை நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன் )
சம்ஸ்க்ருதம் போலவே தமிழர்களும் பஞ்சகம் (5 செய்யுள்), அஷ்டகம் (8), பதிகம்/தசகம் (10), சதகம் (100) சஹஸ்ரம் (1000) என்று நூல் செய்தனர்.
அகனானூறு புஸ்தகத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு திணைக்கும் எண்வரியாக பாடல்களை ஒதுக்கியது புதுமையிலும் புதுமை (இணைப்பைக் காண்க).
பெரிய எண்களை குறிப்பிடுவதற்கு தமிழர்கள் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே எடுத்துக்கொண்டனர் . யஜுர் வேதத்திலேயே இப்படி பெரிய எண்கள் வந்து விடுவதால் உலகில் முதல் முதலில் பெரிய எண் களை உருவாக்கிய பெருமை வேத கால இந்துக்களுக்குக் கிடைத்துவிடுகிறது. சங்கம், பதுமம், சமுத்திரம், ஆயிரம் முதலிய சம்ஸ்க்ருத எண்கள் இதற்கு எடுத்துக் காட்டு (ஆயிரம் என்பது சஹஸ்ரம் என்பதன் மருவு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை)
டெசிமல் முறையை DECIMAL SYSTEM (10, 100, 1000,100,000) இந்துக்கள் உலகிற்கு கற்பித்ததாலும் பூஜ்யம் ZERO என்னும் எண்ணைக் கண்டுபிடித்ததாலும் இந்துக்கள் உலக விஞ்ஞான முன்னேற்றத்துக்கு வித்திட்டனர். இது நிகழ்ந்திராவிடில் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டெர்நெட் , விண்கோள், ராக்கெட் , விண்வெளிப் பயணம் ஆகியன கிடைத்திரா.
ஒரு சில எடுத்துக் காட்டுகள்
ஜய =18 (ஜ =8; ய= 1);
18 என்று ஒருவர் எழுதினால் அதை வலமிருந்து இடமாகப் படித்தால் ஜய என்று படிப்பர்.
ஏனைய எழுத்துக்களுக்கு உள்ள எண்களை இணைப்பில் காண்க ‘.ஜய ‘ என்றால் வெற்றி.
இதுதவிர எல்லோருக்கும் தெரிந்த வேதத்திலுள்ள கடவுளர் எண்ணிக்கையையும் பயன்படுத்துவர்
(ஏகாதச) ருத்ரர் – ஆகையால் ருத்ர என்று சொன்னாலேயே 11 என்ற எண்ணைத்தான் குறிக்கும்.
(அஷ்ட) வசு =8, (த்வாதஸ ) ஆதித்ய =12,
கடபயாதி முறையில் குழப்பத்தைத் தவிர்க்க சில விதிகளையும் இயற்றினார்.
பொதுவான தகவல்
சம்ஸ்க்ருதத்தில் 4 க, 4 ச, 4 த, , 4 ப உண்டு. தமிழில் 3 ல, ள ,ழ இருப்பது போல ஸம்ஸ்க்ருத்ஸத்தில் ஸ , ஷ ச உண்டு.
க- ட -ப- ய = 1
க்க -த் த- ப்ப – ர = 2
………………………………………..
அட்டவணையைக் காண்க
உயிர் எழுத்துக்கள் அனைத்தும் = 0
CONSONANTS (மெய் எழுத்துக்கள் ) NUMERALS
Ka ta pa ya 1
Kha tha pha ra 2
Ga da ba la 3
Gha dha bha va 4
Na na ma sa 5
Ca ta sa 6
Cha tha sa 7
Ja da ha 8
Jha dha la 9
Na na 0
Vowels 0
(Sanskrit has three different ‘s’ and two different ‘n’ sounds and two different ‘l’ sounds)
எழுத்துக்களின் முன்னால் என்ன இருக்கிறது பின்னால் என்ன இருக்கிறது என்பது தொடர்பான விதிகளையும் அறிந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ள வேண்டும்.


–SUBHAM- –
வரருசி,ஜய 18, க-ட-ப-யா-தி, எண் முறை, கடபயாதி எண் முறை,