
COMPILED BY KATTUKKUTY
Post No. 9120
Date uploaded in London – – 8 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 16
Kattukutty
தடைகள் தோற்கட்டும், மடைகள் திறக்கட்டும்,
சோகம் போகட்டும், யோகம் பெருகட்டும்,
நன்மைகள் நடக்கட்டும், நாடு நலம் பெறட்டும்,
மண்ணில் மறைந்து மக்கிப் போன உறவுகள் மலரட்டும்,
மகிழ்ச்சி பெருகட்டும், வெற்றிப் பூ பூக்கட்டும்!!!
XXX
10 வருஷத்திற்கு முன்,
வடை ஒன்று………….ரூ 1/-
CALL CHARGE ……ரூ 10/-
AFTER THE TECHNOLOGY CHANGE
வடை ஒன்று ………….ரூ 10/-
CALL CHARGE……….ரூ 1/-
வடை போச்சே…………!!!
XXXX
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும்போது
அவன் “புத்திசாலி”ஆகிறான்.
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை
கொள்ளும் போது “முட்டாள்” ஆகிறான்.
XXXXXX
தவறான பாதையில் வேகமாக ஓடும் மானை விட,
சரியான பாதையில் ஓடும் ஆமையாக இரு.
XXXX
இன்றைய புது மொழிகள்
ஒரு பனை சோத்துக்கு ஒரு குண்டா குழம்பு…….
தம்பி உடையார், அண்ணன் ரெட்டியார்,
ஊரான் புள்ளய ஊட்டி வளர்த்தா உன்பொண்டாட்டி
உன்ன சந்தேகப் படுவா…….
ஊரான் புள்ளய ஊட்டீல வளர்த்தா உன புள்ள
கொடைக்கானல்ல வளரும்!!!
XXXX

நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு……
தோல் கொடுப்பான் கறிக்கடை பாய் !!!
காற்றுள்ள போதே தூங்கிவிடு
கரண்ட் போனா தூக்கம் வராது!!!!
XXX
முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும்
அஹமது நட்பே நட்பு!!!
XXX
அஹிம்சை – காந்தியோடு எரித்து விட்ட ஒன்று.
இனஸ்யூரன்ஸ் – நவீன சீதக்காதி
உண்ணாவிரதம் – நாட்டில் பலர் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா!!!
வீடு – ஒரு கௌரவ சத்திரம்
கடவுள் – கஷ்டம் வரும்போது மட்டுமே நினைக்கப்படுபவர்
XXX
காதலிப்பதை விட திருமணம் செய்து கொள்ளலாம்.
எவன் மனைவிக்கோ செலவு செய்வதை விட நம்
மனைவிக்கே செலவு செய்து விட்டு போகலாம் !!!
போகும்போதே என்னை ரசித்துக் கொண்டே போ !!!
திரும்பி வர மாட்டேன்.
இப்படிக்கு உன் வாழ்க்கை.

tags –நவீன ஞான மொழிகள் – 16