வீணைக் கொடியுடைய வேந்தனே! (Post No.9124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9124

Date uploaded in London – –9 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீணைக் கொடியுடைய வேந்தனே!

கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.  சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.

புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில்  சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக்  கொடி  ஆகிய அனைத்தும்  குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய  மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது

துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .

ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி

வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.

யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது  ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.

கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .

ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை

“இடிப்பு ……………

…………….

கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”

பொருள் —

இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்

Xxx

பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …

இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்

“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–

இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.

Xxxx

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………

ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்

சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி

வாழிய உலகு எலாம்  வளைத்து வாய் இடும்

ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

பொருள் ……….

“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.

யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …

எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்

கழுகும் காகமும் மொய்த்தன 

பொருள்

வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது  காகமும் கழுகும் மொய்த்தன .

XXXX

MY OLD ARTICLE………

அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்

நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக்  கதை 

ராவணன் – பாண்டியர் சமாதான …

tamilandvedas.com › 2014/06/24 › ர… 

24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …

–subham—

tags- வீணைக் கொடி, நச்சினார்க்கினியர், ,ராவணன் 

Leave a comment

1 Comment

  1. K S Venkataraman

     /  January 9, 2021

    “…. புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில் சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக் கொடி ஆகிய அனைத்தும் குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது. …. ”
    அன்னிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தெளிவான இலக்குகள் இருந்தன. (1) கோயில்களை இடித்து, மக்களின் வாழ்வைச் சீரழித்து கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். (2) தங்கள் செயல் திட்டங்களைத் தங்களுக்காக பாடுபட்டு நிறைவேற்றித் தருவதற்காக எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இந்துக்களை வன்முறையாலும், பொய்ப்பிரசாரங்களாலும் தங்கள் மதத்தில் சேர்க்க வேண்டும். (3) அவர்கள் வழிச் சந்ததிகளைத் தங்களைவிட மோசமாக இந்துக்களை வெறுக்குமாறு மூளைச்சலவை செய்து, வருங்காலத்தில் இந்தியாவையேத் தங்கள் மதங்களின் ஆளுகைக்கு மாற்றவேண்டும்.
    அன்னியர்களை விரட்டிவிட்டோம். ஆனால் அதனினும் கடும் பணி காத்திருக்கிறது. மதம் மாற்றப்பட்ட இந்துக்களும், அவர்கள் சந்ததியினரும், தங்களது இந்து பாரம்பரியத்தை மறந்து அன்னிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இலக்குகளை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்து வருகிறார்கள். இன்னமும் அவர்கள் அயல் நாட்டு விரோதிகள் மற்றும் மதவெறியர்களின் கைப்பாவைகளாகவே இருந்து அவர்கள் இட்ட பணிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கிறார்கள்.
    இவர்களது பொய்ப்பிரசாரங்களை முறியடித்து, மக்கள்முன் ‘ இவர்கள் பசுந்தோல் போர்த்த புலிகள்’ என்பதைத் தெளிவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாதவரை, இந்தியச் சுதந்திரம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.
    ஆரிய, திராவிடப் புரட்டுகளில் ஆரம்பித்து, அன்னிய மதங்களைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது அடிவருடிகளின் வழித்தோன்றல்களும், அறிமுகப்படுத்தியுள்ள பொய்ப்பிரசாரங்கள் கணக்கிலடங்காதவை.
    பலவித ஏமாற்றுப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவற்றை நயமாகவும், பயம் காட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும், பரப்புகிறார்கள். இந்துமதப் பிரிவுகளில் எங்கெல்லாம், எப்படியெல்லாம் குழப்பங்களை உண்டு பண்ண இயலுமோ அவற்றைச் செயவதே இவர்கள் பணி. இந்துக்கள் ஒற்றுமையைச் சிதைப்பதே இவர்கள் குறிக்கோள்.
    தமிழகத்தைப் பொறுத்தவரை பிரிவினை வாதத்தை ஆயுதமாகக்கொண்டு இந்தியாவைப் பிரித்தாளலாம் என்ற திட்டம் இன்னும் மேலோங்கியே இருக்கிறது. தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு என்று தொடங்கிய விஷமப்பிரசாரம் இப்போது தமிழர்கள் வேறு, இந்துக்கள் வேறு என்பதாக வளர்ந்திருப்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
    இத்தகைய விஷமிகள் பலாம் நுழைந்து அடுத்துக்கெடுக்கலாம் என்று எண்ணியெண்ணிச் செயல் திட்டங்கள் தீட்டுகிறார்கள். நமது இலக்கியங்களைச் சற்றும் தயங்காமல் “நம்புகிறவர்கள் நம்பட்டும். ஆரம்பித்து வைப்போம்.” என்ற எண்ணத்தில் இவையெல்லாம் எங்களுடையவை என்று பேசுகிறார்கள்.
    தமிழகத்துக்கும் இந்து மதம் என்று அழைக்கப்படுகிற சனாதன தர்மத்துக்கும் உள்ள பிரிக்க இயலாதத் தொடர்பை எப்படியாவது துண்டிக்க வேண்டும் என்பது இவர்களது தீவிர முயற்சிகளில் ஒன்றாகும்.
    இலண்டன் சுவாமிநாதனின் இந்த சிறிய கட்டுரை இந்துமத விரோதிகளின் கருத்து திட்டமிட்ட பொய்ப்பிரசாரம் என்பதைத் தெளிவாக்குகிறது.
    கட்டுரைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: