
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9131-B
Date uploaded in London – –11 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 11-1-2021
இன்று ஜனவரி 11-ஆம் தேதி — திங்கட் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
முதலில் நல்ல செய்தியுடன் துவக்குவோம்
சபரிமலைக்கு ரயில் சேவை!
நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த சபரிமலை ரயில்பாதை திட்டத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது . 23 ஆண்டுகளாக செல வின் ஒரு பகுதியையும் ஏற்க மறு த்துவந்த கேரள அரசு இப்பொழுது பாதிச் செலவை ஏற்க முன்வந்துவிட்டது . இது இந்துக்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் செய்தியாக வந்துள்ளது.
வணிகரீதியான சாத்தியமான திட்டங்களை அடையாளம் காணும் பொருட்டு ரயில்வே அமைச்சகமும் கேரள அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அப்போதிலிருந்து இந்த திட்டத்தின் செலவு 517 கோடியிலிருந்து 2817 கோடி ஆக ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பலன் அளிக்கும் இந்த திட்டம் 23 வருடங்களாக கிடப்பில் இருந்து, தற்பொழுது பாதி செலவை ஏற்றுக்கொள்ள கேரள அமைச்சரவை முன்வந்திருக்கிறது.
தற்போது இடுக்கி மாவட்டம் எந்த ரயில்வே ஸ்டேஷனையும் பெற்றிருக்கவில்லை. இந்த திட்டம் வழியாக அதற்கு ரயில் இணைப்பு கிடைக்கும்.
சபரிமலையில் ஒரு பசுமையான விமான தளம் அமைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கும் கொண்டிருக்கும் வேளையில் இந்த ரயில்வே திட்டம் வருகிறது.

XXXXX
சபரிமலையில் 14-ந்தேதி மகரவிளக்கு;
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் முடிந்து தற்போது மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
XXXX
சபரிமலையில் மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க ஆலோசனை
”சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும்,” என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டல – மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது. மண்டல காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், போலீசார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கி யதால் அது தவிர்க்கப் பட்டது.
மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும்.
செலவை ஈடு கட்டுவதற்காக மாதம்தோறும் கூடுதல் நாட்கள் கோவிலைத் திறந்துவைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது
XXXXXXXXXXXXX

ராமர் கோவிலுக்கு நிதி சேகரிக்க 100 மில்லியன் மக்களை அணுக ஆர் எஸ் எஸ் திட்டம்
குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் கூறியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக விளங்கும்.
ராமர் கோவில் கட்டும் பணியில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்பு கள், நிதி வசூலிக்கும். தனிப்பட்ட நபரிடம், 10 ரூபாயும், ஒரு குடும்பத்திடம், 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்து உள்ளோம்.
மொழி, ஜாதி, பிறப்பு ஆகியவற்றால், ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
‘ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று; அனைவரும் சரிசமமானவர்கள்’ என, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், மக்களிடம் பிரசாரம் செய்வர்.
கூட்டுக் குடும்பமாக வாழும், ஹிந்து கலாசாரத்தின் பெருமையை, மக்களிடம் எடுத்துக் கூறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.
XXXX
ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள்‘ : டுவிட்டரில் டிரெண்டிங்
ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து பல மாதங்களாக சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.
ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை ஜெகன்மோகன் தலைமையிலான அரசு கைது செய்தது. ஹிந்து சிலைகள் மீதான தாக்குதல்களை விஷமிகள் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.
XXXX

ஆந்திர மாநிலத்தில் ஹிந்துக்கோவில்கள் தாக்கப்படத்தைத் தொடரந்து , தாக்கப்பட்ட கோவில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள புகழ்பெற்ற த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள் முடிவு செய்துள்ளார்.
இந்தக் கோவில்களை பாதுகாக்கவேண்டும் என்பதே இந்த பாத யாத்திரையின் நோக்கம். அவர் ஜனவரி 17ம் தேதி முதல் கோவில்களுக்கு பாதயாத்திரை செய்யும் திட்டத்தை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் மட்டுமே 50 கோவில்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றார்.
இது ஒரு புறமிருக்க , எதிர்க் கட் சியினரின் தாக்குதலுக்கு ஈடு கொடுப்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி பல கோவில்களின் பூமி பூஜைகளில் பங்கேற்று வருகிறார். ஆந்திர மாநிலத்தில் பல கோவில்களில் விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூமி பூஜைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
XXXXX
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற 12-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.
அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்து படி அலங்காரம் நடைபெறும்.
ஒரு லட்சத்து 8 வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆர்.கே.ரமேஷ் தலைமையில் 32 அர்ச்சகர் குழுவினர்
வடைகள் தயாரிப்பதற்காக 2050 கிலோ உளுந்தமாவு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டர் நல்லெண்ணை, 10 சமையல் எரிவாயு இணைப்பு கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை தயாரிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
வடை தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி நிறைவடையும். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் இந்த வடை மாலை மதியத்திற்கு மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோர்வைகள் உருவாக்கப்படும் என வடை தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

XXXXX
உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்: JAGGI VASUDEV வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்குடன்,
ஈஷா (ISHA) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV கலந்துரையாடினார்.
அப்போது, ‛உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்’ என மத்திய அமைச்சரிடம் சத்குரு வலியுறுத்தினார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் சார்பில், ‘உள்நிலை விஞ்ஞானம் மற்றும் நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் நடந்த ஆன்லைன் கலந்துரையாடலில், சத்குரு, பேசுகையில்,
உள்நிலை தேடல் மட்டுமே, நம் இயல்பாக இருக்கிறது. அனைத்து உயிர்களையும் சமமாக பார்க்கும் நம்முடைய கலாசாரம், எதிர்கால உலகிற்கான முன்மாதிரியாக மாற வேண்டும். அதற்கு, இந்தியா உலகின் கலாசார தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்,” என்றார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுகையில், சமூக இடைவெளி, துாய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை, இந்திய ஆன்மிக முறை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
இது ஒரு புறமிருக்க………………………………….
‛தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியில் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம், சேதப்படுத்தப்படுகிறது. பக்தர்களால் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,

வணக்கம்
XXXX
நேயர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
மகர சங்கராந்தி வாழ்த்துக்கள் உரித்தாகுக .
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி .
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று ஞானமயம் மனதார வாழ்த்துகிறது.
— subham —-
tags- உலக ,இந்து சமய ,செய்தி மடல்11121,