
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9152
Date uploaded in London – –17 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்னே விதியின் கொடுமை!
ச.நாகராஜன்
இதோ சில சுபாஷிதங்கள்; அப்படியே நடைமுறை உண்மைகளை விளக்கும் அற்புதங்களாக அமைகின்றன!
என்னே விதியின் கொடுமை!
ய: சுந்தரஸ்தத்வினிதா குரூபா யா சுந்தரி ஸா பதிரூபஹீனா |
யத்ரோபயம் யத்ர தரித்ரதா ச விதேர்விசித்ரானி விசேஷ்டிதானி ||
எவன் ஒருவன் அழகாக இருக்கிறானோ அவனுக்கு அவலக்ஷணமான மனைவி வாய்க்கிறாள்; எவள் ஒருத்தி அழகியாக இருக்கிறாளோ அவளுக்கு அவலக்ஷணமான புருஷன் வாய்க்கிறான். இருவருமே சரிசமமாக இருந்தால் அவர்கள் ஏழைகளாகக் காணப்படுகிறார்கள்! விதியின் விளையாட்டு எப்படி இருக்கிறது, பாருங்கள்!
He who is beautiful has a wife with an ugly form; She who has a beautiful form has an ugly husband; where both qualities are equal they are seen to be poor; see how different are the designs of fate.
(Translation by Dr N.P.Unni)

*
ஏழை சொல் அம்பலம் ஏறாது!
ஹேதுப்ரமாணயுக்தம் வாக்யம் ந ச்ரூயதே தரித்ரஸ்ய |
அப்யதிபருஷமஸத்யம் பூஜ்யம் வாக்யம் சம்ருத்தஸ்ய ||
அதிகாரபூர்வமானதாகவும் முறையானதாகவும் இருந்தாலும் கூட ஒரு ஏழையின் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் முறையற்ற, உண்மையல்லாத வாக்கியங்களை ஒரு பணக்காரன் கூறினால் அது மிகுந்த மதிப்புடன் வரவேற்கப்படுகிறது!
One does not lend one’s ear to the words of a poor man though they are properly authoritative, whereas coarse, untruthful words of the rich are considered with great merit.
(Translation by Dr N.P.Unni)
*
கொடுத்தவனே கோமான்!
விதரதி யாவத்தாதா தாவத்ஸகலோபி கலபாஷீ |
விரதே பயஸி தனேப்ய: ஷாம்யந்தி சிகண்டினாம் த்வன்ய: ||
சலுகைகளை ஒருவன் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் தான் அவன் மதிப்புமிக்க மொழிகளால் புகழப்படுகிறான். மேகங்களிலிருந்து மழை பொழிவது நின்று விட்டால் மயிலின் ஓசை நின்று விடுகிறது!
As long as one distributes favours one is praised in laudable terms. Once the rains from the clouds are stopped the sounds of peacock come to an end.
(Translation by Dr N.P.Unni)
*
பத்தாயிரத்தில் ஒருவனடா நீ!
சதேஷு ஜாயதே சூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |
வக்தா தச சஹஸ்ரேஷு தாதா பவதி வா ந வா ||
நூற்றில் ஒருவனே சூரனாக இருக்கிறான்; ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாக இருக்கிறான்; பத்தாயிரத்தில் ஒருவனே தானங்களைக் கொடுப்பவனாக இருப்பானோ, மாட்டானோ!
One among hundred becomes a brave man: one among a thousand become a scholar and a spokesman in ten thousand may be there or not as also a giver of gift.
(Translation by Dr N.P.Unni)

***
tags- விதி, கொடுமை