


WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9158
Date uploaded in London – –18 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி என்று அழைக்கப்படும் பண்டிகை பொங்கலுக்கு மறுநாள் பெண்களால் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஞானமயம் ஒளிபரப்பில் அறிவித்தோம். ஸ்வர்ணலதா என்பவர் ஒரு பாடலை ணைப்பியிருக்கிறார். நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் கிடைத்த கணேச சாஸ்திரிகள் பிரசுரத்தையும் அனுப்பி இருக்கிறார். இவைகளைப் படலாகப் பாடி எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்
கணுப் பண்டிகை பாடல் :
( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.
கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.
பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.
மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.
கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.
வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.
எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.
கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.
தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்.
கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்.
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்.
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.
கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.
காக்கைக் கூட்டம் போல
எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்
SIVA THIRUMATHY SWARNALATHA
THANKS TO MRS SWARNALATHA




TAGS- காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி