
Post No. 9157
Date uploaded in London – –18 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காயத்ரி மந்திரத்தின் பத்துப் பகுதிகள்! 24 எழுத்துக்களின் தேவதைகள்!
ச.நாகராஜன்
மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரம் ஏராளமான சிறப்புக்களையும் ரகசியங்களையும் கொண்டது.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந:ப்ரசோதயாத் என்பது காயத்ரி மந்திரம்.
இதை மஹாகவி பாரதியார் அழகுற, “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று தமிழில் தந்துள்ளார்.
அந்த மந்திரத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குரிய தேவதைகள் நமது சாஸ்திரங்களில் தரப்பட்டுள்ளது.
அதை கீழே காணலாம்.
காயத்ரி பகுதி தேவதை
தத் அனிருத்த
சவிது ப்ரத்யும்ன
வரேண்யம் சங்கர்ஷண
பர்கோ வாசுதேவ
தேவஸ்ய விஷ்ணு
தீமஹி தைஜஸ்
தியோ துரீய
யோ ப்ராஞா
ந: புருஷோத்தம
ப்ரசோதயாத் நாராயண
வேதமாதா காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு.

அவற்றைக் கீழே காணலாம்:
த கேசவ
த்ஸ நாராயண
வி மாதவ
து: கோவிந்த
வ விஷ்ணு
ரே மதுசூதன
ணி த்ரிவிக்ரம
யம் வாமன
ப ஸ்ரீதர
ர்கோ ஹ்ருஷீகேச
தே பத்மநாப
வ தாமோதர
ஸ்ய சங்கர்ஷண
தீ வாசுதேவ
ம ப்ரத்யும்ன
ஹி அனிருத்த
தி புருஷோத்தம
யோ அதோக்ஷஜ
யோ நரசிம்ஹ
ந: அச்யுத
ப்ர ஜனார்தன
சோ உபேந்த்ர
த ஹரி
யாத் ஸ்ரீக்ருஷ்ண
ஸ்ரீமத்வரின் தந்த்ர ஸாரத்தில் காயத்ரியில் 24 எழுத்துக்கள் உள்ளது என்றும் இவை வர்ணங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த 24 வர்ணங்களுக்கு உரித்தான தேவதைகள் மேலே கூறியவாறு தரப்படுள்ளன. ஆகவே இவை வர்ண தேவதா என்று அழைக்கப்படுகிறது.
சாதகர்கள் இதை நன்கு அறிந்து காயத்ரி ஜபத்தை மேற்கொள்ள வேண்டும்.
***
tags- தேவதைகள், காயத்ரி மந்திரம், 24 எழுத்துக்கள்