

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9164
Date uploaded in London – –19 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தப் பிரபஞ்சசத்தை உருவாக்கும் 118 மூலகங்களில் (ELEMENTS) இதுவரை 28 தனிமங்களைக் கண்டோம். இன்று 29ஆவது மூலகத்தை அறிவோம்.
நியான் (NEON) என்ற வாயுவின் சரியான உச்சரிப்பு நீயான் (நியான்= NEENYON நீ- யோன்) . ‘நவ’ என்ற சம்ஸ்கிருத்த் சொல்லில் இருந்து வந்தது நியூ / NEW புதிய என்ற சொல். அதிலிருந்து உதித்தத்தே புதிய= நியான் வாயு.
இந்த வாயுவினால் மற்ற மூலகங்களுடன் இணைந்து பணிபுரிய முடியாது. ஆகையால் இவை மக்கள், பிராணிகள் விஷயத்தில் எந்தப் பங்கும் ஆற்றுவதில்லை இதை போலவுள்ள ஆர்கான், க்ரிப்டான் , ஸெனான் என்ற வாயுக்களும் நோபிள் NOBLE , அதாவது பிரபுக்கள் போன்றவை. அதிகம் மற்றவர்களுடம் கலவாத வகையின.
வில்லியம் ராம்ஸே , மாரிஸ் ட்ராவர்ஸ் (WILLIAM RAMSAY , MORRIS TRAVERS) என்ற 2 விஞ்ஞானிகள் லண்டனில் 1898ல் அபூர்வ வாயுக்கள் எனப்படும் பிரபுக்கள் வாயுக்கள் பற்றி ஆராய்ந்போது திடீரென அதிக ஒளிபடைத்த வாயுவைக் (CRIMSON RED LIGHT) கண்டனர் . ‘புதிய’ என்பதற்கான ‘நியாஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து நாமகரணம் செய்தனர்.
வாயு என்பது தமிழில் ‘வளி’ எனப்படும் ஆகையால் நியானை ‘புதுவளி’ என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து..
முதலில் நியான் பற்றிய சுவையான கதையைக் கேளுங்கள் .
ராம்சேயும் ட்ராவர்ஸும் இதைக் கண்டு பிடித்ததாக உலகம் நம்பினாலும் அதே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில்UNIVERSITY COLLEGE, LONDON பணியாற்றிய விஞ்ஞானி NORMAN COLLIE தான்தான் நியானைக் கண்டுபிடித்தவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் ஹைட்ரஜன் வாயுவில் நிறமாலையைக் கண்டுபிடிக்குமாய்வில் ஈடுபட்டபோது சிவப்பு ஒளி வந்ததை வைத்து புதுவளி என்று அறிந்தார்.
1973ல் வெளியான ஒரு புஸ்தகம் (THE SNOWS OF YESTER YEAR- NORMAN COLLIE BY WILLIAM TAYLOR, 1973) இவரும் தன்னிச்சையாக கண்டுபிடித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது
ஜே .நார்மன் கோலி (1859-1942) ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பேராசிரியர் PROFESSOR OF ORGANIC CHEMISTRY, UNIVERSITY COLLEGE .அதுமட்டுமல்ல; அவரை முன் மாதிரியாகக் கொண்டு தான் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சர் ஆர்தர் கானன்டாயில் .ஷெர்லாக் ஹோம்ஸும் பல துப்புகளை ரசாய ரீதியில் துலக்குவார்.நார்மன் கோலி சிறந்த ரசாயன நிபுணர். நல்ல மலையேறும் சாகசப் புலி.
நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நியான் வளி 65 பில்லியன் டன் உளது. ஆகையால் காற்றைக் கறந்து நியானைப் பெறலாம் . அதிகமாக உள்ள தனிமப்பட்டியலில் இது ஐந்தாமிடத்தில் உளது.
XXXX
நியான் NEON வாயு விளக்குகள்

இதன் முக்கிய உபயோகம் விளம்பர போர்டுகள் ஆகும். நல்ல சிவப்பு வர்ண ஒளி தருவதால் விளம்பரம் செய்யும் விளக்குகளில் இது முதலிடம் வகிக்கிறது.
இது தவிர மூடுபனிக் காலத்தில் சாலைகளிலும், நீர் மூழ்கி சாதனங்களிலும், லேஸர் ஒளிக்கருவிகளிலும் பய படுகிறது. மிகவும் குறைந்த வெப்பத்தில் குளிர் ஊட்டும் திரவம் ஆகவும் இருக்கிறது.
மூவுலக அட்டவணையில் 18-ஆவது குழுவைச் சேர்ந்தது. அதில் மேலும் 6 தனிமங்கள் உண்டு. இவை அனைத்தும் மந்த வாயுக்கள். ஏனைய மூலகங்களுடன் எளிதில் சேரா.
இரசாயனத் தகவல்கள்
குறியீடு Ne என் ஈ
அணு எண் – 10
கொதி நிலை – மைனஸ் -249 Cசி
உருகு நிலை- மைனஸ் -246 Cசி
இதற்கு 3 ஐசடோப்புகள் இருக்கின்றன .
ஐசடோப் என்பது ஒரு தனிமத்தின் மற்றோர் அவதாரம் / பிறப்பு.


—SUBHAM—
tags – நியான் வாயு ,.ஷெர்லாக் ஹோம்ஸ்