அன்னமும், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் வித்தியாசம்? (9180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9180

Date uploaded in London – –24 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷித ஸ்லோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை இவை.

ஹம்ஸ: ஷ்வேதோ தக: ஷ்வேதோ கோ பேதோ தக ஹம்ஸயோ: | நீரக்ஷீரவிவேகே து ஹம்ஸ: ஹம்ஸோ தகோ தக: ||

அன்னம் வெள்ளை நிறம்; கொக்கும் வெள்ளை நிறம் தான்! இந்த இரண்டிற்கும்  என்ன வித்தியாசம்? அன்னமானது பாலுடன் தண்ணீர் கலந்து  அது வெண்மையாக இருந்த போதிலும் கொக்கு போலலல்லாமல் நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கிறது.  (இந்த சுபாஷிதம் வெளித் தோற்றம் முக்கியமல்ல. புத்திசாலிகளுக்கு எது முக்கியம் எது முக்கியமல்ல என்பது தெரியும். ஆகவே வெளித்தோற்றத்தைக் கண்டு மயங்காமல் உள்ளிருக்கும் நற்பண்புகளையே பார்க்க வேண்டும் என்கிறது)

The swan is white and so is the crane. Then what is the difference between the two? It is said that the swan is able to separate milk even though diluted with water and drink only milk (unlike the crane). The subhāşita stresses the point that it is the inner qualities that make an object not its outer appearance. The wise precisely know what is useful and what is not.

காக: க்ருஷ்ணோ பிக: க்ருஷ்ணோ கோ பேதோ காகபிகயோ: |         வசந்தசமயே ப்ராப்தே காக: காக: பிக: பிக: ||

காகம் கறுப்பு நிறம் கொண்டது. குயிலும் கறுப்பு நிறம் தான்? இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வசந்த காலம் வரும் போது குயில் இனிய ஓசையை எழுப்புகிறது. காகத்தால் அப்படி இனிய ஓசையை எழுப்ப முடியவில்லை. காக்கை காக்கை தான்; குயில் குயில் தான்!

The crow is black, so is the cuckoo bird. Then, what is the difference between the two? It becomes evident with the advent of the spring when the cuckoo bird starts singing in sweet voice, which the crow cannot.

அஹம் ச த்வம் ச ராஜேந்த்ர லோகநாதாவுபாவபி |         பஹுவ்ரீஹிரஹம் ராஜன் சஷ்டிதபுரூஷோ பவான் ||

பிச்சைக்காரன் அரசனை நோக்கிப் பிரகடனம் செய்கிறான் இப்படி: “நாம் இருவருமே லோக நாதர்களே. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் என்னை எடுத்துக் கொண்டால் மக்களே எனக்கு எஜமானர்கள்; அரசனோவெனில் மக்களுக்கு எஜமானன்; அவ்வளவு தான்!

The beggar declares to the king: “Both of us are Lokanatha. The only difference is that in my case people are my master (when the compound Lokanatha is resolved as “Bahuvrihi”); while the king is the master (ruler) of the people (when the compound is resolved as a ‘Shashthitatpurusha).’

சுலபா: புரூஷா: ராஜன் சததம் ப்ரியவாதின: |                       அப்ரியஸ்ய ச ப்த்யஸ்ய வக்தா ஷ்ரோதா ச துர்லப: ||

விதுரன் திருதராஷ்டிரனுக்குக் கூறும் புத்திமதி : “ஹே! அரசனே! இன்பங்களை நாடும் மக்களை சுலபமாகக் காணலாம். ஆனால் அப்ரியமாக இருந்தாலும் உண்மையைப் பேசுபவனையோ அல்லது அவன் சொல்வதைக் கேட்பவனையோ காண்பது அரிதே!

Sage Vidura advises Dhritarashtra, “Your Majesty, people who engage in pleasantries can be easily found. One speaking bitter [truth] and another who listens to him/her are both difficult to find however.  

துர்ஜன: ப்ரியவாதீதி நைதத் விஸ்வாசகாரணம் |                      மதுதிஷ்டதி ஜிஹ்வாக்ரே ஹ்ருதயே து ஹலாஹலம் ||

உன் பக்கமாக பிரிய வார்த்தைகளைப் பேசினாலும் கூட, ஒருபோதும் கெட்டவர்களை நம்பாதே. அவர்கள் நாக்கில் தேன் சொட்டும்; இதயத்திலோ விஷம் நிரம்பியிருக்கும்!

Never believe a wicked person even if he/she speaks in (your) favor because there may be honey on his tongue but poison in his heart.

குறிப்பு : ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருக்கும் ஸ்வயம்சேவகர்களுக்காக சுபாஷித தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில சுபாஷிதங்களும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் மேலே தரப்பட்டுள்ளன. (தமிழாக்கம் : ச.நாகராஜன்)

நன்றி : Subhashita for Sanga shaka (77 pages)

***

tags- அன்னம், கொக்கு , வெள்ளை நிறம், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: