

Compiled by LONDON SWAMINATHAN
Post No. 9182-B
Date uploaded in London – –24 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜனவரி 24 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
அன்பர்கள் கவனிக்கவும்
முன்பு திங்கட்கிழமைகளில் ஒலி பரப்பப்பட்டு வந்த உலக இந்து சமய செய்தி அறிக்கை இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலி பரப்பாகும் .
Xxxx
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, நாட்டு மக்கள் பெருமளவில் நன்கொடை கொடுக்கத் துவங்கியுள்ளனர்
குஜராத் சூரத் நகரில் வைர நகைகள் வியாபாரம் செய்துவருகின்றவரும் ராமபக்தருமான கோவிந்த் பாய் தோலோக்கியா ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு
ரூ.11 கோடி நன்கொடை அளித்தார்
இவரை போன்றே குஜராத்தில் உள்ள ராம பக்தர்கள் சிலர் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை அளித்தனர்.
ஸ்ரீ த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் ரூ.12,34,567க்கான காசோலையை ஆந்திரபிரதேச ஆர்.எஸ்.எஸ். ப்ராந்த ப்ரச்சாரக் பரத்குமாரிடம் அளித்தார்.
கிரிக்கெட் வீரரும், பாரதிய ஜனதாக் கடசியுமான கவுதம் கம்பிர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்
Xxxx
ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர்.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து, ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு , மூன்று டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.
திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. அதில், மூன்று கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை, நேற்று ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
xxxx
திருப்பதி தேவஸ்தான ஒளிபரப்புக்கு யூனியன் வங்கி 50 லட்சம் ரூபாய் நன்கொடை
யூனியன் பேங்க் ஆஃ ப் இந்தியா திருப்பதி-திருமலை தேவஸ்தானம் நடத்தும் பக்தி சேனலுக்கு Rs 50,55,120 நன்கொடை வழங்கியுள்ளது . இது ஓராண்டுக்கான ஸ்பான்சர் ஷிப் ஆகும் .
ஆந்திர மாநிலம் திருமலை கோயிலின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா
பக்தி சேனல் ட்ரஸ்ட் (SVBC) உருவாக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரைச் சேர்ந்த சிவம் காண்டெவ் பிரைவேட் லிமிடெட், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சர் லால் எஞ்சினியர் லிமிடெட், நியூடெல்லியைச் சேர்ந்த ராமா சிவில் இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தலா 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளன.
இதையடுத்து ஜனவரி 16 இந்தியன் வங்கி, SVBC ட்ரஸ்டிற்கு 20 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியது..
Xxx
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமல் – மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை ஜனவரி 18 (முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Xxxxx
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து வரும் செய்திகளின் சுருக்கம்
அமேசான் ப்ரைம் வீடியோ சீரிஸ் ‘தாண்டவ்‘ நிகழ்ச் சியை எதிர்த்து 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. தயாரிப்பாளர் ஹிமான்சு கிருஷ்ண மெஹ்ரா மற்றும் டைரக்டர் மீது வழக்குகள் பதிவாகின.
இந்து தெய்வங்களையும் பெண்களையும் மட்டம்தட்டி இகழும் காட்சிகள் இதில் இருப்பதாக பாரதிய ஜனதா கட்ஸி மற்றும் ஹிந்து மஹா ஸபா ஆகியவற்றின் பிரமுகர்கள் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
பாரதீய ஜனதா கடசி எம் பி மனோஜ் கோடக், இப்பிரச்சினையை கவனத்துக்கு ஈர்த்து தடை செய்யக் கோரினார் . உடனே நிகழ்ச்ச்சி தயாரிப்பாளர்கள் இரு முறை மன்னிப்பு கோரி, நிகழ்ச்சியை அரசின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றுவதாக அறிவித்தனர். ஆயினும் இது போதாது, நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று மனோஜ் கோடக் வலியுறுத்தி வருகிறார்.
தாண்டவ் நிகழ்ச்சியில் ஒன்பது பகுதிகள் உள்ளன. இதுவரை 4 மாநிலங்களில் ஆறு வழக்குகள் , இதை எதிர்த்து, பதிவாகியுள்ளன
xxxxx
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் செய்திகளின் சுருக்கம்
ஆந்திரமாநிலத்தில் விஷமிகளால் தாக்கப்பட்ட ராமதீர்த்தம் கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புனருத்தாரணப் பணிகள் நடைபெறும் என்று ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ் அறிவித்துள்ளார் அர்ச்சகர்களின் சம்பளத்தை ஆந்திர அரசு பத்தாயிரம் ரூபாயாக உயர்த்துவதாகவும் தெரிவித்தார்.
ஆயினும் கோவில் தாக்குதல் சம்பவங்கள் ஏமாற்றம் தருவதாக பெஜாவர் மடத்தின் சுவாமிகள் உட்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் . இதனிடையே ஆந்திர மாநில பாரதிய ஜனதா கடசி பிப்ரவரி நாலாம் தேதி முதல் எட்டு நாட்களுக்கு கோவில் பாதுகாப்பு ரத யாத்திரையை அறிவித்துள்ளது
Xxxx

சபரிமலை அய்யப்பன் கோவில் விழா நிறைவு
சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் ஜனவரி 20, நிறைவடைந்தது .
அய்யப்பன் கோவிலில் ஜனவரி 18 திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற களபாபிஷேகத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பிரதீப்குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மன்னர் குடும்ப பிரதிநிதிகள், வழக்கமான பாரம்பரிய முறைப்படி, தந்திரி, மேல்சாந்தி, கீழ்சாந்திகள் ஆகியோருக்கு பண முடிப்புகளை வழங்கினர்.
அய்யப்பன் கோவில் கருவறையின் சாவி முறைப்படி மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதனை மீண்டும் கோவில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி பெற்றுக் கொள்வார்.
மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.
xxxx
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்தார் முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
வரும் ஜனவரி 28-ம்நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வடலூர் தைப்பூச தரிசன பெருவிழா
வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.
இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.
28-ந் தேதி காலை 6 மணி முதல் , 29-ந் தேதி காலை 5.30 மணி வரை ஒவ்வொரு திரையாகத் திறக்கப்பட்டு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
Xxxx

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
Xxxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS- உலக, இந்து சமய, செய்தி மடல், 24-1-2021,