
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9181
Date uploaded in London – – 24 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்னப்பா சர்வர் காப்பில ஈ இருக்கறதே???
Kattukutty
இந்த கேள்விக்கு நகைச்சுவையான பதிலை எழுதி அனுப்பமாறு
JUNIOR STATESMEN வார இதழ் கேட்டிருந்தது. போட்டியில் பரிசு
பெற்ற சில பதில்கள்- ரச குண்டு
“மிளகு பொடி தடவி சாப்பிடுங்க சார் ரொம்ப நல்லா இருக்கும்”
“இது சாதாரண காப்பியில்ல சார், ஈயடிச்சான் காப்பி.”
“ஈ தான விடுங்க சார், அடுத்த டேபிள்காரருக்கு எட்டுக்கால் பூச்சியே
கிடச்சுதாம்”!!!!
“என்னது ஈ யா? சாம்பார்ல தானே போடச் சொல்லியிருந்தார்
மேனேஜர்”???
“குளிர்காலமாச்சே சார், பச்சை தண்ணீல குளிச்சா ஜல தோஷம்
பிடிச்சுகிறதுன்னு சூடான காப்பில குளிக்கிறது”!!!

“என்ன சார், அபாண்டமா பழி சொல்கிறீர்கள்? இது வண்டு தானே”???
“நீங்க சும்மா இருங்க சார், உடம்ப கொதிக்கிற காப்பில சுட்டுகிட்டாதான் அந்த
ஈக்கு புத்தி வரும்”……….
“ஏன் சார் இப்படி சொல்றீங்க, இது காப்பி இல்ல சார், குடிக்கிற
வென்னீர்”!!!
“மிஞ்சி மிஞ்சி போனா அதால இரண்டு சொட்டுக்கு மேல குடிக்க
முடியாது. இதுக்கு போய்……….ஏன் சார்…..!
“ஒரே ஒரு ஈ தானே சார், முன்னைக்கு விட எங்கள் ஓட்டல் எவ்வளவு “இம்ப்ரூவ்” ஆயிருக்கிறது என்று இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள்”

“உரக்கச் சொல்லாதீர்கள், அப்புறம் எல்லோரும் கேட்பார்கள்,
இதுதான் எங்கள் ஸ்டாக்குல இருந்த கடைசீ “ஈ”.!!!!
“வெளில சொல்லாதீங்க, தற்கொலைக்கு தூண்டியதாக
உங்கள் மேல் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்”
“கவலை படாதீங்க சார், சும்மா கொஞ்சம் நீச்சல் பழகிட்டு
பறந்து போயிடும்”……….
“ஈ” யா??? ஐய்யையோ , அது நான் வளர்க்குற ஈ சார், அது …….
எங்க காணோமேன்னு தேடிக்கிட்டிருக்கேன்???
“பக்கத்தில இருக்கிற டிஷ்யு பேப்பர்ல தொடச்சிண்டிட்டு
போயிடும் கொஞ்சம் பொறுங்க சார்”…….
“சொல்றேனேன்னு கோபிச்சுக்காதீங்க, நேற்று கொசு இருந்த
போதும் கோச்சுக்கிட்டீங்க, அதுக்காத்தான் இன்னைக்கு
ஈ யைப் போட்டேன்………….
“காப்பில ஈ யா??? இருக்காதே சார், இப்போதான் “ஹிட்”
மருந்து அடிச்சேனே அதுல”????……….
“அந்த “ஈ” ய சாதரணமாக நினைச்சுடாதீங்க சார், ஒலிம்பிக்குல
நீச்சல் போட்டில பரிசு வாங்கினதாக்கும்.”!!!!
நல்ல வேளை, காப்பில ஈ ன்னு சொன்னீங்களே, அதையும்
பில்லுல மறந்துடாம சேர்த்துகிடறேன்….
ரொம்ப ரொம்ப அதிர்ஷ்ட சாலி சார் நீங்க!!! எங்க காப்பில
ஈ ய கண்டு பிடிச்சவருக்கு ரூபாய்ஆயிரம் பரிசுன்னு முதலாளி
சொல்லிருக்கார் !!!

***
tags- சர்வர், காப்பி, ஈ ,