

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9186
Date uploaded in London – –25 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் BLACK HOLE பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?
எப்போது பார்த்தாலும் ஐன்ஸ்டைனையே ALBERT EINSTEIN புகழ்வது நியாயமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்னரே நம்மவர்தான் எல்லாம் சொல்லி விட்டார்களே! இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் முன்னரே எழுதிவிட்டேன். அதாவது ஒளியின் வேகத்தை மிஞ்சசுவது மனோவேகம், வெளி உலகத்தாரின் ஏழு பண்புகள்; அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு என்றும் எழுதிவிட்டேன். பூமி-சந்திர- செவ்வாய் பற்றிய தொடர்புகள் நவ கிரஹ ஸ்தோத்திரத்தில் இருப்பது பற்றியும் சொல்லிவிட்டேன் . மொழி விஷயத்தில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொல்லியது போல தமிழுக்கும் சம்ஸ்கிருதத்து க்கும் மூலம் ஒன்றுதான் என்றும் உலக மொழிகளுக்கு எல்லாம் நாம்தான் மூலம் என்றும் எழுதிவிட்டேன்.
ஆயினும் கம்பராமாயணத்தை மூன்றாம் முறையாகப் படித்தபோது flash of thought பிளாஷ்! அமெரிக்காவிலுள்ள நண்பர்களுக்காக ஸ்கைப் கிளாஸ்/
Skype Class நடத்திய போது இந்த எண்ணம் பளிச்சிட்டது ; மறுநாள் திருப்பாவையை 10, 15 அல்லது 100 ஆவது படித்த முறையும் அதே பிளாஷ் FLASH அடித்தது. இது லண்டன் நண்பர்களுக்கான நடத்திய Skype Class ஸ்கைப் கிளாஸ்.
முன்னர் படித்த பொழுது எல்லாம் தோன்றாத எண்ணம் இரண்டு தினங்களில் திடீரெனத் தோன்றியதற்குக் காரணம் “அதிகமாகப் படிச்சு படிச்சு கிறுக்குப் பிடிச்சு போச்சு” என்ற சினிமா பாடல் கதைதான்.
இதோ சப்ஜெக்டு-SUBJECT– க்கு வருகிறேன்
ஆண்டாளும் கம்பனும் வானத்தில் உள்ள அதிசய கருந்துளைகள் பற்றிப் பாடியுள்ளனர்
xxx

BLACK HOLE கருந்துளைகள்- பிளாக் ஹோல் என்றால் என்ன?
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பெரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளது.
ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்பு சக்தி கொண்ட பொருள் பற்றிய விஷயத்தை 1783 ஆம் ஆண்டில் பிரித்தானிய வானியல் அறிஞர் ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். பின்னர் ஐன்ஸ்டைன் கொள்கைகள்மூலம் இது விளக்கப்பட்டுள்ளது
இதைக் காணமுடியாவிட்டாலும் இதன் சேஷ்டைகள்/ விஷமங்கள் மூலம் இதை அறிய முடிகிறது . இதற்குள் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான சூரியன்கள்/ நட்சத்திரங்கள் என்ன ஆகின்றன என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் உள (இதில் விக்கிபீடியா விளக்கத்தையும் சேர்த்துள்ளேன்).
Xxxx

கம்ப ராமாயணம்
சூழு மாகடல்களும் திடர்படதுகள் தவழ்ந்து
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ
ஆழியான் உலகு அளந்தஅன்று தாள்சென்ற அப்
பூழையோடே பொடித்து அப்புறம் போயதே
-எதிர்கொள் படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்
படைகளால் எழுந்த புழுதி, உலகத்தைச் சூழ்ந்துள்ள பெரிய கடல்கள் தூர்ந்து போகும்படி , இந்தப் பூமியில் உள்ள ஏழு தீவுகளுக்கும் சென்றது. இப்படிச் சொல்லுவதுதான் எளிதாக இருக்கிறது. ஏன் தெரியுமா ?
திருமால், வாமன அவதாரம் எடுத்து, த்ரிவிக்ரமனாக மாறி, உலகங்களை அளந்த அந்தக் காலத்தில் அவனது திருவடி ஒன்று மேலே சென்று அண்டத்தின் மேற்பகுதியைத் துளைத்த அந்த வழியே , படைகளின் புழுதி சென்று அண்டத்துக்கு அப்பாலும் பரவியது.
இதிலுள்ள சொற்களை கவனிக்க வேண்டும் . இந்த உரைகள் 1000 ஆண்டுக்கும் மேலாக வழி வழியாக சொல்லப்படுவது . இதில் ‘அண்டம்’ என்று சொன்னபோதே இந்த யுனிவர்ஸ் universe – பிரபஞ்சம் வட்ட வடிவில் இருப்பதை நாம் அறிந்தோம் என்று சொல்கிறது. ஏழு கண்டங்கள் எப்படி உருவாயின என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது. வானத்தில் (sky hole) ஓட்டை இருப்பதாகவும் அதன் வழியாக அண்டத்துக்கு அப்பால் (beyond universe) செல்ல முடியும் என்றும் சொல்கிறது. மேகத்தில் துளை என்று சொல்லி இருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். அண்டத்தில் துளை, அதன் வழியாக தூசி போதல் என்பது இப்போதைய பிளாக் ஹோல் Black hole வர்ணனையை ஒத்திருக்கிறது. மேலும் மூன்று அடியால் உலகளந்த விஷயம் ரிக் வேதத்திலேயே உள்ளது. அப்போது அர்த்தம் கற்பித்தோருக்கு இன்றைய விஞ்ஞானம் தெரியாததால் பலவகையாகப் பொருள் கூறினார்கள்.
ஆக கம்பன் காலத்திலேயே ‘அண்டம்’, ‘துளை’ என்ற வருணனை இருந்திருக்கிறது. இதை பகவத் கீதை விஸ்வரூப தரிசனம் விளக்கமாகக் காட்டுகிறது.
பாரகம் – பூமி, கரை, திரைச் சீ லை, தோணி ; பூழை — துவாரம் , துளை .

கம்பனுக்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாள், கம்பன் போல விரிவாகச் சொல்லாவிட்டாலும் 17-ஆவது திருப்பாவையில் ‘கருந்துளைகள்’ பற்றிப் பாடுகிறார்.
அம்பரமே தண்ணீரே சோறே ……
….
……..
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே !
அம்பரம் – ஆடை, ஆகாயம்
ஊடு – இடம், அம்பரம் ஆகாயம் , அறுத்து – துளையிட்டு
ஆக கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் ஆகாயத்தில் black hole துளை உண்டு என்பது தெரியும். அதை திருமாலின் அவதாரத்தால் ஏற்பட்டதாகக் கூறினும் அது பிற்கால விளக்கம் என்பது பெறப்படும் என்னை?
எப்படியெனில், ரிக் வேதத்திலேயே ‘மூன்று அடி உலகளந்த வரிகள்’ வருகின்றன !
இந்துக்கள் Time காலம் என்பதை வட்டப்பாதையில் Circular செல்வதாகக் காண்பர். அதுவே சரி. அதாவது கருந்துளைக்குள் சென்றது மீண்டும் புதுவடிவுபெறும். அறிவியல் வளர, வளர நமது பழைய பாட்டுகளுக்கு புது விளக்கம் பெற முடிகிறது. இப்படிச் சமயப் புஸ்தகங்களில் உள்ளதைப் படித்து விளக்கம் காணும் முன்னர், போஜன் போன்ற மாபெரும் அறிஞ ர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சம்ஸ்க்ருத விஞ்ஞான புஸ்தகங்களை விஞ்ஞானிகள் படித்தால் வருங்காலக் கண்டுபிடிப்புகளை இன்றே சொல்லமுடியும்.

–SUBHAM –
Tags- ஆண்டாள், திருப்பாவை, அதிசயம் 3, கருந்துளை, பிளாக் ஹோல், கம்பன், Black Hole