
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9185
Date uploaded in London – – 25 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“போர்” என்பவன் யார்?
Kattukutty
மூன்றாம் நபரைப்பற்றி ஒருவன் பேசினால் அவன் “அரட்டை”
நம்மைப் பற்றி பேசுபவன் சிறந்த “பேச்சாளன்”.
தன்னை பற்றியே பேசுபவன் “போர்”
ஒரு நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி
நேரத்தில் சுருக்கமாகச் சொல்பவன்!!!
மணி என்ன என்று கேட்டால், கடிகாரம் தயாரிப்பது எப்படி
என்பது பற்றி பேச ஆரம்பிப்பவன்!!!
ஒரு மணி நேரத்தை ஒரு யுகமாக மாற்றுபவன்…….
மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்ற பிறகும்
விடாமல் பேசுபவன்!!!
“போய் வருகிறேன்” என்ற இரண்டு வார்த்தையைத் தவிர,
ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டுபவன் !!!
“சமூகம்” என்பது இரு வகை மனிதர்களைக் கொண்டது்
ஒருவர் “ போரடிப்பவர்”.
மற்றொருவர் “ போரடிக்கப்படுபவர்”.
நாம் நம்மைப் பற்றி பேச விடாமல், தன்னைப் பற்றியே
பேசுபவன்
“போர் மன்னன்” என்ற பட்டத்தை பெறுவது எப்படி????
உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் பற்றி மூச்சு
விடாமல் சொல்வது்.
“போர் “ அடிப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை- ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு அதைப்
பற்றியே பேசுபவர்கள்
இரண்டாவது வகை – இவர்களுக்கு விஷயமே தேவையில்லை
மணிக்கணக்காக பேசுவதற்கு……..
நீங்கள் சுவையாக ஒரு விஷயத்தை சொல்வதாக நினைத்து
சொல்லிக் கொண்டிருக்கும் போது, மற்றவருக்கு கொட்டாவி
வந்தால், சந்தேகமே இல்லை, நீங்கள் ஒரு “போர்”!!!!
போர் அடிப்பவர்களுக்கு ஒரு சாபம் தாங்கள் ஒரு போர் என்று
உணரவே முடியாதது தான்!!!
நீங்கள் அடிக்கும் “போர்”, உங்களாலேயே தாங்க முடியவில்லை
என்றால் நீங்கள் “உலக மகா போர்”!!!!
***

tags – உலக, மகா போர்,