குண்டர்கள் யார்??? (Post No.9196)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9196

Date uploaded in London – – 28 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தினசரி பேப்பரில் தவறாமல் வரும் செய்தி________என்பவர் குண்டர்

தடைசட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார், என்ற செய்தி நிறைய வருவதைப் பார்க்கலாம்.

குண்டர்= hooligan, gangster, goon (in American English)

குண்டர் சட்டம் என்றால் என்ன???

குண்டர்கள் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர் “தமிழ்நாடு கள்ளச் சாரயம் காய்ச்சுவோர், போதைப்

பொருள் குற்றவாளிகள்,குண்டர்கள்பாலியல் தொழில் குற்றவாளிகள்குடிசைப்பகுதி நிலங்களை அபகரிப்போர்,மணல்

திருட்டுவீடியோ குற்றவாளிகளின் அபகாரசெயல் தடுப்பு சட்டம்”

“குண்டர்கள்” என்ற்வரையரையை விளக்கும்போது இந்திய குற்ற

இயல்்சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும்

குற்றம் எதையாவது செய்யக் கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் எனக் கருதினாலே இக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.அதாவது ஒருவர் குற்றத்தை புரிவதற்கு முன்பே அதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தை

சேர்ந்தது இந்த குண்டர்கள் சட்டம்!!!

இதில் முக்கிய விஷயங்கள் என்னவென்றால்

கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வாதிடக் கூடாது. கைது செய்யப்பட்ட நபரோ, அவரது நண்பரோ, உறவினரோதான் வாதிட முடியும்.

நீதி மன்றத்தில் இது விசாரிக்கப்பட மாட்டாது.

கைது செய்யப்பட்டவர் முறையீட்டுக் குழுவைத்தான் அணுக வேண்டும்.இந்தக் குழு , ஓர் உயர் நீதி மன்ற நீதிபதி,ஒரு அமர்வு நீதிபதி,ஒர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட ஒரு விசாரணைகுழு ஆகும்

இக்குழுவினால் குற்றம் உறுதி செய்யப் பட்டால் அந்த நபரை 12 மாதம் சிறையில் வைக்கலாம்

மாநில அரசு விரும்பினால், முன் கூட்டியே விடுவிக்கலாம்.

சரி வாருங்கள் வஷயத்திற்கு வருவோம்.

Xxxxx

நமக்கென்றே கடவுளிடம் வாதாட “பெட்டிஷன்கள்” போட திருப்புகழ்

மூலமாக , “பெட்டிஷன் திலகம்” அருணகிரி நாதர் , யார், யார்

“குண்டர்கள்” என்று “டெஃபனிஷன்” DEFINITION செய்திருக்கிறார்.

அவர்கள் யார் யார் என்று பார்போமா????

குண்டர்கள் யார்???

தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்

ஒருவரிடம் நண்பர் போல் நடித்து, பின்னர் அவருக்கு துரோகம் செய்யும் கீழோர்,

ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்

போதித்த நன்றியை மறந்த கீழோர்.

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள்

அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களை செய்யாமல் கை விட்டோர்.

பெரியோரை தூஷனண பகர்ந்த குண்டர்கள்

பெரியோர்களை திட்டி, வைது, அவர்களை நிந்தித்து, கேவலப்

படுத்தியவர்கள்.

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்

மற்றவருக்கு கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்தவர்கள்

சூளுற வென்ப தொழிந்த குண்டரகள்

சத்திய வார்த்தை என்பதையே ஒழித்தவர்கள்.

தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள்

எப்போதும் தான் அழியாமல் நீண்ட காலம் வாழ நினைத்து

அதற்காக வருந்துவோர்.

நீதியறங்கள் சிதைந்த குண்டர்கள்

நீதியையும் தர்மத்தையும் அழித்தவர்கள்.

மானவகந்தை மிகுந்த குண்டர்கள்

குற்றமும் , ஆணவமும், அகந்தையையும், மிகுந்த கீழோர்.

வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர்கள்

பாச வலையிலும், உலக மாயையிலும் சிக்கி வருத்தப்

கொண்டிருப்போர்

தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்

தெய்வங்களின் சொத்துக்களை அபகரித்த கீழ் நிலையோர்

இதோ, வாக்குச் சித்தர் அருண கிரியாரின் வாய் மொழியைக் கேளுங்கள்.

பாடல் பெற்ற ஸ்தலம் கோடைநகர்- இன்றைய பெயர் சென்னை

அருகிலுள்ள வல்லக் கோட்டை

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டரகள்,

ஓதிய நன்றஇ மறந்த குண்டர்கள………..

இப்போது சொல்லுங்கள் யார் குண்டர்கள்???

நம்மில் பலர்

விசாரணைக் குழு

யமனும், சித்திர குப்தனும்

என்ன தண்டனை???

வாதை நமன்தன் வருந்திடும் குழி விழுவாரே!

வேதனை மிகுந்த யமனுடைய நரகக் குழியில் விழுந்து மிக மிக

வருந்தி கஷ்டப்படுவார்கள்.

கோழிக்கொடியோன் அடி பணியாமல் குவலயத்தே

வாழக்கருதும் மதியிலிகாள்மனம் திரும்புங்கள்,

அல்லவை கடிமின், நல்லவை செய்மின்!!!

— subham—

அருணகிரி நாதர், குண்டர்கள், குண்டர் சட்டம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: