
மரம் பொய் சொல்வதில்லை,வெட்டுகிறோம்;மந்திரி பொய்
சொல்கிறார், மாலை போடுகிறோம்!(Post No.9200)
Compiled BY KATTUKKUTY
Post No. 9200
Date uploaded in London – – 29 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் -20 BY Kattukutty
உண்மை நிலை உணர்வு+கனவுகள்= லட்சியவாதி
உண்மை நிலை உணர்வு-கனவுகள்=மிருகம்
உண்மை நிலை உணர்வு+நகைச்சுவை=யதார்த்தவாதி
கனவுகள்-நகைச்சுவை= வெறியன்
உண்மை நிலை உணர்வு+கனவுகள்+நகைச்சுவை=அறிஞன்
லட்சிய உலகம்எப்படி இருக்க வேண்டும்என்று கனவு காண்கின்ற
சக்தி இருக்க வேண்டும்.
உண்மையில் உலகம் எப்படி இருக்கின்றது என்பதைக்
காண்கின்ற தெளிவு வேண்டும்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
புன்னகையோடு ஏற்றுகொள்கிற மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவனே அறிஞன்.
XXXX
அதோ நிற்கிறாரே,என் உறவுக்காரர்களிலேயே பரம ஏழை…..
அவர் உங்களுக்கு என்ன உறவு???
என் கணவர் !!!
XXXX

மண் பொய் சொல்வதில்லை
மிதிக்கிறோம்
மரம் பொய் சொல்வதில்லை
வெட்டுகிறோம்
மந்திரி பொய் சொல்கிறார்
மாலை போடுகிறோம்


XXXX
வினோத சட்டம்
1779 -ல் ஒரு வினோதமான சட்டம் பிரிட்டனில் இயற்றப்பட்டது.
அதன்படி ஒரு பெண் சென்ட், அழகு சாதனங்கள், பொய்ப்பல்,
குதிகால் உயர்ந்த பாத அணி ஆகியவற்றை தரித்து ஆண்களை
மயக்கி மணந்து கொள்ளக் கூடாது……
இந்த சட்டம் இன்றுவரை ரத்து செய்யப்படவில்லையாம்!!!
XXXX
ஒருத்தி- ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றாரே உன் கணவர்
என்ன பிடித்து வந்தார்???
மற்றொருத்தி – ஜல தோஷம் பிடித்து வந்தார்……….
XXXX
உண்மை செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்புமுன்,
பொய் உலகை பாதி சுற்றி வந்து விடுகிறது !!!
ஜேம்ஸ் கல்லகன்
XXXX
ஒரு அனுபவ பழமொழி
இருட்டில் வருவதெல்லாம் பேயல்ல.உங்கள் மனைவியாகக்
கூட இருக்கலாம்………..
XXXX
ஒரு நல்ல வாக்கியம் இப்படி சிதைந்து கிடக்கிறது…….
வால். ஒரு நயம். லக்கி
அது என்ன வாக்கியம்???
விடை- “ஒரு நல்ல வாக்கியம்”
XXX
மோசமான கை எழுத்துக்கு மற்றொரு பெயர்
“ டாக்டர்களின் வியாதி”!!!!
XXXX
உபயோகிக்க உபயோகிக்க கூர்மை அதிகமாவது “நாக்கு”!!!
XXXX
அஜாக்கிரதை உள்ளவனிடம் திருடர்கள் பிழைக்கிறார்கள்.
நோயாளிகளிடம் மருத்துவர்கள் பிழைக்கிறார்கள்.
காமிகளிடம் வேசியர்கள் பிழைக்கிறார்கள்.
வழங்குவோரிடம் யாசிப்பவர்கள் பிழைக்கிறார்கள்.
வழக்காளிகளிடம் வக்கீல்கள் பிழைக்கிறார்கள்.
மூடர்களிடம் பண்டிதர்கள் பிழைக்கிறார்கள்.
XXXX SUBHAM XXXXXX
tags- ஞான மொழிகள் -20