

சூரியனே போற்றி! – 2 (Post No.9220)
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9220
Date uploaded in London – – 3 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியனே போற்றி! – 2
ச.சீனிவாசன்
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
சூரியனைப் பற்றிய மற்ற விவரங்கள்
சூரியனின் தாயார்/ தகப்பனார் – அதிதி(தட்சன் மகள்),காஸ்யபர்
முதல் மனைவி -சஞ்சிகை( துவஷ்டாவின் @விஸ்வகர்மாவின் மகள்)
பிறந்த குழந்தைகள் -யமன், யமி என்ற யமுனை,பத்திரை,சாவரணி மனு,அஸ்வினி தேவர்கள்,
சுக்ரீவன்
இரண்டாவது மனைவி- சாயா -க்ருத வர்ஷா, க்ருத ஷர்மா என்ற சனிஸ்வரன், பத்ரை,தபதி,
வைவஸ்வத மனு, காலன்
மூன்றாவது மனைவி -நீளா தேவி@வானவில் – சித்திர குப்தன்
நான்காவது மனைவி – குந்தி – கர்ணன்

ஜாதி. ஷத்திரியன்
உத்யோகம் ராஜா
காரகன். பிதுர் காரகன், ஆத்ம காரகன்
லிங்கம். ஆண்
வஸ்திரம். செம்பட்டு
குணம். குரூரர்
தன்மை. பாப கிரகம்
திசாதிபதி. கிழக்கு
வடிவம். சமன்
அவஸ்தை. விருத்தர்
பாஷை. சமஸ்கிருதம் & தெலுங்கு
தாது. எலும்பு
நிறம். சிவப்பு
ரத்தினம். மாணிக்கம்
தான்யம். கோதுமை
புஷ்பம். செந்தாமரை
சமித்து. எருக்கு
வாகனம். மயில், தேர்
மிருகம். பெண் ஆடு
நாடி. பித்த நாடி
சுவை. காரம்
உலோகம். தாமிரம்
ஸ்வரம். ஸ
அதி தேவதை. சிவன்/அக்னி
ப்ரத்யதிதேவதை ருத்ரன்
இஷ்ட காலம் பகல்
வஸ்திரம் சிவப்பு
ஆசனம். வட்டம்
தசா காலம். 6 வருடங்கள்
நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சொந்த வீடு. சிம்மம்
உச்ச வீடு. மேஷம்
நீச வீடு துலாம்
நட்பு. சந்திரன், செவ்வாய், புதன், குரு
பகை. சனி, ராகு, கேது,சுக்கிரன்
பகைவீடுகள். ரிஷபம்,மகரம், கும்பம்
பார்வை. 7 ம் பார்வை
சூரிய காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹப் பிரசோதயாத்


சூரியனுக்கான ஸ்லோகம்
ஐபாகுஸும சங்காசம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்
சூரியனின் கோவில்கள் இருக்குமிடம்
- சூரியனார் கோவில். மங்கலக்குடி
- இந்த கோவிலைப் பற்றிய முழு விரங்களை திருமதி பிரகன் நாயகி சத்ய நாராயணன்
மிகச் சிறப்பாக விக்கியுள்ளர் tamilandvedas no Dated கண்டு மகிழ்க. - மார்த்தாண்ட சூரியனார் கோவில். காஷ்மீர்
- அரசவல்லி சூரியன் கோவில். ஆந்திரா
- நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம்
- நவ கைலாசங்களில் ஒன்றான பாப நாசம்( அம்பாசமுத்திரம் அருகில்)
நீங்களனைவரும் சூரியனை வணங்கி கண்ணொளியும், அறிவொளியும் பெற்று
பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன் - நன்றி, வணக்கம்!
- tags – சூரியன், கோவில்கள், ஸ்தோத்திரங்கள், வழிபாடு ,

