
Post No. 9230
Date uploaded in London – – 5 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kattukutty
EVERY SUCCESSFUL PERSON HAS A PAINFUL STORY,
EVERY PAINFUL STORY HAS A SUCCESSFUL ENDING,
SO ACCEPT THE PAIN AND GET READY TO SUCCESS !!
XXX
YOU CANT BUY LOVE, BUT YOU PAY HEAVILY FOR IT!!!
THERE IS ONE PERFECT CHILD IN THE WORLD,
AND EVERY MOTHER HAS IT.
XXX
HAVING ONE CHILD MAKES YOU PARENT, HAVING TWO
YOU ARE A REFEREE !!!
XXX
NOBODY CAN TOUCH WORDS,
BUT WORDS DO TOUCH EVERYBODY,
WE ARE THE MASTERS OF OUR UNSPOKEN WORDS,
AND SLAVE TO OUR SPOKEN WORDS!!!!
XXX
SUCCESS IS GETTING WHAT YOU WANT,
HAPPINESS IS WANTING WHAT YOU GET!!!
XXX
THE BEAUTIFUL THING ABOUT TODAY IS THAT
YOU GET THE CHOICE TO MAKE IT
BETTER THAN YESTERDAY!!!
XXX
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல்எடுக்க வேண்டாம்.
கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”
என்று எழுதியிருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை
பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்”
XXXX
நான் இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டுமே…..
என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே.
எனக்கு பிடித்தவர்களை என்னிடமிருந்து தூரமாக்கி விடாதே…..
XXX
ஒரு இளநீர் மற்றொரு இளநீரிடம் பேசிக்கொண்டது :-
இளமையில் வழுக்கை ஏற்படுவதும், முதிர்ச்சியில்
வழுக்கை இல்லாமல் போவதும் நினைத்துப் பார்த்தால்
ஆச்சரியமாக இல்லை ???
XXXX

யானை படுகுழியில் விழுந்து விட்டால் தவளை கூட பின்னாலிருந்து
ஒரு உதை கொடுக்கும்
பாரசீக பழமொழி.
XXXX
அறிவாளியுடன் ஒருமுறை உரையாடுவது ஒருமாதம் நூல்களை
படிப்பதை விட மேலானது
– பழமொழி
XXXX
ஒழுக்கம் பிச்சைக்கார உருவத்தில் இருந்தாலும்
கௌரவிக்கப்படும்
– ஜெர்மன் பழ மொழி
XXXX
தனிமை
தனிமை இனிமையானது – வேதாந்திக்கு
தனிமை அழகானது – ஓவியனுக்கு
தனிமை பயங்கரமானது – இரவில் பயந்தவனுக்கு
தனிமை அலுப்பானது – தலைவிக்கு
தனிமை போரடிப்பது – மாணவனுக்கு
தனிமை கொடுமையானது – கோழைக்கு
தனிமை பலவீனமானது – பெண்ணுக்கு
தனிமை சுகமானது – சோம்பேறிக்கு
தனிமை ஆனந்தமானது – பைத்தியத்திற்கு
தனிமை ஆபத்தானது – செல்வந்தருக்கு
தனிமை இசைவானது – ஆராய்ச்சியாளனுக்கு
தனிமை துணிவானது – வீரனுக்கு
தனிமை பயனற்றது – பேச்சாளனுக்கு
தனிமை அன்பானது – பக்தனுக்கு
தனிமை வாய்ப்பானது – சங்கீத் சாதகனுக்கு
தனிமை வெறுப்பானது – காதல் வயப்பட்டோருக்கு
தனிமை மயக்கம் தருவது – குடிகாரனுக்கு
தனிமை உவப்பானது – கஞ்சனுக்கு
XXX
நூல்கள் நிறையவும், நண்பர்கள் குறையவும் இருக்க வேண்டும்.
ஸ்பானிஷ் பழமொழி.
XXXX

கொஞ்சு மொழிகள்
அன்புக்குரியவர்களை நாம் “கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே”
என்று கொஞ்சுகிறோம் அல்லவா???
அது போல பிரஞ்சுக்காரர்கள் “சிறு கீரையே “என்கிறார்கள்.
சீனர்கள் “என் லவங்கப்படையே “ என கொஞ்சுகிறார்கள்.
அரபு நாட்டில் “என் வெள்ளரிக்காயே “என்பதே கொஞ்சும் மொழி.
“இளம் தளிரே “என இனிமையாக கொஞ்சுகிறார்கள பின்லாந்தில்.
“மலரே” என்பது கிரீஸ நாட்டு வழக்கம்.
“பின்கட்டே”என்பார்கள் போலந்துக்காரர்கள்
“காட்டு மலரே” என்று கொஞ்சுவார்கள் லிதுவேனியர்கள்.
“சின்னஞ்சிறு பன்றியே” என்று செல்லமாக கொஞ்சுவது திபேத்தியர்.
“சிறு நத்தையே” என்பது வியன்னா மக்கள் வழக்கம்.
“வெட்டுக் கிளியே”எனகிறார்கள் ஸெர்பியர்கள்.
யூகோஸ்லேவியாவில் “சிறு புல்லே” என்று கொஞ்சுகிறார்கள்.
XXXX
இது தெரியும்……அது தெரியுமா ???
சிறுத்தை தெரியும், உறுத்தை தெரியுமா???
அச்சகம் தெரியும், கச்சகம் தெரியுமா???
குறும்பி தெரியும், எறும்பி தெரியுமா???
கோகுலம் தெரியும், நகுலம் தெரியுமா???
வள்ளுவம் தெரியும், பிள்ளுவம் தெரியுமா???
உறுத்தை — அணில்
கச்சகம்—-குரங்கு
எறும்பி——யானை
நகுலம் ——கீரி
பிள்ளுவம்—-யானை
XXXX
ஒரு சராசரியான பெண், தனக்கு மூளையை விட அழகுதான்
அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பாள்.
ஏனெனில் ஒருசராசரி மனிதன் சிந்திப்பதைவிட, தன்கண்ணால்
காண்பதையே நம்புகிறான்.
XXXX
நாளாக நாளாக கணவன்மார்களின் “வருமான” சக்தி,
தங்கள் மனைவிமார்களின் “விரும்பும்” சக்தியை சரிக் கட்டவே முடிவதில்லை.
XXXX

ஒரு மாணவனின் ஆராய்ச்சி
காந்தம் என்பது இரும்பை இழுக்கக் கூடியது.
அந்த காந்த சக்தி என்னும் “பவர்” பெண்களிடம் தான் அதிகம்
காணப்படுகிறது!!!
XXXX SUBHAM XXXX

TAGS- ஞான மொழிகள் 21,