உலக இந்து சமய செய்தி மடல் 14-2-2021(Post No.9264-B)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9264-B

Date uploaded in London – –14 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று பிப்ரவரி -14 ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வசூல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை மக்களிடம் பெறப்பட்டுள்ள நன்கொடை குறித்து ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, பிப்ரவரி 13 ஆம் தேதி,   குஜராத் மாநிலம் சூரத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும், ஹிந்து கடவுள் ராமருக்கான கோவிலுக்கு, பைசாபாதைச் சேர்ந்த, முஸ்லிம்கள், 5,100 ரூபாய் நன்கொடை நன்கொடை அளித்து உள்ளனர்.


”ராமர் ஹிஸ்துஸ்தானுக்கு சொந்தம்; நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவோம்,” என, அயோத்தி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர் ஹாஜி சயீது அகமது கூறியுள்ளார்.
”நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவுவதை உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளோம். ”ராமர் கோவிலுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நன்கொடை அளித்துள்ளதை வரவேற்கிறோம்,” என, பைசாபாதின் ராம் பவனின் தலைவர் சக்தி சிங் கூறியுள்ளார்.

Xxxx

தை அமாவாசை! தமிழகம் முழுவதும் புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!!

தை மாத அமாவாசையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11ம் தேதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடி,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். பலர் காவிரியில் தர்ப்பணம் கொடுத்து பிண்டங்களை கரைத்து வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரை, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்தனர்.

தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.

xxxx

புனித நீராடிய பிரியங்கா

: ‛மவுனி அமாவாசையை’ முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள சங்கமில் congress, பொதுச்செயலாளர் பிரியங்கா புனித நீராடினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பகுதியில் கும்பமேளா நடைபெறுவது வழக்கம். அந்த இடத்தில் பிப்ரவரி -11 ஆம் தேதி ‛மவுனி அமாவாசையை’ காங்., பொதுச்செயலர் பிரியங்கா, புனித நீராடினார். அப்போது அவருடன் உதவியாளர்கள், மகள் மிராயா மற்றும் காங்., எம்எல்ஏ ஆராதனா மிஸ்ரா ஆகியோர் உடன் இருந்தனர். புனித நீராடிவிட்டு, பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக, அவர் நேரு – காந்தி குடும்ப இல்லமான ஆனந்த் பவனை பார்வையிட்டார். பிறகு, அங்கிருந்து படகில் பயணம் மேற்கொண்டார்.

xxx

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு தை அமாவாசை தினமான நேற்று மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டது.

Xxx

ராமேஸ்வரம் தீர்த்தக் கிணறுகளில் புனித நீராட அனுமதி

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும்  பிப்ரவரி  1 -ஆம் தேதி முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னர் செப்டம்பர் மாதம் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில்  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தீர்த்தக் கிணறுகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 11 மாதங்களுக்கு பிறகு  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள  22 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடி வருகின்றனர்.

Xxxx

கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் பிப்ரவரி -9 ஆம் தேதி அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.

கிருபானந்த வாரியார், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxx

திருப்பதி கோவிலில் பிப்ரவரி -19 ஆம் தேதி ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் இருந்து இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

xxx

பாகிஸ்தானில் ஹிந்து கோவில்கள் நிலை; படு மோசம்

 பாகிஸ்தானில், பாரம்பரிய கலாசார சின்னங்களாக விளங்கும் பெரும்பாலான ஹிந்து கோவில்கள், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில், பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணம், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், ‘ஜமாத் உலேமா இ இஸ்லாம்’ என்ற அமைப்பினரால் இடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், சோஹப் சுடல் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.இக்குழு, சக்வாலில் உள்ள கடாஸ் ராஜ் மந்திர், முல்தானில் உள்ள பிரகலாத் மந்திர் உட்பட பல வழிபாட்டு இடங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழங்கியது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிந்துக்கள் வழிபட்டு வந்த பாரம்பரிய கோவில்கள், சீக்கியர்களின் குருத்துவாராக்கள், தற்போது படு மோசமான நிலையில் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற நான்கு இடங்களில், இரண்டு மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. உடனடியாக, தெரி மந்திர், கடாஸ் ராஜ் கோவில்கள், பிரஹலாத் மந்திர், ஹிங்லஜ் மந்திர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.



ஹிந்து, சீக்கியர் ஆகியோரின் நுாற்றுக்கணக்கான சொத்துக்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை, இந்த அமைப்பு ஆக்கிரமித்துள்ளது.மோசமான நிலையில் உள்ள, சிறுபான்மையினரின் புராதன வழிபாட்டு தலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

xxx

இறுதியில் ஒரு சுவையான செய்தி

எமதர்மராஜா வேடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் அதிகாரி

மத்திய பிரதேசத்தில் எமதர்மராஜா வேடமணிந்து போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்து மதத்தில் மரண தேவதையான எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்ற செய்தியை பரப்பவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்

Xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

 tags- உலக இந்து சமய ,செய்தி மடல், 14-2-2021,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: