கல்யாணமானவரின் கவலை! பிரும்மச்சாரியின் பதில் (Post.9315)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9315

Date uploaded in London – – 27 FEBRUARY 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் 25
Kattukutty

குழப்பத்திலிருக்கும் போது “அறிவு” சொல்வதைக் காட்டிலும்
“இதயம்” சொல்வதைக் கேட்பது நல்லது……..பிழை நேர்ந்தாலும்
அவ்வளவு வருத்தம் ஏற்படாது !!! – பெர்னாட் புரூஷ்

XXXX

சிலப்பதிகாரத்தை இரண்டேவரியில் சொன்னார் அப்துல் ரஹ்மான்
என்ற பேராசிரியர்…….
பால் நகையாள் வெண்முத்து பல் நகையாள் கண்ணகியாள்,
கால்நகையால் வாய்நகைபோய் கழுத்து நகை இழந்த கதை.!!!

பால்நகையாள்- பால் உணர்ச்சி தோன்றும்படி நகைக்க மாட்டாள்
வெண்முத்து பல் நகையாள்- முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால்நகையால் -கால் சிலம்பினால்
வாய் நகை போய் -புன் சிரிப்பு மறைந்து
கழுத்து நகை – தாலி

XXX

கல்யாணமானவரின் கவலை
உலகத்தில் பெண்களே இல்லை என்றால் நம் சட்டை பித்தான்களை
யார் தைத்து கொடுப்பார்கள்???
பிரும்மச்சாரியின் பதில்
பெண்களே உலகத்தில் இல்லையென்றால் நாம் ஏன் உடை
உடுத்த வேண்டும்???

XXXX

இலங்கையில் ராவணனுடைய ஆட்சிக் காலத்தில், யாராவது பேசும்
போது, “வந்தாராம், போனாராம், சொன்னாராம் “என்று பேசின
பேர்களையெல்லாம் பிடித்து தண்டனை கொடுக்கச்சொன்னான்
ராவணன்……ஏனென்றால் அனுமன் ராம், ராம் என்று சொல்லிக்
கொண்டே அசோக வனத்தையே அழித்ததைப் பார்த்த பிறகு
ராம், ராம் என்ற ராம நாமத்தை கேட்டதும் பயமும், வெறுப்பும்
ஏற்பட்டு விட்டது.ஆகவே தான் “ராம்” என்கிற பதத்தை யாரும்
உச்சரிக்க க்கூடாது என உத்தரவு போட்டானாம்!!!!
–கம்பரடிப்பொடி சா. கணேசன் சொற்பொழிவிலிருந்து

XXX

ஒரு பெண்மணி மற்ற ஓருத்தியிடம் கவலையுடன் கூறினாள்:
என்கணவர் சூரிய ஒளி பட்டவுடன்தான் தினமும் எழுந்திருக்கிறார்….
மற்றொருத்தி :அதனாலென்ன காப்பி கொடுத்து குளிக்கச் சொல்லவேண்டியது
தானே????
அதற்கு அவள் :
“என் வீட்டு ஜன்னல் மேற்கே பார்த்தல்லவா இருக்கிறது???”

XXX

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்???
“ஐயோ, போய்விட்டாரே”, என்று சவப் பெட்டியைச் செய்கிறவன் கூட
வருத்தப் படவேண்டும்
****

tags -ஞானமொழிகள் 25

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: