
Post No. 9319
Date uploaded in London – – 28 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kattukutty
( திரு முருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் கேட்டது)
படைப்புக் கடவுளாகிய பிரம தேவனிடம் உலோகத்திலேயே உயர்ந்த
பொருளாகிய தங்கம் அவர் காலடியில் விழுந்து கதறி அழுதது.
பிரம தேவர்,”எனதருமைத் தங்கமே, நீ ஏன் அழுகிறாய் ? உனக்கு என்ன துன்பம்?
உலகிலேயே எல்லாரும் உன்னைத்தானே அதிகம்
மதிக்கிறார்கள்? உன் அழுகைக்கு காரணம் என்ன?” என்று பரிவுடன் கேட்டார்.
தங்கம், “தந்தையே,என்னை எல்லோரும் போற்றுகின்றார்கள், ஏத்துகின்றார்கள்.
உயர்ந்த உள்ளத்தைக் கூறும்போது தங்கம் போன்ற
உள்ளம் என்று புகழ்கிறார்கள். பொற்கொல்லர்களால் தான்
எனக்கு வேதனை ஏற்படுகிறது” என்றது.
பிரம தேவர் : “தங்கமே, பொற்கொல்லர்கள் உன்னை சுத்தியலினால்
தட்டுகிறார்களே அதனால் உனக்கு துன்பமா?”
தங்கம் : “அப்பா, பொற்கொல்லர்கள் தட்டுவதினால் எனக்கு துன்பம்
இல்லை……அவர்கள் தட்டுவதினால் தான் நான் தகடு ஆகி சுவாமிக்கு
கவசமாகி எல்லோராலேயும் வணங்கப் பெறுகிறேன்”
பிரம தேவர் : “உன்னை உருக்குவதினால் உனக்கு துன்பமா?”
தங்கம் : “இல்லை , இல்லை உருக்குவதினால்தான் மாற்றுயர்ந்து, ஒளி பொருந்தி சுடரும்
பொன்போல் மிளிர்கின்றேன்”.
பிரம தேவர் : “ஓஹோ, பொற்கொல்லர்கள் சிறிய துளையிலிட்டு கம்பியாக இழுக்கிறார்களே
அதனால் துன்பமோ”?
தங்கம் : “இல்லையப்பா, பொற்கொல்லர்கள் கம்பியாக இழுப்பதினால்தான்
நான் மணிகளைக் கோர்க்க பயன்படுகிறேன்”.நல்லவர்களைப்
பார்த்து “தங்கக் கம்பி”, எனகிறார்கள். அதனால் எனக்கு புகழ் தான் ஏற்படுகிறது்”.
பிரம தேவர் : “என் அன்புள்ள தங்கமே,அழாதே பொற்கொல்லரகளால்
உனக்கு வேறு என்ன விளைகின்றது, விவரமாகக் கூறு”
தங்கம் : “ என் பிதாவே, உயர்ந்த ஒருவனிடம் தாழ்ந்தவனைச் சேர்த்துப் பேசுவது
எத்துணை அநியாயம்?பாலுடன் காடி சேர்க்கலாமா? வைரத்துடன் கண்ணாடி துண்டை
சேர்க்கலாமா? பொற்கொல்லர்கள் மாற்றுயர்ந்த என்னை ஒரு தட்டிலிட்டு ஒரு
காசுக்கும் பெறாத குண்டு மணியை அல்லது சாதாரண பித்தளை எடையை இட்டு
தராசில் நிறுக்கிறர்களே? இதை விட எனக்கு வேறு அவமானம் உண்டா? இதனால் தான்
மனம்புண்பட்டு அழுகிறேன்”
இதோ அந்தப் பாடல்
“என்றும் உயர்ந்த எனை எங்குமுள பொற்கொல்லர்
குன்றிமணியுடனே கூட்டுகின்றார், நன்றியிதோ
தந்தையே, தந்தையே, என்றயன்பால் தங்கம்
சிந்தையே நொந்தழுததே” !!!
ஆதலால் உயர்ந்தோரை, தாழ்ந்தோருடன் ஒப்பிடுதல் கூடாது.
****
tags – தங்கம் அழுதது