
Post No. 9328
Date uploaded in London – – 2 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
if u want to listen to the speech, please go to facebook.com/ gnanamayam
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். இந்த வேக யுகத்தில் சுபிட்சமான வாழ்க்கை சாத்தியமா?
இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ எளிய வழிகள் ஏதேனும் உள்ளனவா? அனைவரின் மனதிலும் எழும் கேள்விகள் இவையே தான்!
சாத்தியம் தான் என நமது அறநூல்கள் உரத்த குரலில் கூவுகின்றன.
அதற்கான வழிகளை அன்றாட வாழ்க்கை முறையுடனும் வீட்டின் அமைப்பு முறையுடனும் கலந்து அதைக் கடைப்பிடிக்குமாறு அற நூல்கள் முறையாகச் சொல்லி இருக்கின்றன. மறந்து விட்டோம்; அவ்வளவு தான்!
அதைக் கடைப்பிடிக்க உத்வேகம் கொண்டு, சிறிது நேரம் அதற்கென செலவழித்துக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும்; நல்லதே நடக்கும்.
அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் பாங்க் பாலன்ஸைக் bank balance குறித்து வைத்துக் கொண்டு சில வாரங்கள் கழித்து மீண்டும் உங்கள் பாங்க் பாலன்ஸைச் சரி பார்த்தால் உள்ளம் மலரும்; இல்லம் மகிழ்ச்சியுறும்.
அதே போல மனதிருப்தியை அடையவும் (பார்க்கப் போனால் அது தானே வாழ்வின் இறுதி லட்சியம்) அந்த விதிகள் வழி வகுக்கும்.
இந்த முறைகள் வேத அடிப்படையிலான புராண சாஸ்திரங்கள், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், சீன வாஸ்து முறைகள், உள்ளிட்ட நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. ஒவ்வொன்றையும் விரிப்பின் பெருகுமாதலால் சுருக்கமாகச் செய்ய வேண்டுவன மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
வீட்டின் மைய பாகம்
வீட்டின் மைய பாகம் பிரம்ம ஸ்தலம் எனப்படும். இந்தப் பகுதியில் எதையும் வைக்காமல் சுத்தமாக வெற்றிடமாக இருக்கச் செய்ய வேண்டும். இதற்கென சோபாக்கள், நாற்காலிகளைச் சிறிது மாற்றி வைக்க வேண்டுமெனில் அதை உசிதப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
வீட்டின் நுழைவாசல்
வீட்டின் நுழைவாசலை எடுத்துக் கொள்வோம்.
அங்கு வாசலில் முன்னே எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது.
வாயிலை ஒட்டி துடைப்பம், செருப்புகளை வைக்கும் ஸ்டாண்டுகள் இருக்கக் கூடாது.
கண்ணாடியைச் சிலர் நுழைவாயிலுக்கு எதிரே மாட்டுவது வழக்கம். உள்ளே வருகின்ற நல்ல சக்தியைப் பிரதிபலித்து இது வெளியே அனுப்பி விடும். ஆகவே கண்ணாடியை நுழை வாசலுக்கு எதிரே மாட்டக் கூடாது.
வீட்டின் வாயிலைப் பார்த்தவாறு லாஃபிங் புத்தா எனப்படும் புத்தரின் சிலையை வைப்பதன் மூலம் செல்வ வளம் சேரும்.
குபேரனின் திசை வடக்கு
வடக்குத் திசை செல்வத்தின் திசை. அங்கு கல்லா பெட்டியை – காஷ் பாக்ஸை வைத்திருத்தல் நலம்.
வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டே இருந்தால் கடன்கள் தீரும்; செல்வம் சேரும்.
இந்த அமைப்பைச் செய்ய ஆரம்பித்தவுடன் வரு நல்ல அறிகுறியை இனம் காணுதல் முக்கியம். இப்படி ஒரு நல்ல செய்தி அல்லது வருமானம் (24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்குள்) ஏற்படின் நீரில் பூக்களைச் சேர்க்கலாம்; பன்னீரைச் சேர்க்கலாம். பலன்கள் அதிகரிக்கும். இதை அனுபவத்தில் கண்டால் மட்டுமே உண்மையை உணர முடியும்.
பணப்பெட்டியில் (காஷ் பாக்ஸ்) சம்பிரதாயமாக பழைய காலத்தில் திருவிதாங்கூர் அம்மன் காசு, சங்கு பொறித்த காசு, தாமரை பொறித்த காசு, லக்ஷ்மி படம் பொறித்த பழைய கால காசு ஆகியவற்றை வைத்தல் மரபு. பெரியவர்கள் கொடுத்த ஆசீர்வாதப் பணங்களையும் செலவழிக்காமல் சேர்த்து வைப்பது சில குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கம். (குறைந்தபட்சம் ஒரு சில காசுகளையாவது அதிலிருந்து எடுத்து வீட்டில் நிரந்தரமாக வைத்திருப்பர்)
பூஜை அறையும் மங்கலச் சின்னங்களும்
பூஜை அறையில் இஷ்ட தெய்வங்களின் படங்களை முறையாக மாட்டி அதற்கு அன்றாடம் நைவேத்யம் (ஒரு இலை அல்லது சிறிது நீர், அல்லது ஒரு பழம், கல்கண்டு ஏதேனும் ஒன்று பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்பார்கள்) செய்தல் அவசியம்.
மங்கலச் சின்னங்கள் ஏராளம் உள்ளன. ஓம், ஸ்வஸ்திகா உள்ளிட்ட ஏராளமான அடையாளச் சின்னங்கள் ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் விலைக்குள் அழகுறக் கிடைக்கின்றன. நுழை வாயில் கதவிலும் பூஜை அறை உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சின்னங்களை இடம் பெறச் செய்தல் மரபு.
மகிழ்ச்சி தரும் சித்திரக் காட்சிகள்
போர், வன்முறைக் காட்சிகளுடனான படங்கள், வேட்டையாடிய மிருகங்கள் ஆகியவற்றை வீட்டில் தொங்க விடக்கூடாது. இவை சண்டை சச்சரவை வீட்டில் தூண்டி விடும்
மாறாக மகிழ்ச்சியைச் சித்தரிக்கும் அழகிய குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை பிரதானமான இடத்தில் மாட்டி மகிழலாம்.
லவ் பேர்ட்ஸ் LOVE BIRDS போன்றவற்றை பெட் ரூமில் BED ROOM மாட்டுவதன் மூலம் அன்யோன்யமான கணவன் மனைவி உறவு அமையும்.
TO BE CONTINUED………………………………………….

TAGS- செல்வம் ,மகிழ்ச்சி , எளிய வழிகள்