விவாக ரத்து பற்றி 2 வக்கீல்கள் பேசியது : ஞான மொழிகள்-28(9338)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9338

Date uploaded in London – –     4 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு வக்கீல் இன்னொருவரிடம், “கொஞ்சம் முன் யோசனை இருந்தால், பல விவாக ரத்துக்கள் நடந்தே இருக்காது்.

மற்றொருவருன் பதில் “ ஏன், சில விவாகங்கள கூடத்தான்!!!

xxx

முதுமலைக் காட்டில் சுற்றுலா தகவல் புத்தகத்தில் உள்ளது

TAKE NOTHING BUT PICTURES !!!

LEAVE NOTHING BUT FOOT PRINTS !!!

KILL NOTHING BUT TIME !!!

Xxxx

சில விஷயங்களை நான் நிச்சயமாக சொல்வேன்

இன்னொருவரின் கணவரை நான் அபகரிக்க மாட்டேன்.

கல்யாணமானவருடன் ஒரு விவகாரமும் வைத்துக்கொள்ள மாட்டேன்.

பண விஷயத்தைப் பொருத்தவரை சொன்ன வார்த்தையை காப்பாற்றுவேன்.

இப்படி சொன்னதோடுமட்டுமல்லாமல் நடந்தது காட்டியவர்- நடன நடிகை ஹெலன்

xxxx

வள்ளுவர் வாக்கு

எத்தனை பொருள்களைத் துறக்கிறோமோ அத்தனை பொருள்களிலிருந்தும் நேரிடும் துன்பம் கிடையாது.

உதடு ஒட்டாத அந்தக் குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

xxx

கேள்விபதில் ரசித்தது ( ஒரு நடிகரிடம் )

நீங்கள் நன்றாகப் பாடுவீர்களாமே??? இசை அமைப்பாளராக

மாறும் எண்ணம் உள்ளதா???

காற்றாடி உயரமாக விடத் தெரிந்தவனை விமானம் ஓட்டுவீர்களா

என்று கேட்பது போலிருக்கிறதே???

xxxx

துரியோதனனும் சாப்பாடும்

அவன் ரொம்ப பணக்காரனாயிற்றே, துரியோதனன் மாதிரி

சாப்பிடுவானாக்கும்……….

அதென்னதுரியோதன ன் மாதிரி

சாப்பாட்டுத் தட்டிலிருந்து ஒரு கவளத்தை எடுத்து உண்டோமானால்

மீதி இருப்பது எச்சில் தானே ???அந்த எச்சில் சோற்றை தொடாமல்,

அடுத்த கவளத்தை அடுத்த தட்டிலிருந்து உண்பானாம் துரியோதனன்!!!

xxx

ஒரு சொல் ஜவுளிக்கடை”- அதாவது கறார் விலை என்பதற்கு

பதிலாக இப்படி எழுதியிருக்கிறார்கள் ஒரு ஜவுளிக்கடையில்!!!

எவ்வளவு தான் கலர் படங்களில் நடித்தாலும் நட்சத்திரங்கள்

பணம் வாங்கும்போது மட்டும்பிளாக் அண்டு ஒயிட்” BLACK AND WHITE தான்!!!

xxx subham xxx

tags- விவாக ரத்து , வக்கீல்கள் ,  ஞான மொழிகள்-28, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: