கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி! (Post No.9345)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9345

Date uploaded in London – –  6 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி!

ச.நாகராஜன்

கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’!

ஜனனீ  ஜன்ம பூமிஸ்ச ஜாஹ்னவீ  ச ஜனார்தன: |

ஜனக: பஞ்சமஸ்சைவ ஜகாரா: பஞ்ச துர்லபா: ||

பெற்ற தாய், பிறந்த பொன்னாடு, புனித நதியான கங்கை (ஜாஹ்னவீ), ஜனார்தனர் (கிருஷ்ணர்), தந்தை – இந்த ஐவரும் இந்த உலகில் மிக அரிதாகக் கிடைப்பவர்களே! இவை அனைத்தும் ஜ என்ற சம்ஸ்கிருத எழுத்தில் ஆரம்பிக்கின்றன என்பதால் இவை ‘பஞ்ச ஜகாரம்’ என்று அழைக்கப்படுகின்றன.

These five –  the mother, the motherland, the holy river Ganga (Jahnavi), God Krishna (Janardana), and fifthly, one’s own father – are rarely met with in the world. All these five in Sanskrit beging with the letter ‘ja’.

(English Translation by Kalyan-Kalpataru monthly April 2020 issue)

*

பூரணத்வம் கொண்ட வாழ்க்கை!

வாணி சரஸ்வதி யஸ்ய பார்யா புத்ரவதி சதி |

லக்ஷ்மீர்தானவதி யஸ்ய சபலம் தஸ்ய ஜீவிதம் ||

எந்த ஒருவனுடைய பேச்சு அன்பாகவும், கம்பீரமாகவும் இருக்கிறதோ, எவனுக்கு உண்மையுள்ள மனைவி இருக்கிறாளோ, எவளுக்கு மகன் இருக்கிறானோ, எவனுடைய செல்வம் தானமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த ஒருவனுடைய வாழ்க்கை பூரணத்வம் கொண்டதாக ஆகிறது.

Fruitful is the life of the man whose speech is elegant and affectionate, who has a faithful wife, the mother of a son, and whose wealth is given in charity.

(English Translation by Kalyan-Kalpataru monthly May 2020 issue)

*

தாயின் மதிப்பு!

உபாத்யாயாம் தஷாசார்ய ஆசார்யாணாம் சதம் பிதா |

சஹஸ்ரம் து பித்ரும் மாதா கைர்வேணாதிரிச்யதே ||

சாதாரண உபாத்தியாயர்களை விட ஒரு ஆசாரியர் பத்து மடங்கு உயர்வானவர், அப்படிப்பட்ட நூறு பேர்களை விட ஒருவனின் தந்தை உயர்ந்தவர், ஆனால், அப்படிப்பட்ட ஆயிரம் தந்தைகளை விட ஒரு தாய் மதிப்பில் உயர்ந்தவள்.

A preceptor in higher branches of knowledge is more than ten ordinary teachers, one’s father is more than a hundred such preceptors, but one’s mother surpasses a thousand fathers in respectability.

(English Translation by Kalyan-Kalpataru monthly June 2020 issue)

*

கெட்ட விதியை விலக்க வழி!

துர்ஸங்கே துர்மதிஸ்சைவ துக்கதாரித்ரயதாயகௌ |

த்யாஜ்யௌ வினா விலம்பம் தௌ துர்கதேமோர்க்ஷாமிச்சதா ||

துராத்மாக்களின் சேர்க்கையும் துர்மதியும் துக்கத்தையும் தரித்திரத்தையும் தருபவையாகும். எவன் ஒருவன் இவற்றிலிருந்து விடுபட நினைக்கிறானோ, எவன் ஒருவன் கெட்ட விதியை விலக்க நினைக்கிறானோ அவன் இவற்றை தாமதமின்றி விலக்க வேண்டும்.

Evil company and evil-mindedness are both harbingers of misery and indigence. He who desires redemption and to be free from evil destiny should keep away from them without delay.

(English Translation by Kalyan-Kalpataru monthly July 2020 issue)

*** subham ***

tags – பஞ்ச ஜகாரம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: