
Post No. 9346
Date uploaded in London – – 6 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் -29
Kattukutty
இராவணனை அழித்து சீதையை மீட்டு இராமர் அயோத்தி திரும்பினாராம்.அப்போது சீதை
தன்னுடன் சில வானரப் பெண்களையும் அழைத்துச் செல்ல விரும்பினாராம்.
அதனால் கிஷ்கிந்தையிலிருந்து சில வானரப் பெண்களை அழைத்து
வந்தனராம்.அவர்களுக்கு தலையில் முடி இல்லாமல் உடல்
முழுவதும் முடி இருந்தது.அதனால் தலையில் நீண்ட முடியுடைய
சீதையைக் கண்டு வியந்தார்களாம்!!!
எவ்வளவு நீண்ட தலை முடி என்று சொன்னார்களாம் அனைவரும்!!!
ஒரு பெண் குரங்கு “இவள் எவ்வளவு அழகிய வதனத்தை உடையவள்”
என்று வியந்தாளாம்.
மற்றொரு பெண் குரங்கு அவளைத் தொட்டுப்பார்த்து “ எவ்வளவு
மென்மையான சரீரம்” என்னு வியந்தாளாம்.
இதையெல்லாம் கண்ட ஒரு வயதான குரங்கு சீதைக்கு திருஷ்டி
கழித்து, பின் சொன்னதாம், “இவளை இவ்வளவு அழகாக படைத்த இறைவன்
ஒரு நீண்ட வால் வைக்க மறந்து விட்டானே” !!!
( சிவானந்த விஜய லட்சுமி சொற் பொழிவிலிருந்து )
****
“அழகியாகவும் இருக்க வேண்டும், ஆனால் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்றால்
அது நடக்காத காரியம்”—
பெயர் சொல்ல விரும்பாத ஒரு நடிகை
***
“பெண்கள் நிறைய உடை வாங்குகிறார்கள், ஆனால் குறையக்
குறைய உடுத்துகிறார்கள்” – கூறியவர் – கோட்ஸ்
***
நாம் அன்பினால் கடவுளுக்கு பயப்பட வேண்டும். ஆனால் பயத்தினால், கடவுளுக்கு
அன்பு செலுத்தலாகாது. – காந்திஜி
***
காதல் என்பது சுறுசுறுப்புள்ளவர்களின் சோம்பேறித்தனம்.
சோம்பேறிகளின் சுறுசுறுப்புத்தனம் !!! சொன்னவர் – LIGHTEN
முட்டாள்களின் மனது அவர்களின் வாயில் இருக்கிறது.
அறிவாளிகளின் வாய் அவர்களது மனதில் இருக்கிறது்!!!
– பெஞ்சமின் பிராங்க்ளின்
இருட்டிப் போய்விட்டது என்பதற்காக ஒத்திப்போடாத ஒரே விளையாட்டு காதல் தான்!
சொன்னவர் – லைன்
ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் முடவன்- விமர்சகன்……
– கூறியவர் – பாலக்
முகத்தில் சோப்பு காய்ந்து கொண்டிருக்கும் போது நீங்கள் தேடும்
பொருள் – பிளேடு
யாரோ

tags – ஞான மொழிகள் -29