மஹாத்மா என்பவர் யார்? (Post No.9391)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9391

Date uploaded in London – –  17 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷித சுரங்கம்

மஹாத்மா என்பவர் யார்?

ச.நாகராஜன்

மஹாத்மா என்பவர் யார்?

விபதி தைர்யமதாப்யுதயே க்ஷமா சதஸி வாக்படுதா யுதி விக்ரம: |

யஷஸி சாபிருசிவ்யர்ஸனம் ஷ்ருதௌ ப்ரக்ருதிசித்தமிதம் ஹி மஹாத்மனாம் ||

வீழ்ச்சியுற்ற காலத்தில் தைரியம், வளமாக இருக்கும் காலத்தில் எளிமை, யுத்தத்தில் வீரம், புகழ் பெறுவதில் பெரும் ஆசை, சாஸ்திர ஞானத்தில் ஆழ்ந்த பற்று ஆகிய இந்த குணங்களை இயல்பாகக் கொண்டிருப்பவரே மஹாத்மா ஆவர்.

Fortitude in adversity, humbleness in prosperity, eloquence in council, bravery in war, strong desire for fame and warm attachment to Shastric learning, are the natural attributes of noble-minded (great-minded) persons.

(English translation – Kalyana-Kalpataru – December 2015 issue)

*

சண்டை போட்டாலும் நல்லவருடன் மட்டுமே போடு!

சத்திரேவ சஹாசீத் சத்தி: குர்வதி சங்கதிம் |

சத்திவிர்வாதம் மைத்ரீம் ச நாசத்தி: கிஞசிதாசரேத் ||

நல்லவருடனேயே ஒருவர் சேர்ந்து இருக்க வேண்டும். அவருடனேயே அமர்ந்து பேச வேண்டும். நட்போ, சண்டையோ அதுவும் கூட நல்லவருடனேயே இருக்க வேண்டும். கெட்டவருடன் ஒருபோதும் தொடர்பை ஒருவர் கொள்ளக் கூடாது.

One should keep company of virtuous people, Sit and talk with them only. If there is any friendship or even enmity that should only be with virtuous persons. One should have no contact with evil ones.

(English translation – Kalyana-Kalpataru – October 2015 issue)

*

கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை விட பிச்சை எடுப்பது மேல்!

வரம் தாரித்ர்யமன்யாயப்ரபவாத்திபவாதிஹ |

க்ருஷதாபிமதா தேஹே பீனதா ந து ஷோபத: ||

கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை விட பிச்சை எடுப்பது மேல். பெருத்த தொப்பையுடன் இருப்பதை விட ஒல்லியான ஆரோக்கியமான உடலுடன் இருப்பதே மேல்.

It is better to remain poor than getting rich by unfair means. A thin healthy body is preferable to a bulging stomach.

(English translation – Kalyana-Kalpataru – January 2016 issue)

*

புத்திமான்கள் சங்கீத சாஸ்திரம் கற்று வாழ்வர்; மூடர்களோ…!!!

கீதசாஸ்த்ரவிநோதேன காலோ கச்சதி தீமதாம் |

வ்யசனேன து மூர்கானாம் நித்ரயா கலஹேன வா ||

புத்திமான்கள் சங்கீதமும் சாஸ்திரமும் கற்று வாழ்வர். மூடர்களோ தூங்குவதிலும் கலகம் செய்வதிலும் தங்கள் நேரத்தை வீணாக்குவர்.

Intelligent people spend their time in pursuit of music and literature while fools waste their time in sleeping or useless feuds.

(English translation – Kalyana-Kalpataru – February 2016 issue)

*

செல்வம் தானே தேடி வரும்படி இருக்க முயற்சி செய்!

நோதத்வாநர்திதாமேதி சதாம்போபி: ப்ரபூர்யதே |

ஆத்மா து பாத்ரதாம் நேய: பாதமாயாந்தி சம்பத: ||

கடலானது நீருக்காக பிச்சை எடுப்பதில்லை. தானாகவே நதிகள் எப்போதும் நீரைச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றன. அது போலவே தானாகவே செல்வம் வந்து சேரும்படி ஒருவன் வாழ முயற்சிக்க வேண்டும்.

The ocean does not go begging for water and yet is constantly poured with it (by rivers). One should strive to become deserving as riches automatically flow unto a deserving person.

(English translation – Kalyana-Kalpataru – March 2016 issue)

*

–subham—

tags- மஹாத்மா, செல்வம், சங்கீதம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: