
Post No. 9427
Date uploaded in London – –27 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
சார்வரி வருஷம் முடிந்து ஏப்ரல் 14-ம் தேதி ‘ப்லவ’ (பிலவ ) வருஷம் துவங்குகிறது
நீதி வெண்பா நூலிலிருந்து 30 பொன்மொழிகள்!! (இலவசமாக எல்லா நூல்களையும் வெளியிட்டுள்ள மதுரை பிராஜெக்ட் PROJECT MADURAI வெப்சைட்டிற்கு நன்றி)இலவச காலண்டரை வழங்கும் தினமலருக்கு நன்றி.
TAMIL APRIL 2021 CALENDAR
ஏப்ரல் 11-அமாவாசை ;26-சித்ரா பௌர்ணமி ; ஏகாதஸி விரத நாட்கள் -7, 23
ஏப்ரல் மாத முகூர்த்த நாட்கள் -22, 25, 26, 29
ஏப்ரல் 01 (வி) புதுக்கணக்கு (காலை 10:30 – 12.00 மணி)
ஏப்ரல் 02 (வெ) புனித வெள்ளி GOOD FRIDAY
ஏப்ரல் 04 (ஞா) ஈஸ்டர் EASTER
ஏப்ரல் 12- GUDI PADWA
ஏப்ரல் 13 (செ) தெலுங்கு புத்தாண்டு UGADHI AND BAISAKHI
ஏப்ரல் 14 (பு) தமிழ் புத்தாண்டு PLAVA YEAR, VISHU, CHETI CHAND
ஏப்ரல் 17 (ச) வசந்த பஞ்சமி
ஏப்ரல் 21 (பு) ஸ்ரீராம நவமி
ஏப்ரல் 21 (பு) ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
ஏப்ரல் 22 (வி) மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
ஏப்ரல் 23 – THRISSUR POORAM FESTIVAL
ஏப்ரல் 24 (ச) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 24 (ச) சாய்பாபா ஸித்தி தினம்
ஏப்ரல் 25 (ஞா) மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 25 (ஞா) மதுரை மீனாட்சி தேர்
ஏப்ரல் 26 (தி) சித்ரா பெளர்ணமி
ஏப்ரல் 27 (செ) மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

ஏப்ரல் 1 வியாழக்கிழமை
எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என் (நல்லோர் எங்கும் தோன்றலாம்)
***
ஏப்ரல் 2 வெள்ளி க்கிழமை
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம் (அறிவடையோர் பகைவனாகினும் நண்பனே)
***
ஏப்ரல் 3 சனிக் கிழமை
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க (இல்வாழ்தலே நல்வழி)
****
ஏப்ரல் 4 ஞாயிற்று க்கிழமை
தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி.( எல்லாம் அறிவர் ஞானியர்)
****
ஏப்ரல் 5 திங்கட் கிழமை
ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதே
இதுபோது போகியே யென்ப – திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகியே யென்று புகல் (நலமாகவாழ ஓர் பொழுதுண்க)
****
ஏப்ரல் 6 செவ்வாய்க்கிழமை
மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் (இன்சொல்லே யாவரும் கேட்பர்)
****
ஏப்ரல் 7 புதன் கிழமை
பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில் (அன்பினால் மாற்றோரிடமும் நன்மை)
****
ஏப்ரல் 8 வியாழக்கிழமை
காந்தன்இல் லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம் – அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம் (பயனற்றவை)
****
ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை
ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். (துறந்தோரே உலகம் ஆள்பவர்)
****
ஏப்ரல் 10 சனிக் கிழமை
ஆன்,அந்தணர்,மகளிர், அன்பாம் குழந்தைவதை,
மானம் தெறும்பிசி வார்த்தை,இவை பாவம்(பசு, பிராமணர், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிராகப் பேசுவது பாவம் )
****
ஏப்ரல் 11 ஞாயிற்று க்கிழமை
நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும்
நாவினிய நல்லோரும் நுண்ணுவார் (நயமான சொல்லால் நன்மையே)
****
ஏப்ரல் 12 திங்கட் கிழமை
செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே (செயலின் முன் எண்ணுக)
****
ஏப்ரல் 13 செவ்வாய்க்கிழமை
மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும்
ஈன முறுவார் (மனைவிக்கு மானமும் , வேசிகளுக்கு மானம் இல்லாமையும் புகழ் தரும்)
*****
ஏப்ரல் 14 புதன் கிழமை
கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார் (கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்)
****
ஏப்ரல் 15 வியாழ க்கிழமை
துர்ச்சனருக்கு
அங்கம்முழு தும்விடமே ஆம். (ஈக்கு தலையிலும், தேளுக்கு கொடுக்கிலும், பாம்புக்கு பல்லிலும் விஷம் ; கெட்டவர்களுக்கு உடம்பு முழுதும் விஷம் )
****
ஏப்ரல் 16 வெள்ளி க்கிழமை
துர்ச்சனர்தாம் எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தால் ஆமே வசம். (பாம்பைக்கூட ரத்தினக்கல், மந்திரம், மூலிகை வேர் இவற்றால் அடக்கலாம்; கெட்டவர்களை எதனாலும் வசப்படுத்த முடியாது)
***
ஏப்ரல் 17 சனிக் கிழமை
துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே (இருமலும் புல்லோரும் நிகரே- nuisance for ever)
***
ஏப்ரல் 18 ஞாயிற்று க்கிழமை
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை. (எத்தனை வாசனை கலந்தாலும் உள்ளிப்பூண்டு மணம் போகாது. கெட்டவர்களும் அப்படித்தான் )
***
ஏப்ரல் 19 திங்கட் கிழமை
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. மாட்டுக்கு 5, குதிரைக்கு 10, யானைக்கு 1000 முழம் தள்ளி நில்; கெட்டவர்களைக் காணில் ஓடி ஒளிந்து கொள் )
***
ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர்ஆ வாரோ புகல்.( அற்பர் நன்மை செய்யார்)
****
ஏப்ரல் 21 புதன் கிழமை
முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்அருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும் (பக்தனே சக்தி வாய்ந்தவன் )
****
ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே (பக்தனுக்குத் தீங்கு செய்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது; பக்தனே சக்தி வாய்ந்தவன் )
****
ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை
மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் – யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய்யெனில் பொய்யாகிப் போம். (நம்பிக்கை இல்லாவிடில் பலன் கிடைக்காது |)
****
ஏப்ரல் 24 சனிக் கிழமை
பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி
நீதியொடு போதல் நெறியன்றோ (தீயவரின் சேய்மை நன்று)
****
ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே (குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது)
****
ஏப்ரல் 26 திங்கட் கிழமை
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்முவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாகுமோ பின். (பெண்கள் வம்பு பேசக்கூடாது)
****
ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.(நல்ல மனைவி கருணையில் அன்னை, வேலை செய்வதில் பணிப்பெண், தோற்றத்தில் அழகி, படுக்கையில் வேசி, பேச்சில் மந்திரி போல இடத்துக்குத் தக்கவாறு செயல்படுவாள் )
***
ஏப்ரல் 28 புதன் கிழமை
மெய்ஞ்ஞானி நின்றநிலை
வேறு படினும்சிறப்பாமே (ஞானியர்தம் சிறப்பு)
****
ஏப்ரல் 29 வியாழக்கிழமை
பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொருதேசத்தே
செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு. (இடத்தினால் தான் சீர் சிறப்பு)
****
ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை
குணநன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணநன் குடையார் குறுகார் (கொடியவரை நல்லோர் அணுகார்)
–subham–

tags- ஏப்ரல் 2021 காலண்டர் , நீதி வெண்பா, பொன்மொழிகள் ,