
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9456
Date uploaded in London – –4 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இன்று APRIL 4-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxx
XXXX
மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேட்டி,சட்டையில் பிரதமர் மோடி வந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
வெளியே காத்திருந்த மக்களை பார்த்து கை அசைத்துவிட்டு, கிழக்கு கோபுரம் அம்மன் சன்னிதி வழியாக உள்ளே சென்றார். பொற்றாமரைக்குளத்தின் பின்னணியில், தெற்கு கோபுரம் இருப்பதை கண்டு ரசித்தார். அவருக்கு, கருமுத்து கண்ணன், கோவில் சிறப்புகளை விளக்கினார். 8:52 மணிக்கு அம்மனை தரிசித்தார். அவரது பெயரில், அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, முக்குறுணி விநாயகர் சன்னிதி வழியாக, சுவாமி சன்னிதிக்கு இரவு, 9:05 மணிக்கு சென்றார். அங்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. கோவில் விழாக்கள், குறிப்பாக, சித்திரை திருவிழாவின் சிறப்புகள் குறித்து பிரதமரிடம் கருமுத்து கண்ணன் கூற, ஆர்வமாக கேட்டார்.
கோவில் வருகை பதிவேட்டில் தமிழகம், மதுரையின் சிறப்புகள் மற்றும் கோவிலின் முக்கியத்துவம் குறித்து குறிப்பு எழுதினார்.பி ரசாதமாக விபூதி தரப்பட்டது.இரவு, 9:17 மணிக்கு தரிசனம் முடிந்து, பசுமலை, ‘கேட் வே’ ஓட்டலுக்கு ஓய்வு எடுக்கச்சென்றார்.
சீன அதிபரின் வருகையின் போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் வருகையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
XXXX


ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு திருமலையில் மீண்டும் பணி
திருப்பதி- திருமலை தேவஸ்தானத்திலிருந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு, மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களின் வம்சாவளியினருக்கு மட்டுமே, கோவிலில் சேவை செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.
வைகாசன ஆகம பரம்பரையைச் சேர்ந்த 4 பேர் பரம்பரை முறையில் அர்ச்சகர்களாக இருந்து வந்தனர். இவர்கள் ரமண தீட்சிதலு, சீனிவாச தீ ட்சிதலு, நாராயண தீட்சிதலு மற்றும் நரசிம்ம தீட்சிதலு ஆவார்கள்.
இவர்கள் நால்வருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வயதைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவர்கள் அனைவரும் இங்கு ஊதியத்துக்காக மட்டும் பணி புரிவதில்லை என அர்ச்சகர்கள் சார்பில்தெரிவிக்கபட்டது.
இந்த குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களை, இரண்டு குடும்பங்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் தலைமை அர்ச்சகராகவும் செயல்படுவார். தலைமை அர்ச்சகரின் தலைமையில், ஏழுமலையான் கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தங்கள் குடும்பங்கள் ஏழுமலையான் சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டதால், தாங்களால் இயன்ற வரையில் சேவை செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆந்திர அரசிடம் முறையிட்டனர்.
கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட இரண்டு அர்ச்சகர்கள் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி கண் டனர் . பரம்பரை அர்ச்சகர் விஷயத்தில் அரசாங்க உத்தரவு செல்லுப டியாகாது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயல் என்று ஹைக்கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அர்ச்சகருக்கு சார் பான இந்த உத்தரவை கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக நிறைவேற்றாது இருந்த ஆந்திர அரசு இப்போது திடீர் உத்தர வரைப் பிறப்பித்துள்ளது . இது குறித்து பரம்பரை அர்ச்சகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்படி, தலைமை அர்ச்சகராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற ரமண ரமண தீட்சிதலு , மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட உள்ளார்.
XXXXX
திருப்பதி பக்தர்கள் முடி காணிக்கை சீனாவுக்கு கடத்தல்?

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள திருப்பதியில்,. இந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.இங்கு, பக்தர்கள் மொட்டை போட்டு காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ‘ஆன்லைன்’ வாயிலாக ஏலம் விடப்படுகிறது. ரூபாய் 125 கோடி இதன் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும், கோவில் நிர்வாகத்துக்கு, 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்., 7ம் தேதி, வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சங்டே என்ற இடத்தில், சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த வாகனங்களில், 120 பைகளில் தலைமுடி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவை, திருப்பதி கோவிலில் இருந்து எடுத்து வரப்படுவதாக, அதில் இருந்த நபர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும், இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ., கோரியுள்ளது.
திருப்பதி கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் தலைமுடி, தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், தாய்லாந்து வழியாக, சீனாவுக்கு கடத்தப்பட்டு, ‘விக்’ WIGS தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.’இந்த கடத்தலுக்கு, தேவஸ்தான அறக்கட்டளை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்த, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 18 லட்சம் ரூபாய் இருக்கும். மேலும், அந்த தலைமுடிகள் தரம் பிரிக்கப்படாதவையாக உள்ளன. திருமலை கோவில் அறக்கட்டளையை பொறுத்தவரை, தலைமுடியின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் தரம், இரண்டாம் தரம் என, தரம் பிரிக்கப்பட்ட பிறகே ஏலம் விடப்படும்.
தி ருமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கிருந்து அவ்வளவு எளிதாக தலைமுடியை யாரும் கடத்திச் செல்ல முடியாது. வீண் விளம்பரங்களுக்காகவே, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில், தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ஊடக நிறுவனம் உட்பட, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. திருப்பதி லோக்சபா தொகுதிக்கு, இம்மாதம், 17ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இந்த தலைமுடி கடத்தல் விவகாரம், பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
XXXX
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி: இலவச தரிசன டிக்கெட் குறைப்பு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்படும். பக்தர்கள் அதிகம் கூடும் அன்ன பிரசாத கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறை, தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா ஆகிய இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
திருமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு வர வேண்டும். அறைகள் ஒதுக்கீடு செய்ய கூடிய மையங்களில் உடல் வெப்பநிலை கணக்கிடக்கூடிய THERMAL SCANNING தர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்யப்படும். தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறை மற்றும் கோயிலுக்குள் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13ம் தேதி யுகாதி ஆஸ்தானம் 6ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம், 8ம் தேதி அன்னமாச்சார்ய நினைவு தினம், 9ம் தேதி பாஷ்யகார்ல உற்சவம் ஆகியவை நடைபெறும். 18ம் தேதி ராமானுஜ ஜெயந்தி, 21ம் தேதி ராமநவமி ஆஸ்தானம், 24 முதல் 26ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
XXX

ஆண்டாள் கோவிலில் புஷ்ப யாகம்
தமிழ் நாட்டில் ஸ்ரீ வில்லிப் புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு 108 மலர்களால் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து புஷ்ப யாகம் நடைபெற்றது. மல்லி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட 108 வகையான மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாளும், ெரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
புஷ்ப யாகத்தை காண விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
XXXX

3 மொழிகளில் தயாராகும் ராமாயண கதையில் ராமராக மகேஷ் பாபு
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ஶ்ரீ ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் ராமாயண கதை படமாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். சயீப் அலிகான் ராவணனாக வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 3-டி தொழில் நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் 3 பாகங்களாக இந்த படத்தை எடுக்க இருப்பதாகவும் ராமராக ஹிருத்திக் ரோஷனும் சீதையாக தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ஹிருத்திக் ரோஷனுக்கு பதில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ராமர் கதாபாத்திரத்துக்கு மகேஷ்பாபுவின் முகம்தான் பொருத்தமாக உள்ளது என்று அவரை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை நிதிஷ் திவாரி, ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.
XXXX
பழநி ராஜ அலங்கார முருகன் படம்: ஸ்டாலினுக்கு பரிசு

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் பழநி முருகன் புகைப்படத்தை, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கியது.
பழநி மக்களிடம், ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பழனி, செல்வகுமார், ஹக்கீம் ராஜா, சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் முருகன் படத்தை, ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினர்.
பின், மனு ஒன்றையும் வழங்கினர். அம்மனுவில், தி.மு.க., ஆட்சி அமைத்ததும், பழநியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. திருத்தணியில், வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு, பழநியில் முருகன் படம் பரிசாக கிடைத்துள்ளது.
XXXXX
முத்துமாரியம்மன் கோயில் விழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த MARCH 19ம் தேதி வெள்ளிக் கிழமை கொடி ஏற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா 16 நாள் திருவிழாவாக நடைபெற்ற.து
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று அக்கினி சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கியமாக, ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.
இவ்வாறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம். விழாவை காண சென்னை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறை செய்தது.
XXXX
கோவில்களில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மனம் திருந்தி பணத்தை உண்டியலில் போட வந்தபோது சிக்கினர்.
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே எம்மகரே பகுதியில் பப்புசாமி கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் பப்புசாமி கோவிலுக்குள் 2 பேர் வந்தனர். அவர்கள், தாங்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று கோவில் உண்டியலில் பணத்தை காணிக்கையாக போட்டனர். இதனை கவனித்த கோவிலில் இருந்தவர்கள், என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது 2 பேரும், அவர்களிடம் ஜோகட்டே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகீம், அப்துல் தவ்பீக் ஆகிய நாங்கள் இந்த கோவில் உள்பட பல கோவில்களில் உண்டியல் பணத்தை திருடுவதை தொழிலாக வைத்து இருந்தோம்.
தற்போது நாங்கள் 2 பேரும் மனம் திருந்தி திருட்டு தொழிலை கைவிட்டுவிட்டு கோவிலில் மன்னிப்பு கேட்டு திருடிய பணத்ைத உண்டியலில் போட வந்தோம் என்றனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாண்டேஸ்வர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் திருடி வந்த 2 பேர், மனம் திருந்தி திருடிய கோவில் உண்டியலில் பணத்தை போட வந்தபோது சிக்கிய ருசிகர சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
XXXXX
ஈஸ்டர்’ உரையில் ‘ஹோலி’யை குறிப்பிட்ட அதிபர் ஜோ பைடன்

ஈஸ்டர்’ பண்டிகையை முன்னிட்டு, உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹிந்துக்களின், ‘ஹோலி’ பண்டிகையை குறிப்பிட்டு பேசினார். கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகையை
முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக, நானும், நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடனும், ஆவலுடன் காத்திருக்கிறோம். நாங்கள் இருவரும், கொரோனாவுக்கான தடுப்பூசியை ஏற்கனவே செலுத்திவிட்டோம். வரும் ஈஸ்டர் தினத்தன்று, எங்கள் குடும்பத்தினர் சிலர், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இருக்கின்றனர்.ஹிந்துக்களின் ‘ஹோலி’ பண்டிகை, கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையும் நெருங்கி வருகிறது. இது, கொண்டாட்டத்திற்கான நேரம் மட்டும் அல்ல, அனைத்து சமூக மக்களுடன் ஒன்றிணைவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் ஆண்டு.முக்கியமில்லாதோர் என யாரும் இல்லை. அனைவருமே முக்கியமானவர்கள் தான்.
கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அது மிகவும் பாதுகாப்பானது. அதை மக்களிடம் நிரூபிக்கவே, அமெரிக்க அதிபராகிய நான், தொலைக்காட்சிக்கு முன், எனக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
XXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்

வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
tags – Tamil Hindu, News Roundup4421