ஹிந்து மஹிமை -2(Post No.9463)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9463

Date uploaded in London – –  –6 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-4-2021 அன்று ஒளிபரப்பான ஹிந்து மதம் பற்றி மேனாட்டார் வியந்து பாராட்டியுள்ள ஹிந்து மஹிமை பற்றிய இரண்டாம் உரை!

ஹிந்து மஹிமை -2

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

காலம் காலமாக இந்தியா முழுதும் பயணித்த ஏராளமான வெளிநாட்டு அறிஞர்களும் யாத்ரீகர்களும் தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதத்தைப் போற்றிப் புகழ்ந்து வந்துள்ளனர்.

அப்துல்லா வஸாஃப் என்ற பதினான்காம் நூற்றாண்டு யாத்ரீகர், இந்தியாவைப் பற்றிக் கூறுகையில், அதன் புழுதி காற்றை விடத் தூய்மையானது, அதன் காற்றோ தூய்மையை விடத் தூய்மையானது. இந்தியாவே சொர்க்கம் என்பது உறுதி. ஆச்சரியப்படாதீர்கள், சொர்க்கத்தைக் கூட அதற்கு ஒப்பிட்டுக் கூற முடியாது என்கிறர்.

The historian Abdullaa Wassaf, writing in the 14th  century A.D. says of India in his history, Taziyatul Amsar : “India, according to the concurrent opinion of all writers, is the most agreeable abode on earth and the most plesant quarter of the world. Its dust is purer than air and its air is purer than purity itself; Its delightful plains resemble the garden of paradise:

If its is asserted that Pardise is in India,

Be not surprised, because Paradise itself is not comparable to it.”  – Elliot’s History of India Vol III p 28-29

    கி.பி. 1017இல் இந்தியா வந்த இஸ்லாமிய யாத்ரீகரான அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ,  “அவர்களிடம் புராணம் இருக்கிறது” என்று வியந்து கூறுகிறார்; கூவுகிறார். புராணங்களைப் பார்த்த அவர் அதில் எல்லாம் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்தின் எல்லைகே சென்று விட்டார்.

    அமெரிக்காவில் கன்கார்ட் நகரில் 1817 ஆம் ஆண்டு பிறந்த ஹென்றி டேவிட் தோரோ ஹிந்து மதத்தின் பால் பற்றும் மதிப்பும் கொண்டவர். மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டவர் அவர்.  அவர் கீதையைப் பற்றிக் கூறுகையில், அது இந்தக் காலத்திற்கேற்ற மாபெரும் கண்டுபிடிப்பு என்று கூறுகிறார். அத்துடன் தினமும் தான் கீதையின் தத்துவத்தில் குளிப்பதாகக் கூறுகிறார்.

He looked upon the Gita as the greatest discovery of the age. Thoreau says “In the morning I bathe my intellect in the stupendous and cosmogonal philosophy of the Bhagavad Gita since whose composition years of the gods have elapsed, and in comparison with which our modern world and its literature seem puny and trivial”.

    பிரம்மஞானசபையைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார், “ உலகின் மகத்தான  மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு இதைச் சொல்கிறேன். ஹிந்து மதத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞான பூர்வமான,தத்துவார்த்தமான, ஆன்மீகமான  ஒரு மதம் வேறு எதுவும் இல்லை. ஹிந்து மதம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்.

    கீதை பற்றி அமெரிக்கரான எமர்ஸன் வியந்து பாராட்டுகிறார் இப்படி:

“ஒரு மகத்தான நாளில் நான் பகவத் கீதையைப் படித்தேன். எல்லா நூல்களையும் விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தையும் பற்றி அது பேசவில்லை. மாறாக, சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின் வேறொரு சூழலின் ஞானத்தை அது வழங்குகிறது. இன்றும் நம் முன்னர் இருக்கும் பல கேள்விகளுக்கு அது விடை அளிக்கிறது” என்கிறார் அவர்.

     ஒரு சுவையான குட்டிச் சம்பவம். ஆனால் மிகவும் அரிதான செய்தியை அது தருகிறது.

தேசிகாச்சார் என்று ஒரு எழுத்தாளர். அவர் Weapons in Ancient India என்ற ஒரு சிறு புத்தகத்தை எழுதினார். அதில் ஹிந்துக்கள் எப்படி ராக்கெட்டுகளை அமைத்தனர், அவர்களது உக்ரமான அஸ்திரங்கள் எப்படி இருந்தன என்பதை நன்கு விளக்கியிருந்தார்.

இந்த புத்தகம் இந்தியாவிலிருந்து ஹார்வர்ட் யுனிவர்ஸிடிக்குப் பயணித்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில்  ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் பிரபல விஞ்ஞானியும் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராபர்ட் ஓப்பன்ஹீமர் மாணவராகப் படித்து வந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் படித்து வியந்தார். இப்படி எல்லாம் ஆயுதங்கள் உண்டா என வியந்தார்.  அவரது விஞ்ஞான பூர்வமான மனம் அதில் லயித்தது. அந்த நூல் அவருக்கு உத்வேகம் ஊட்டியது!

1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெற்றி பெற அமெரிக்கா அணுகுண்டை வெடித்துப் பார்க்கும் சோதனையை நிகழ்த்தியது. அதைத் தயாரித்தவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர் தான். கீதையின் பால் பெருமதிப்பு கொண்டவர் அவர். சம்ஸ்கிருதமும் அவருக்குத் தெரியும். நியூ மெக்ஸ்கிகோ பாலைவனத்தில் யாரும் இல்லாத  தனித்த ஒரு இடத்தில் அலமொகொர்டொ (Alamogordo) என்ற இடத்தில் இந்த முதல் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனையின் பெயர் Trinity. அதாவது படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய முப்பெரும் மூர்த்திகளை அடிப்படையாகக் கொண்ட பெயர் தான் டிரினிடி!

தேசிகாச்சார் மற்றும் ராபர்ட் ஓப்பன்ஹீமர் பற்றிய இந்த விவரங்களை எல்லாம் சார்லஸ் பெர்லிட்ஸ் (Charles Berlitz B: 23-11-1913 D : 18-12-2003) என்ற அமெரிக்க எழுத்தாளர் தனது நூல்கள் ஒன்றில் கூறுகிறார். இதை ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்ட்ரடாமஸ் (Hindu Destiny in Nostradamus)என்ற தனது நூலில் பெங்களூரைச் சேர்ந்த G. S ஹிரண்யப்பா விவரிக்கிறார். ஆகவே தான் இந்தச் செய்தி  நமக்குத் தெரிய வருகிறது.

அணுகுண்டு வெடிக்கப்பட்டவுடன் அவர் திகைத்தார்; பிரமித்தார். கீதையில் பதினொன்றாம் அத்தியாயத்தில் 12வது ஸ்லோகமாக வரும்

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்திதா |

யதி பா சத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன: ||

என்பதை அவர் உரக்க உச்சரித்தார்.

ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் கிளம்பினால் அது அந்த  மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும் என்பது இதன் பொருள்.

 “காலோஸ்மி” என்ற 11வது அத்தியாய 32வது ஸ்லோகமும் அவர் நினைவுக்கு வந்தது. உலகத்தை அழிக்கும் காலன் நான் என்பது இதன் பொருள்!

      The Serpent Power  என்ற புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்ற சர் ஜான் உட் ராஃப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆர்தர் ஆவலான் என்ற பெயராலும் இவர் அறியப்படுவார். (Sir John Woodroffe (1865-1936) Arthur Avalon) இவருக்கு எப்படி சக்தி, சாக்தம், குண்டலினி சக்தி ஆகியவற்றில் ஈடுபாடு வந்தது என்பது பற்றிய ஒரு சுவையான சம்பவம் உண்டு. அவர் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். கல்கத்தாவில் ஹைகோர்ட் நீதிபதியாகவும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்ட இயலில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஒரு நாள் கல்கத்தா நீதி மன்றத்தில் அவரால் ஒரு கேஸ் பற்றி முழு மனதுடன் சிந்திக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தார், முடியவில்லை. அப்போது அவரது பணியாளர்களுள் ஒருவர் இதற்கான காரணம் வெளியிலே கோர்ட் படிக்கட்டில் ஒரு சாது மந்திரங்களை இந்த கேஸின் வாதிக்காக உச்சரிப்பது தான் என்றார். திகைத்துப் போன அவர் அந்த சாதுவை அங்கிருந்து உடனே அகற்றுமாறு பணித்தார். சாதுவும் அகன்றார். உடனேயே அவரால் கேஸ் பற்றி நன்கு தீர்க்கமாக எண்ண முடிந்தது. ஆச்சரியப்பட்டுப் போன அவர் மந்திரங்கள் பால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பற்றி படிக்கலானார். சக்தி வழிபாட்டில் ஈடுபடலானார். இதை ஜான் மம்ஃபோர்டு  (John Mumford) என்பவர் தெரிவித்துள்ளார்.

        பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன், காஸ்மாஸ் தொடரை எடுத்துப் பெரும் புகழ் பெற்றவர். பிரபஞ்சத்தின் வயதை எந்த மதம் துல்லிய்மாகச் சொல்கிறது என்று தனது தொடருக்காக ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார். அறிவியல் கூறும் அதே வயதை மற்ற மதங்கள் கூறாத போது ஹிந்து மதம் மட்டும் கூறுவதைக் கண்டு பிரமித்த அவர், பிரபஞ்சத்தின் ஆடலைச் செய்பவன் ஆடல் வல்லானான நடராஜர் என்றும் அவர் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளதாகவும் அறிந்து உடனே ஓடோடி சிதம்பரம் வந்தார். நடராஜரைப் பற்றி நன்கு அறிந்து அதிசயித்து அவரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பிரபஞ்சம் பற்றிக் கூறும் எபிசோடில் முகப்பில் காட்டி மகிழ்ந்தார். அவருடன் கூட வந்த அவரது மனைவி சிதம்பரம் அருகே ஒரு இடத்தில் தாமரைக் குளம் ஒன்றைக் கண்டு வியந்தார். அடடா! என்ன அழகான தாமரை மலர்கள். இப்படிப் பூத்து இருக்கின்றனவே என்று கூவி மகிழ்ந்தார். அங்கு அப்போது ஒரு சிறு பையன் அவரது மகிழ்ச்சியை அவரது முக பாவத்திலிருந்து தெரிந்து கொண்டான். மொழி தெரியாத சிறு பையன் என்றாலும் கார்ல் சகனின் மனைவி தாம்ரை மலர்களைப் பார்த்து சந்தோஷப்படுவதைக் கண்டு குளத்திலே குதித்தான். கார்ல் சகனின் மனைவி பயந்து போனார். ஆனால் நடுக்குளத்திற்கு நீந்திச் சென்ற அந்தச் சிறுவன் ஒரு அழகிய பெரிய தாமரை மலரைப் பறித்து வந்து அவரிடம் கொடுத்து பவ்வியமாக குனிந்து வணக்கம் செலுத்தினான். அசந்து போன அவர் இந்தியப் பண்பாட்டைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சம்பவமாக அது அமைந்தது.

          The Tao of Physics என்ற நூலை எழுதி உலக்ப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஃபிரிட்ஜாப் காப்ராவும் சிதம்பர நடராஜரின் ஆட்டத்தை அணுத்துகள் ஆட்டத்துக்கு ஒப்பிட்டுத் தனது நூலில் வியக்கிறார்.

        பிரபல விஞ்ஞானியான ஷோப்பன்ஹோவர் உபநிஷதங்களைப் படித்து மெய் சிலிர்த்தார். அவர் கூறுகிறார்:

“From every sentence (of the Upanishads) deep, original and sublime thoughts arise, and the whole is pervaded by a high and holy and earnest spirit. In the whole world there is no study except that of the originals, so beneficial and so elevating as that of Upanishads.”

“They are the products of the highest wisdom. It is destined sooner or later to become the faith of the people.”

     உலகின் தலை சிறந்த ஞானத்தை அளிக்கும் உபநிடதங்கள் வெகு விரைவில் உலக மக்களின் இறைநம்பிக்கையாக ஆகி விடும் என்கிறார் இப்படி அவர்!

      சகோதரி நிவேதிதா இந்தியா உன்னதம் அடையத் தன் வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்தவர். பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸியின் பக்தி, அபிலார்டின் புத்தி கூர்மை மார்டின் லூதர்கிங்கின் வலிமை மற்றும் சுதந்திரம், இக்னாஷியஸ் லோயொல்லாஸின் அரசியல் திறன் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர் ஆனால் இந்த அனைத்தும் எப்படி ஒரே ஒரு மனிதரிடம் ஒன்று சேரந்தது என்று வியக்கிறார். அவர் வியக்கும் உன்னத மஹான் ஆதி சங்கரர்.Footfalls of Indian History என்ற நூலில் இப்படிக் கூறி வியக்கிறார் அவர்!

     இப்படி இன்னும் ஆயிரக் கணக்கில் பல வாரங்களுக்கு ஹிந்து பெருமையைப் பற்றி மேனாட்டார் கூறியனவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

     இறுதியாக இங்கிலாந்தை சேர்ந்த ஆர்னால்ட் டாய்ன்பி கூறிய சொற்களுடன் என் உரையை முடிக்கிறேன்.

ஆர்னால்ட் டாய்ன்பி (B :14-4-1889 D: 22-10-1975)உலக சரித்திரத்தை A Study of History என்று பல லட்சம் சொற்களால் பன்னிரெண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். அவர் ஹிந்து மதம் பற்றி தனது நூலின் முடிவில் கூறியதை அப்படியே இங்கு பார்ப்போம்:

“It is already becoming clear that a chapter which had a Western beginning, will have to have an Indian ending, if it is not to end in self-destruction of the human race. At this supremely dangerous moment in human history, the only way of salvation is the ancient Hindu way.”

“மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் இருக்க, மனித வரலாற்றின் இந்த அபாயகரமான காலகட்டத்தில், மனித குலம் உய்வதற்கான ஒரே வழி ஹிந்து வழி ஒன்றே தான்!’

இதுவே அவரது பொருள் பொதிந்த கூற்றாகும்.

நன்றி, வணக்கம்!

***

tags– ஹிந்து மஹிமை -2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: