ஆசார்ய சரகர்: ஆயுர்வேத நூல் அருளிய மஹான்!(9469)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9469

Date uploaded in London – –  –8 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஆசார்ய சரகர்: ஆயுர்வேத நூல் அருளிய மஹான்!

ச.நாகராஜன்

இன்று உலகெங்கும் பிரபலமாகி இருக்கும் ஆயுர்வேத சிகிச்சை முறை பாரதத்தில் உதித்தது தான். இதை முறைப்படுத்தி ஒரு நூலாக வழங்கியவர் ஆசார்ய சரகர்.

வேத முறையிலான வைத்தியம் இது என்பதால் வேதம் கூறும் பூரண ஆயுளான 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக ஒரு மனிதன் வாழ்வதற்கான அற்புதமான ரகசியங்களையும் அனுபவ பூர்வமான நடைமுறைகளையும் சரகர் தனது நூலான சரக சம்ஹிதையில் தந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் ஆராய்ந்து அதிலிருந்து உரிய சிகிக்கை முறைகளைத் தருவதோடு அறநெறிகளை அனைவரும் கடைப்பிடித்து ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகள் பூரண ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதே அவரது ஆசை.

    ஒரு நாள் சரகர் தனது சிஷ்யர்களுடன் வனப் பகுதியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பூக்களையும் செடிகளையும் மரங்களையும் நன்றாக ஆராய்ச்சி செய்வது அவரது பண்பு. அவரது சஞ்சாரத்தில் ஒரு அபூர்வமான மலரைக் கண்டார். இதுவரை பல நூறு பூக்களை அவர் பார்த்திருந்தாலும் கூட அது இதுவரை பார்த்திராத அபூர்வமான புஷ்பம்! உடனே அதை எடுக்க அவர் தனது காலை முன் வைத்தார். உடனேயே நின்று விட்டார்.

அருகிலிருந்த சிஷ்யர் ஒருவர், “ஆசார்யரே, உங்களால் இதைப் பறிக்க முடியவில்லை எனில் நான் சென்று பறித்து வரவா? என்று அவரிடம் அனுமதி கேட்டார்.

ஆசார்யர் அவரை நோக்கி, “சிஷ்யா! எதிலும் ஒரு நியதி உண்டு. இதைப் பறிக்க அனுமதி வேண்டுமே என்றார்.

“அனுமதியா? யாரிடமிருந்து? ஒரே ஒரு பூ! வனாந்திர பிரதேசம். இதைப் பறிக்க யாரிடம் அனுமதி பெற வேண்டும்? என்றார் சிஷ்யர்.

சரகர் அவரை நோக்கி, “அப்பனே, ராஜ நீதி வேறு, அறநெறி முறை வேறு.இங்கு யாரும் காணப்படவில்லை என்றாலும் கூட, இந்தப் பகுதிக்கு உரிமையாளராக இருக்கும் குடியானவனிடம் அனுமதி பெற்று அல்லவா இதைப் பறிக்க வேண்டும். இதுவே அறநெறி முறையாகும் என்றார்.

சொன்னதோடு நில்லாமல் வெகு தூரம் சென்று அந்தப் பகுதிக்குச் சொந்தமானவரை விசாரித்து அறிந்து கண்டு அவரிடம் அந்த ஒரு பூவைப் பறிக்க அனுமதி கேட்டுப் பெற்றார்.

அறநெறியே வாழ்க்கைக்கான அடிப்படை விதி என்பதை ஆசார்யரிடமிருந்து கற்றனர் சிஷ்யர்கள்.

தேசமெங்கும் இப்படி அலைந்து திரிந்து ஒவ்வொன்றையும் பற்றி ஆராய்ந்ததால் அவர்  சரகர் என்ற பெயரைப் பெற்றார். சரகர் என்றால் அலைபவர் என்று பொருள்.

இப்படி அவர் வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்கள் உண்டு.

சரக சம்ஹிதாவில் 120 அத்தியாயங்கள் உண்டு.

இந்த நூல் எட்டுப் பகுதிகளைக் கொண்டது. 1) சூத்ர ஸ்தானம் 2) நிதான ஸ்தானம் 3) விமான ஸ்தானம் 4) சரீர ஸ்தானம் 5) இந்திரிய ஸ்தானம் 6) சிகித்ஸா ஸ்தானம் 7) கல்ப ஸ்தானம் 8) சித்தி ஸ்தானம்

சரகர் ஆதிசேஷனின் அவதாரமாகவே கருதப் படுகிறார்.

சிகிச்சை முறையில் மந்திர பிரயோகத்தையும் அவர் கூறியிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரித்தால் ஜுரம் போகும் என்பது அவரது அருளுரை.

மருத்துவம் பற்றிய 60 ரிஷிகளின் கூற்றை அவர் கூறுகிறார். இப்படி வசிஷ்டர், ஜமதக்னி, வாமதேவர், பிருகு உள்ளிட்ட மஹரிஷிகளை அவர் ஆங்காங்கே மேற்கோள் காட்டுகிறார்.

தாவரத்திலிருந்து உருவாக்கப்படும்  341 மருந்து வகைகளை அவர் பட்டியலிடுகிறார்.

விலங்குகளிடமிருந்து உருவாகும் 177 மருந்து வகைகளையும் உலோகம் மற்றும் தாதுப் பொருள்களிலிருந்து உருவாகும் 64 மருந்து வகைகளையும் அவர் குறிப்பிடுகிறார்.

சரகர் வாழ்ந்த காலத்தைச் சரியாக நிர்ணயிக்க முடியவில்லை என்ற போதிலும் பொதுவாக அவர் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது தெரிகிறது.

சரக சம்ஹிதை லத்தீன், அராபி மொழி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1898ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் சார்லஸ் எல்.டானா, ஜோஸப் கொல்லியர்ஸ், பெடரிக் பாட்டர்ஸன் மற்றும் பர்னாட் ஷாஸ் (Charles L.Dana, Joseph Colliers, Federick Petterson and Barnad Sachs) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ சங்கத்திற்கு ‘சரகா க்ளப் என்று அவரை மரியாதை செய்யும் விதமாகப் பெயர் சூட்டப்பட்டது.

உலகெங்கும் பெரிதும் மதிக்கப்படும் இவரது நூலுக்கு ஏராளமானோர் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். சம்ஸ்கிருத மூலமும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ள சரக சம்ஹிதை இப்போது கிடைக்கிறது.

சரகரைப் பற்றி அமெரிக்காவின் தலை சிறந்த மருத்துவ நிபுணரான டாக்டர் ஜார்ஜ் க்ளார்க் கூறுவது இது:

As I go over each fasciculus I arrive at only one conclusion and that is this:

If the physician of the present day world drop from the pharma copoeia all the modern drugs and treat their patients according to the method of Charaka there would be the least work for the undertakers and fewer chronic invalid to the world.”   – George Clerk (Leading Physician, USA)

ஒவ்வொரு சிறுபகுதியாக நான் படிக்கும்போது, நான் ஒரே ஒரு முடிவுக்குத் தான் வருகிறேன். அது இது தான்:

இன்றைய நாளில் உள்ள மருத்துவர்கள் மருந்தியலில் உள்ள அனைத்து நவீன மருந்துகளையும் விட்டு விட்டு சரகர் சொல்கின்ற முறை போல தங்கள் நோயாளிகளை சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்களெனில் சவங்களைச் சுமந்து செல்பவர்களுக்கு மிகக் குறைந்த வேலையே இருக்கும். அத்துடன் உலகில் நோயால் செயலற்று இருப்பவர்களும் குறைவாகவே இருப்பர்.

நவீன மருத்துவத்தில் முன்னேறியுள்ள மேலை உலகம், இதை விட சரகருக்கு  என்ன புகழுரையைத் தர முடியும்?!

***

TAGS – ஆசார்ய சரகர், ஆயுர்வேத நூல் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: