சுமேரிய இந்திய ஒற்றுமைகள் (Post No.9470)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9470

Date uploaded in London – –8  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதலில் புதிய, சுவையான விஷயத்தைக் கொடுக்கிறேன். இதை 29 ஆவது பாயிண்டாக எண் NUMBERED AS 29TH POINT கொடுத்தாலும் புதியது என்பதால் முதலில் சொல்கிறேன்:-

பெரியோர்கள் எழுதிய எல்லா புஸ்தகங்களிலும் எதாவது சில தவறுகள் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் ‘யானைக்கும்  கூட அடி சறுக்கும்’ என்ற பழமொழி எழுந்தது போலும்!

கோபாலன் என்றால் கண்ணன். மாடு மேய்ப்பவன். சிலப்பதிகார கோவலன் பெயரும் கோபாலன்தான் ப=வ இடம் மாறும் என்பது இந்திய மொழிகளில் காணும் விதி. வங்கம் என்பதை பங்க தேசம் என்பர் அவர்கள்.  இன்னும் சில சொற்களில் முதல் எழுத்து மறைந்து விடும். இதற்கும் எல்லா மொழிகளிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன . அதே போல அஜபாலன் என்றால் ஆட்டிடையன் என்று பொருள். 

அஜ என்றால் ஆடு- பாணினி சூத்திரம் 4-1-4; 4-2-39 —

ஆஜக என்றால் ஆட்டுமந்தை ;

ஆடுகளும் செம்மறி ஆடுகளும் சேர்ந்து இருந்தால் ‘அஜாவி’ அல்லது அஜைட ;

ஜாபால – ஆட்டிடையன் ;

மஹா ஜாபால – 4-2-38 = ஆடுகள் பிசினஸ் BUSINESS  நடத்தும் முதலாளி ;

(மாஸாத்துவன் , மாநாயக்கன் என்ற சிலப்பதிகார கதாபாத்திரங்கள், கோவலன் என்பதெல்லாம் தூய சம்ஸ்க்ருத சொற்கள் = மஹா சார்த்தன் / நில வணிகர் தலைவன் ; மஹா நாயகன் = கடல் வணிகர் தலைவன் ; கோவலன் = கோபாலன் .)

வி.எஸ். அக்ரவாலா / அகர்வால் , ஆடுகள் பற்றிய குறிப்புகளை சொல்லிவிட்டு தன ‘மேதாவிலாச’த்தைக் காட்டுகிறார். ஜாபால என்பது எபிரேய / ஹீப்ரு மொழியுடன் தொடர்புடையது என்றும் யோபெல், அல்லது ஜோபில் YOBEL OR JOBIL  என்றால் ஆட்டின் கொம்பு என்றும் அதிலிருந்தே ஜூபிளி JUBILEE என்ற சொல் நமக்குக் கிடைத்ததென்றும் பகர்கிறார். பாணினிக்கு செமிட்டிக்-ஈரானிய சொற்கள் பற்றிய பரிச்சயம்/தொடர்பு இருப்பதை இது காட்டுகிறது என்றும்  உரைக்கிறார். இதற்கு மறறொரு எடுத்துக்காட்டு ஆலகால விஷம் என்ற சொல் என்றும் தொடர்கிறார். (அராபிய ஹலகில , ஹாலாஹல பற்றி முன்னரே என் கட்டுரையில் கொடுத்துவிட்டேன்).; கர்ஷ என்ற பழத்தை  குறிக்கும் சொல்லும் இப்படிப்பட்டதே என்று முடிக்கிறார்.

மாடு மேய்ப்பவன் கோ–பாலன், ஆடு மேய்ப்பவன் அஜ– பாலன்  என்பதை நாம் எளிதில் காணலாம். இவர் ஏன் இப்படி கஷ்டப்பட்டு பொருள் சொல்கிறார் என்று தெரியவில்லை . இதை இங்கு எழுதுவதன் காரணம் நம்மிடமிருந்து   ந்தச் சொல் மத்திய கிழக்கு வரை சென்றது என்பதைக் காட்டவே!

XXXX

இதுவரை பல ஆங்கில, தமிழ் கட்டுரைகளின் மூலம் நான் கீழ்கண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் . ஆனால் ஆலகால விஷம் , குக்குலு வாசனைப் பொருள், மற்றும் கோணி ஆகியனவும் மத்தியக் கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வந்தது என்று வேத சொற்களின் அடைவு/ இண்டக்ஸ்  VEDIC INDEX தயாரித்த கீத் KEITH  மற்றும் பாணினி அறிந்த இந்தியா என்ற INDIA AS KNOWN TO PANINI புஸ்தகம் எழுதிய வி.எஸ் அக்ரவாலா (அகர்வால்) கூறுவது வினோதமாக உள்ளது .

XXX

INDO- SUMERIAN SIMILARITIES

1. மைல் கல் ஒற்றுமை

2..பிரளயம் – மீன் -கப்பல்-மனு கதை

3.சு+ மேரு SU+ MER மலை பெயர் ஒற்றுமை

4.சிக்குராட்ZIGGURAT  – சிகர – கோவில்

5.மன்னர் ஆட்சி ஆண்டுகளைக் குறிக்கையில் ஆயிரம் என்ற எண்ணை சேர்க்கும் ஒற்றுமை.

XXXX  மன்னன் 36 ஆயிரம் ஆண்டுகள் ஆண்டான். தசரதனுக்கு

60 ஆயிரம் மனைவியர் ; தமிழர்களும் மூன்று சங்கம் பற்றிக் கூறுகையில் இப்படி ஆயிரம் சேர்த்தனர்

6.பெயர்களுக்கு முன்னர், முன் ஒட்டு PREFIX சேர்த்தல்- நின், என், சின்

இது சம்ஸ்க்ருத பாணி:– சு+மதி  சு+ குமார், சு +கந்தன். தமிழரும் ஸம்ஸ்க்ருதத்தைப் பின்பற்றி ,

ந+க்கீரன், ந+ச்செள்ளை, ந+க்கண்ணை, ந+ப்பின்னை, இளம்+ நாகன், முது +குடுமி, ந+ப்பாலத்தன் என்று சங்க காலத்தில் பெயர் வைத்துக் கொண்டனர்.

7.கிரஹணம் பற்றிய கருத்து (SOLAR, LUNAR ECLIPSES)

8.சக்கரத்தைப் பயன்படுத்தல் USE OF WHEEL

9.மேதான திஷ்ட, உத்தான பிஷ்டிம் என்பன புராண

நாபா நேதிஷ்ட , உத்தான பாதன் என்பனவற்றோடு

ஒப்பிடலாம் . NAMES IN BOTH CULTURES.

10. ராம சந்திரன் , பரத சந்திரன் , கிஷ்கிந்தா என்பன ரிம் சின் , வரத் சின் , கிஷ் ராஜ்யம் ஆகியவற்றில் உளது. RIM SIN, VARAD SIN, KINGDOM OF KISH

11.கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியும் , வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகம், சம்ஹிதையும்

கலியுகத் துவக்கம் 3102 என்பதை ஏற்காமல் கி.மு 2600 என்று 502 ஆண்டுகளைக் குறைத்துக் கணக்கிடுவது மர்மமாக உள்ளது. இன்று உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு மதத்தினரும் பல்வேறு காலண்டர்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்றனர். புத்தர் விஷயத்திலோ பர்மா, இலங்கை, திபெத், இந்தியா கணக்கீட்டில் 400 வருஷம் வித்தியாசம் வருகிறது. அதிசய ஒற்றுமை என்னவென்றால் கி.மு, 2600-ஐ ஒட்டி சுமேரிய பிரளய கதை வருகிறது . ஆக அப்போதிலிருந்து ஒரு புதுக் கணக்கு துவங்கி இருக்கலாம் . தமிழ் நாடு அரசு கடந்த 50 ஆண்டுக்குள் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுகிறது. இந்திய அரசு ரேடியோவில் ‘சக வருஷ’த்தை அறிவிழ்க்கிறது . எல்லோரும் ஆங்கில ஆண்டை நடை முறையில் பின்பற்றுகிறோம். அதுவோ மகா தப்பு. செப்டம்பர் என்பதை (9), அக் டோபர் (10) என்பதை பத்து என்று தப்புத் தப்பாகச் சொன்னாலும் நாம் அதை ஏறுக்கொண்டுள்ளோம்.

சப்த- 7, அஷ்ட-8, நவம்பர்-9, தசம்பர் -10 என்பதை ஜூலியஸ் சிசர், போப்பாண்டவர் கிரிகாரி மாற்றி குழப்பம் உண்டாக்கினார்கள். இது போல கல்ஹணர் செய்த கலியுக குழப்பத்தை ஓரளவு சுமேரியா ஆதரிக்கிறது.

12.ஒன்பதின் மடங்கை இரண்டு கலாசார கணக்கீட்டிலும் காண்கிறோம்; யுகம் எல்லாவற்றையும் ஒன்பதால் வகுக்கலாம்.

13.உத்தரகுரு என்னும் அதிசய பூமியை புராண , இதிஹாசங்கள் புகழ்கின்றன. இதை பத்தர் குரு என்று சுமேரியர்கள் சொல் கின்றனர்

14.வாகன ங்களின் மீது கடவுள் பவனி வருவதை இரு கலாசாரங்களிலும்  காண்கிறோம். சுமேரியா என்பது தெற்கு இராக் பகுதி மட்டுமே என்றாலும் ஒவ்வொரு காலத்திலும் ஆட்சியாளரைப் பொறுத்து அவர்களின் அதிகார வீச்சு பரவலாக இருக்கும் .

15.சுவஸ்திகா சின்னம், தந்தப் பொருட்கள், இந்திய ரத்தினைக் கற்கள் இரண்டிலும் உள

16.அசீரிய மன்னர்கள் அனைவரும் தங்களை அசுரர்கள் என்று அழைத்ததுக் கொண்டனர். ரிக் வேதத்திலும் இந்திரன், வருணன் ஆகியோர் அசுரர் என்று புகழப்படுகின்றனர் . பாணினி ‘அசுர ஜனபத’ த்ததையும் குறிப்பிடுகிறார்

17.துலாபாரம் கொடுப்பது

18.ராஜா மகன் ராஜா ஆவது

19.புராணங்கள் போலவே மன்னர் பட்டியலை அளிப்பது  (வரருசி /பெரோசஸ் BEROSUS ) என்பவர் முறையான மன்னர் பட்டியலைத் தருகிறார்.

20.அலிகி , விளிகி  ALIGI, VILIGI என்ற அசுரர் தொடர்பான சொற்கள் அதர்வண வேதத்தில் உளது. சுமுகன் என்பவரை மநு ‘மோசமான மன்னர்’ BAD KINGS பட்டியலில் குறிப்பிடுகிறார். இவை னைத்தும் சுமேரியாவில் உளது

சுமுகன் பெயர் மர்மம்’ கட்டுரையில் விளக்கியுள்ளேன்

21.இருதலைக் கழுகு (அண்ட பேரண்ட  பக்ஷி ) இரண்டு பண்பாட்டிலும் உளது

22.கல்வெட்டுகளை அழிப்போருக்கு , அதிலுள்ள விஷயங்களை மீறுவோருக்கு CURSING  சாபம் கொடுப்பது

23.மலை மகள் கல்யாணம் (மதுரை மீனாட்சி கல்யாணம், திருப்பதி பாலாஜி கல்யாண உற்சவம் போல ஆண்டுதோறும் நடை பெறும் )

24. கோவில்களில் தேவதாசி முறை

25.பாம்பு ராணி

26.கோவில் வாசலில் துவஜ ஸ்தம்பம்

27. ‘மான’ என்னும் எடை:–

குறளில் வள்ளுவர் ‘மானப் பெரிது’ என்பார். பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் ஓதி விடுகையில் சத’மானம்’ போவது என்ற ((100 எண் தங்க காசு மந்திரத்தைச் சொல்லி விட்டு ….)). இன்னார் ஓதிவிட்டது லக்ஷம் கட்டி வராகன் என்று அய்யர் உயர்ரத குரலில் அறிவிப்பார். இதே முறையை மன்னர் பற்றிக் கூறுகையிலும் ஆயிரம் என்று சேர்த்துச் சொல்லுவார்கள் சுமேரிய மன்னர்கள் 36000, 45000 ஆண்டுகள் ஆண்டனர் என்று வரருசி /பெரோசஸ் எழுதியதை இன்று 36, 45 என்றே புஸ்தகங்கள் கூறும்.

28. இந்தியாவின்  வடகோடியில் இருந்து தென் கோடி வரை புரம் . புரி , பூர் , ஊர் என்பதை இன்றும்  காணலாம் . ஹஸ்தினாபுரம் துவங்கி கருவூர், உறையூர் வரவு உளது. சுமேரியாவின் மிகப்பெரிய நகரமும் ஊர் – புரி என்றே அழைக்கப்பட்டது

29. அஜபாலன் (முதலில் கொடுத்துவிட்டேன்)

xxxx

ஆலகால விஷம் பற்றிய அதிசய செய்தி …

https://tamilandvedas.com › ஆலக…

 1.  

16 Feb 2021 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 9272. Date uploaded in London – –16 FEBRUARY 2021. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- …

கோணிச் சாக்கும் சுமேரிய மொழிச் …

https://tamilandvedas.com › கோ…

 1.  

17 Feb 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … போது உருவான ஆலகால விஷத்தை இரு தரப்பினரையும் காப்பாற்ற சிவ பெருமான் விழுங்கியதும், அதை …


குக்குலு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

 1.  

12 Dec 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் குங்கிலியம் … ஏனெனில் அவர்கள் மத வழிபாட்டுத் தல ங்களில் அதர்வண வேதம் சொல்லும் பொருள், …


சுமேரியாவில் சம்ஸ்கிருத …

https://tamilandvedas.com › சும…

 1.  

13 May 2014 — சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!! … இதற்கு நேர் மாறாக சங்கத் தமிழ் இலக்கியமும் இந்து மத வேத ,இதிஹாச, புராணங்களும் …

சுமேரியா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 1.  

tamilandvedas.com, swamiindology.blogspot.com … மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . … சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723) … என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

எகிப்திய, சுமேரிய, இந்திய …

https://tamilandvedas.com › எகிப…

 1.  

Translate this page

12 Feb 2017 — எகிப்திய, சுமேரியஇந்திய நாகரீகத்தில் காளை மாடு (Post No.3631). Picture of … காளை விஷயத்தில் எல்லா நாகரீகங்களிலும் ஒரு ஒற்றுமை …


சுமேரிய | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 1.  

4 Dec 2019 — சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்! … ஆகவே இந்திய நாகரீகம் இங்கே தோன்றி இங்கேயே வளர்ந்து உலகம் …


சுமேரியா, எகிப்துக்கு … – Tamil and Vedas

https://tamilandvedas.com › சும…

 1.  

7 Sept 2014 — சுமேரியா, எகிப்துக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி! … கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

சுமேரியா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 1.  

tamilandvedas.com, swamiindology.blogspot.com … சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723) … இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் …


மநுவும் ஹமுராபியும்- யார் …

https://tamilandvedas.com › மநு…

 1.  

25 Dec 2018 — பழங்கால இந்தியாவில் நிறைய தர்ம சாஸ்திரங்கள் (சட்ட … அவனுக்கு முன்னரே பாபிலோனியா, சுமேரியா முதலிய அரசுகளின் … முதலில் மநுவின் சட்ட நூலுக்கும் ஹமுராபி சட்டத்துக்கும் உள்ள மேம்போக்கான ஒற்றுமைகளைக் …


ஒன்பது விஷயங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஒ…

 1.  

20 Aug 2018 — மற்றொரு மர்மமான பெயர் நாபாகநேதிஷ்டா. … நேதிஷ்டன், சுமுகன் போன்றோரும் சமயப் புரட்சி செய்தனரா என்று ஆராய வேண்டும். 4.

tags – சுமேரிய இந்திய ஒற்றுமைகள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: