நடந்தவை தான் நம்புங்கள்! – 14: மூன்று விளையாட்டு வீரர்கள்!(9475)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9475

Date uploaded in London – –  –10 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 14

ச.நாகராஜன்

மூன்று விளையாட்டு வீரர்கள்!

1  

நீ பாதி, நான் பாதி, நண்பா!

1916ஆம் ஆண்டு பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஜப்பானைச் சேர்ந்த இரண்டு போல் வால்ட் வீரர்கள் (Poe Vaulters) அதில் கலந்து கொண்டனர். ஷுஹெரி நிஷாடா மற்றும் சுயி ஓ (Shuhei Nishada and Sueo Oe) என்ற பெயருடைய அந்த இரு வீரர்களும் ஒரே உயரத்தைத் தாண்டினர். முதல் இடத்தைப் பிடித்தவர் எர்ல் மெடோஸ் (Earl Meadows) என்பவர். அவர் தங்க மெடலைத் தட்டிச் சென்றார். அடுத்தாற் போல இந்த இரு வீரர்களும் இரண்டாவதாக இருந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டனர். நிஷிடாவே வெள்ளி மெடல் பெற இரண்டாவதாக அறிவிக்கப்படலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். மூன்றாவதாக வெங்கல மெடலை சுயி ஓ பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இருவரும் ஜப்பானுக்குத் திரும்பினர்.

அங்கு உண்மையிலேயே யார் இரண்டாவது இடத்தைப் பெறத் தகுதியானவர் என்று பார்த்து விடலாம் என்று எண்ணினர். இருவரும் மீண்டும் மீண்டும் முயன்ற போதும் கூட ஒரே உயரத்தையே தாண்டினர். இறுதியாக இருவரும் தங்கள் வெள்ளி மற்றும் வெங்கல மெடல்களை ஒரு பொற்கொல்லரிடம் கொடுத்துப் பாதியாக வெட்டச் சொன்னார்கள். பிறகு அதை ஒட்டச் சொன்னார்கள். எப்படி என்றால் ஒட்டிய புதிய ஒலிம்பிக் மெடலில் ஒரு பாதி வெள்ளி, மறு பாதி வெங்கலம். இப்படி  ஒரு தனித்துவம் மிக்க ஒலிம்பிக் மெடல்கள் இவை தாம்!

2

19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி கொண்ட வீரர்!

மைக்கேல் பெல்ப்ஸ் (Michael Fred Phelps) உலகம் இதுவரை கண்டிராத அபூர்வ நீச்சல் வீரர். ஒரு ஒலிம்பிக் விளையாட்டில் 8 தங்க மெடல்களை ஒருவர் வெல்லக் கூடும் என்பதை யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவர் அதைச் செய்து காட்டினார். அமெரிக்கரான பெல்ப்ஸ்

30-6-1985 அன்று பிறந்தவர்.

2008ஆம் ஆண்டு பீகிங் ஒலிம்பிக்கில் 8 தங்க மெடல்களை அவர் வென்றார். இவரது சாதனைப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

மொத்தம் 28 ஒலிம்பிக் மெடல்களை அவர் வென்றார். அதில் 23 தங்க மெடல்கள்! இதில்  முக்கியமான விஷயம் என்னவெனில் அவர்  7 வயது

சிறுவனாக இருந்த போதே ஏடிஹெச்டி (ADHD – Attention Deficit Hyper activity Disorder – கவனக்குறைவு மிகை இயக்கக் குறைபாடு ) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்றார். ஆனால், அவர் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தில் மிகவும் ஒருமுனைப்பட்ட சக்தியைக் காண்பித்து ஒவ்வொரு போட்டியிலும் வென்றார்.

மன வியாதி கொண்டாலும் கூட ஒருவர் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்த அவர் தனக்கென ஒரு வெற்றி பார்முலாவை உருவாக்கிக் கொண்டிருந்தார். அதாவது நீச்சல் போட்டி ஆரம்பமாகும் முன்னரேயே தான் வெற்றி பெற்றதாக மனக் கண்ணில் கண்டு அதை அப்படியே நிஜமாக்கிக் காட்டுவார்.  ஒரு குறிக்கோளை எண்ணினால் அதை அடைய வெறி கொண்டால் போதும் வெல்லலாம் என்பதே அவரது வெற்றி பார்முலா!

3

ஃபுட் பால் மேட்ச் டிக்கட் வாங்க நின்று கொண்டிருந்தவரை  ‘வாங்க வேண்டாம் என்று தடுத்தார் அவர் நண்பர்.

‘ஏன் என்று கேட்டார் டிக்கட் வாங்கப் போனவர்.

‘ஏனென்றால் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னாலேயே எனக்கு என்ன ஸ்கோர் என்று தெரியும் என்றார் நண்பர்.

ஆச்சரியப்பட்டுப் போய், “அப்படியா, என்ன ஸ்கோர்? என்று கேட்டவருக்கு வந்தது பதில்.

“0-0”

tags– நடந்தவை -14:, விளையாட்டு வீரர்கள்,

—subham—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: