உலக இந்து சமய செய்தி மடல் 18-4-2021 (Post No.9507)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9507

Date uploaded in London – –18 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   18 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

மஹா கும்பமேளா  2 வாரங்களுக்கு முன்னரே முடியும்

உத்தர்கண்ட்டின் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.



உத்தரகண்டின் ஹரித்வாரில் துவங்கி, பல மாவட்டங்களில், 1,650 ஏக்கர் பரப்பளவில், கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பாதயாத்திரையாக வந்து, புனித நீராடிய சாதுக்கள் மீது, மாநில அரசு தரப்பில், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. இது தவிர, கங்கையின் பிற இடங்களில் லட்சக்கணக்கானபக்தர்கள் புனித நீராடினர். மாநில அரசு தகவல்களின்படி, ஒரே நாளில்  17.31 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கங்கையில் புனித நீராடினர்


ம.பி.,யை சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா அமைப்பு, கும்பமேளாவை முடித்து கொள்வதாக அறிவித்து உள்ளது. புனித நீராடலுக்கு வந்த 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட் செய்தி ஒன்றில் இதுவரை இரண்டு புனித நீராடல்கள் நடந்து விட்டதால் இனி வரும் புண்ய ஸ்னானங்களை அடையாளபூர்வமாக வைத்துக்கொண்டு முடிப்பது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார். சாதுக்களின் நலன் அறிவதற்காக அவர்களை தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாகவும் ட்வீட் செய்துள்ளார்.

பெருமளவில் புனித நீராடல்களைக்  கைவிடவேண்டும் என்பதே இதன் கருத்து என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கும்ப மேளா போன்ற விழாக்கள் நடைபெறாத மாநிலங்களிலும்  கூடுதலாக வைரஸ் நோய் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

XXXX

சீனாவில் சம்ஸ்கிருத மொழி பிரபலம்’

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக சம்ஸ்கிருத மொழி பிரபலமாக இருப்பதாக அந்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியா் வாங் பாங்வெய் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

பண்டைய இந்தியாவில் இருந்து பெளத்த மதத்துடன் சம்ஸ்கிருத மொழியும் சீனா வந்து சோந்தது. சீனாவில் சம்ஸ்கிருத மொழி குறித்த ஆய்வுகள், கற்பித்தல் பணிகளுக்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது.

இந்தியாவில் இருந்து பெளத்த மதம் சீனா வந்த பின்னா், சீன பெளத்த துறவிகள் இந்தியாவின் பண்டைய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயா்த்தனா். அப்போது முதல் சீனாவில் சம்ஸ்கிருத மொழியை படிப்பதும், சம்ஸ்கிருத ஆய்வுகளும் தொடங்கின. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிந்து, பெளத்த மதங்கள், பண்டைய இந்திய மருத்துவம், வானவியல், கணிதம் உள்ளிட்டவற்றை சீனா்கள் கற்பதற்கு சம்ஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்தது.

நான்காம் நூற்றாண்டைச் சோந்த காஷ்மீா் பிராம்மணரான குமாரஜீவா என்னும் அறிஞா் சீனாவில் தங்கியிருந்தபோது பெளத்த சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயா்த்தாா். அது அவருக்கு ‘சீனாவின் தேசிய ஆசிரியா்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்திய, சீன பண்பாட்டு நாகரிகங்களுக்கு இடையே உறுதியாக அடித்தளமிட்ட எண்ணற்ற சம்ஸ்கிருத அறிஞா்களில் அவரே முதன்மையானவா். மரியாதைக்குரிய அறிஞராகவும் சிறையிலுமாக அவா் 23 ஆண்டுகள் சீனாவில் கழித்தாா்.

இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள ஆா்வம் காட்டுவோா் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. சம்ஸ்கிருதம் அதற்கு சிறந்த வழியாகும். பல அரிய பண்டைய சம்ஸ்கிருத நூல்கள் சீனாவில் உள்ளன.

இவை இந்தியாவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . பீகிங் பல்கலைக் கழகத்தில் 100 ஆண்டுகளாக சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படுகிறது என்றார்

நூறாண்டுகளாக பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாஹியான், யுவாங் சுவாங் ஆகிய யாத்ரீகர்கள் சம்ஸ்க்ருதம் கற்றனர் என்றும் அவர் சொன்னார் ஸீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகத்தில் அவர் சென்றவாரம் பேசினார் லிட்டில் குரு என்னும் கல்வி கற்க உதவும் அப்ளிகேஷன் – மென்பொருள் — அறிமுக நிகழ்சசியில் பேராசிரியர் வாங்கி உரையாற்றினார்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து வரும் 21-ம் தேதி ஆதாரம் வெளியிடப்படும் : திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் ஏப்ரல் 13 யுகாதி வருடப் பிறப்பன்று  வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது  இப்போது  அதனை 21-ம் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி வெங்கடாசலபதி  கோவில் உள்ள சேஷாசல மலைத் தொடரில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பல புராணம் மற்றும் இதிகாசங்கள் ஆய்வு செய்யப்பட்டது.  மேலும் இது சம்மந்தமாக ஆய்வு செய்ய 6 பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்தது.

அவர்கள் பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.  அதன்படி ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெலுங்கு வருட பிறப்பன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

தற்போது அதை மாற்றி தேவஸ்தானம் சார்பில் வருகிற 21-ம் தேதி ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று  அறிவித்தது .

இதனிடையே கர்நாடக மக்களுக்கு இந்தச் செய்தி கவலை தந்துள்ளது .கர்நாடகத்திலுள்ள ஹம்பி, பெல்லாரி பகுதியே கிஷ்கிந்தா என்று கண்டறியப்பட்டதால் அங்குதான் அவர் பிறந்தார் என்று கர்நாடகம் கூ றிவருகிறது

ஆந்திரம் கர்நாடகம் ஆகிய இரு மாநில ஆ ஞ்சனேய  பக்தர்களும் ராம நவமி அன்று வெளியாகப் போகும் செய்தியை ஆவலு டன் எதிர் பார்த்து நிற்கின்றனர்

xxxx

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், APRIL 11  இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.

தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்

.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்.  இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், இன்று காலை மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் செ ன் றார்.


கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

XXX

சிவன் கோயிலில் முஸ்லிம் எம்.எல்.ஏ., – கைது செய்ய பா.ஜ., எம்.பி., கோரிக்கை

 காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் ஜார்கண்டிலுள்ள வைத்தியநாதர் கோயிலில் பூஜை செய்ததற்காக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க., எம்.பி., ஒருவர் கோரியுள்ளார்.



ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் ஏப்.,17  சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த வாரம் காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத ஜோதிர்லிங்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். ஹிந்து சடங்குகளை செய்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே, ஹிந்துக்களின் உணர்வுகளை அன்சாரி புண்படுத்திவிட்டதாக கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்வேன். அன்சாரி சிவ பக்தர் என்றால் முதலில் ஹிந்து மதத்தை பின்பற்றவும், பின்னர் பூஜை செய்யவும். பாபா வைத்தியநாத கோயிலின் கருவறைக்குள் முஸ்லிம்கள் நுழையவோ, பூஜை செய்யவோ அனுமதி கிடையாது. மெக்காவில் ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அதே நிலை தான் வைத்தியநாதர் கோயிலிலும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்.எல்.ஏ., அன்சாரி, ‛இடைத்தேர்தலை ஒட்டி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துபே முயற்சிக்கிறார். அவரது அனைத்து செயல்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். பாபா நகரி எனது பிறப்பிடம். நான் இந்த கோயிலுக்கு வழக்கமாக வருகை புரிபவன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் மெகா கூட்டணி இடைத்தேர்தலில் வென்ற பிறகும் பூஜை செய்வேன். என்னை யார் தடுக்கிறார்கள் பார்க்கிறேன். சிவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அனைவருக்குமானவர். அவர் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு,’ என்றார் இர்பான் அன்சாரி.

Xxxx

ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலைகள் திரும்பின

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில், 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

xxxx

மதுரை சித்திரை திருவிழா:

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்  திருவிழா கொடி ஏற்றத்துடன்  தொடங்கியது . மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இணையதளத்தில் மட்டுமே பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக ஏப்ரல்  22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறும் .

ஏப்ரல் 24 திருக்கல்யாணம் முடிந்த பிறகு சாமி அம்மனை மணக்கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. . 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஏப்ரல் 25 தேரோட்டம் நடைபெறும்.

அழகர் கோயில் திருவிழா :
இதே போல சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய பங்கு வகிப்பது அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விஜயம் செய்யும் நிகழ்வு. இதில் தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்குதல்,மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், தசாவதார நிகழ்வு, வண்டியூர் கோயில் செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அழகர் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Xxxx

புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலைக்கும் துஷ்யந்த மன்னனுக்கும் காதல் மலர்கிறது. துருவாச முனிவர் சாபத்தினால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.

இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை தேர்வு செய்தனர்.

இந்த படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும் தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார்.

Xxxx

முஸ்லிமாக புதைக்கப்பட்ட ஹிந்து; சவுதி அரேபியாவில் நடந்த குளறுபடி

சவுதி அரேபியாவில், முஸ்லிம் என தவறாக கூறி, அந்த மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியாவுக்கு விரைவில் எடுத்து வரப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சஞ்சீவ் குமார், 51, என்பவர், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். துாதரக அதிகாரி ஒருவர், சஞ்சீவ் குமார், ஒரு முஸ்லிம் என, இறப்பு சான்றிதழில் தவறாக குறிப்பிட்டதால், இந்த குளறுபடி நடந்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இந்திய துாதரகம், அவரது மனைவி அஞ்சு சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

அஞ்சு சர்மா, ‘ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதற்காக, கணவரின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர உத்தரவிட வேண்டும்’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்ப்போது, வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”சவுதி அரேபிய அரசு, சஞ்சீவ் குமார் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் உடல் இந்தியா எடுத்து வரப்படும்,” என, தெரிவித்தார்.

Xxxx

திருப்பதி கோவில்களில் யுகாதி பண்டிகை விழா

ஆந்திரா, தெலுங்கானாவில் ஏப்ரல் 13ம் தேதி  செவ்வாய்க்கிழமை யுகாதி பண்டிகை விழா நடந்தது. திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி  கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடந்தது .

தாட பள்ளியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் பஞ்சாங்க  படனம் நடந்தது. ஆந்திர மாநில அரசாங்க ஜோதிடர் கப்பகந்துலு சுப்பராஜ சோமயாஜுலு பஞ்சா ங்கத்தை வாசித்தார் . திருப்பதி- திருமலை அர்ச்சகர்கள் உளப்பட பலரும் மந்திரிகளும் பஞ்சாங்க படனத்தில் பங்கேற்றனர் . ஆந்திர முதல் அமைச்சருக்கும் , ஆந்திர மாநிலத்துக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரஹ நிலைகளை சுட்டிக்காட்டி சிரவணம் செய்தார் சோமையாஜுலு. ஆந்திர முதலமைச்சர் அரசாங்க ஜோதிடரையும் அர்ச்சகர்களையும் கவுரவித்தார்

xxxx

பாக்.,கில் கோவில் இடிப்பு; சீரமைக்க ரூ.3.48 கோடி


பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ்ஜி மஹராஜ் சமாதி ஆகியவை உள்ளன . இவற்றை தீவிரவாத முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் இடித்து சேதப்படுத்தினர். இதற்கு இந்திய  மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


இதையடுத்து, ‘கோவில் மற்றும் சமாதி சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, கைபர் பக்துன்க்வா மாகாண ஹிந்துக்கள் அமைப்பினர், கடந்த மாதம் நடத்திய கூட்டத்தின் முடிவில், கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பினரை மன்னிப்பது என, முடிவு செய்தனர்.

சீரமைப்பு பணிகளுக்காக, கைபர் பக்துன்க்வா மாகாண அரசு தற்போது, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- Tamil Hindu, newsroundup18421,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: