ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் ஓர் அதிசய டைரக்டர் (Post.9577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9577

Date uploaded in London – –7 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மர்மமும் திகிலும் நிறைந்த திரைப்படங்களைத் தயாரித்து உலகப்புகழ் பெற்ற ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் ALFRED HITCHCOCK லண்டனில் 1899ஆம் ஆண்டில் பிறந்தார். கட்டுப்பாடும் கண்டிப்பும் நிறைந்த ஒரு கத்தோலி க்கப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.

      இவரது சிறு வயதில் நடந்த சில நிகழ்ச்சிகளே இவரை மர்மக்கதை இயக்குநராக மாற்றியது. ஹிட்ச்காக்கிற்கு 5 வயது. அவரது தந்தை கையில் ஒரு கடிதத்தைக்  கொடுத்து அருகாமையிலுள்ள ஒரு போலீ ஸ் நிலையத்தில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். HITCHCOCK மகிழ்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு ஓடிப் போனார். காவல் நிலையத்தில் அதை வாங்கிப் படித்த போலிஸ்காரர் HITCHCOCKஐ பிடித்து லாக் அப்பில் அடைத்து கதவைப்  பூட்டினார். HITCHCOCKஐ பயம் பற்றிக்கொண்டது. அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வருவதற்குள் சில நிமிடங்களுக்குள்ளேயே அறைக்கதவைத் திறந்துவிட்டார் போலீ ஸ்காரர். அத்தோடு சில வார்த்தைகளையும் உதிர்த்தார். “அப்பனே வீட்டில் விஷமம் செய்யும் பையன்களுக்கு நாங்கள் தரும் தண்டனை இது”. என்று எச்சரித்தார். ஆனால் எதற்காக தனது தந்தை இப்படிப்பட்டதொரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் என்பது ஹிட்ச்காக்கிற்கு தெரியவே இல்லை. இப்படி அவரது வாழ்க்கையே திகிலுடன் தொடங்கியது.

மேலும் இவர் படித்த கல்விக்கூடத்தில் தவறு செய்தால் பிரம்படி கொடுப்பது வழக்கம். ஆனால் பிரம்பு தண்டனையை நாளின் துவக்கத்திலோ வகுப்புகள் முடியும்போதோ வாங்கி அனுபவிக்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள்  மாலையில் பள்ளிக்கூடம் முடியும்வரை பிரம்படி பெறுவதை/ தண்டனையை/ ஒத்திப்போடுவார்கள். அப்போது நாள் முழுதும் அவர்கள் மாலையில் தனக்குக் கிடைக்கப்போகும் பிரம்படி பற்றியே பேசிக்கொண்டு ஒருவித திகிலுடன் சஸ்பென்ஸுடனும் இருப்பார்கள். பிரம்படியைவிட இந்த திகில் தான் அவர்களுக்கு பெரிய தண்டனை. இதையெல்லாம் பார்த்த HITCHCOCK அவர்களுக்கு சஸ்பென்ஸ் / திகில் விஷயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதே உத்தியை அவர் திரைப்படத்தில் கையாண்டு வெற்றியும் பெற்றார்.

      HITCHCOCKக்கிற்கு 14-வயதானபோது தந்தை இறந்ததால் அவர் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வேலைக்குப் போனார். திரைப்படம் பார்ப்பதும் படம் வரைவதும் அவரது பொழுதுபோக்குகள். நாளடைவில் திரைப்படத்தின் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அந்த தருணத்தில் ஒரு அமெரிக்க திரைப்பட நிறுவனம் லண்டனில் ஒரு பிரபல நாவலை திரைப்படமாக்கப் போவதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது. உடனே தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க விரும்பிய HITCHCOCK அந்த நாவலை படித்து அதற்குத் தேவையான அட்டைகளை வரைந்தார். அந்தக் காலத்தில் ஊமைப்படங்களே இருந்ததால் இடையிடையே எழுத்து வடிவத்தில் கதையின் முக்கிய பகுதிகள் வரும். இதற்காக HITCHCOCK அழகாக கட்டம் கட்டி அதற்குள் வாசகங்கள் எழுதிய அட்டைகளைப் பார்த்த அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் உடனே அவருக்கு வேலை கொடுத்தது. அப்போது அவருக்கு வயது 20.

மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபின் அவரே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த திரைப்படம் நிறைவுபெறவேயில்லை. பிரிட்டனில் அப்போதுதான் திரைப்பட்த் தொழில் வளரத் தொடங்கியிருந்தது. ஆனால் அமெரிக்காவிலுள்ள ஹாலிவுட்டிலோ நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. ஆகையால் HITCHCOCK அமெரிக்கா பயணமானார். அங்கு திரைப்படத் தொழிலில் வேலை பெற்றதோடு அதே நிறுவனத்தில் பணியாற்றிய ALMA REVILLE என்ற பெண்ணையும் மணந்தார்.

1925ஆம் ஆண்டில் THE PLEASURE GARDEN என்ற படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டு இவர் எடுத்த THE LODGER என்ற படம் வெற்றி நடைபோட்டது. இதுதான் அவரது முதலாவது திகிலூட்டும் திரைப்படம். அதுவரை அமெரிக்க திரைபடத்திற்கு அடுத்த நிலையில் இருந்த பிரிட்டிஷ் திரைப்படங்கள் THE LODGER” வெளியானவுடன் புகழ்பெறத் துவங்கின. இது பேசாத ஊமைத் திரைப்படம்.

இந்த நேரத்தில் முதலாவது பேசும் திரைப்படம் THE JAZZ SINGER அமெரிக்காவில் வெளியானது. இது திரைப்படத் தொழிலில் பெரும் புரட்சி செய்தது. பிரிட்டிஷ் படத்தயாரிப்பாளர்கள் இந்த புதுமையை மக்கள் விரும்புவார்களோ மாட்டார்களோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில் BLACKMAIL என்னும் படத்தில் பேச்சுக்களையும் இசையையும் HITCHCOCK பயன்படுத்தினார். அதுதான் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் திரைப்படம். HITCHCOCK அந்தப் படத்தில் தோன்றினார். ஒரு இயக்குநரே படத்தில் காட்சி தந்த முதல் திரைப்படம் அதுதான். அதிலிருந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் HITCHCOCK வரும் காட்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவ்வளவு பெயர் புகழ் அவருக்கு. REBECCA, STAGE FRIGHT, THE BIRDS என்று பல படங்களில் அவர் தோன்றினார்.

1934ஆம் ஆண்டில் அவர் எடுத்த THE MAN WHO KNEW TOO MUCH என்ற படமும் 1936இல் எடுத்த THE THIRTY NINE STEPS என்ற படமும் பெரும் புகழை ஈட்டித்தந்தன. உடனே அவருக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரத்துவங்கின. இதே நேரத்தில் இரண்டாவது உலகப்போர் தொடங்கிவிடவே பிரிட்டனிலுள்ள ஸ்டுடியோக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. போர்க்காலத்தில் இவர் எடுத்த FOREIGN CORRESPONDENT, LIFE BOAT ஆகிய படங்கள் ஜெர்மனியை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. SUSPICION என்ற படம் சிறந்த நடிகைக்கான OSCAR விருதையும் வென்றது.

லண்டனில் உள்ள WESTMINSTER CATHEDRAL கோபுரம் அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவியின் சிலை ஆகியவற்றின் உச்சியில் இவர் படம் எடுத்த சண்டைக் காட்சிகள் மயிர்கூச்செரியும் காட்சிகள். ஒவ்வொரு படத்திலும் புதுப்புது உத்திகளை கையாண்ட இவர் உலகப்புகழ் பெற்ற டைரக்டரானார். 1955இல் ஹாலிவுட்டில் குடியேறி அமெரிக்கப் பிரஜையாக மாறினார்.

இவருடைய படத்தில் வரும் காட்சிகள் நினைவிலிருந்து நீங்காது நிற்கும். அமெரிக்காவில் SOUTH DAKOTA மாநிலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவங்கள் பிரம்மாண்டமான அளவிற்கு மலையில் செதுக்கப்பட்டன. அதை பயன்படுத்தி NORTH BY NORTHWEST என்ற படத்தில் ஆபிரஹாம் லிங்கன் சிலையின் தலைமீது சண்டை நடைபெறும் காட்சிகளை படமாக்கினார். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. NOTORIOUS, STRANGERS ON A TRAIN   ஆகியவையும் இவரது புகழ்பெற்ற படங்கள்.

ஒவ்வொரு காட்சிக்கும் இவர் அவ்வளவு அக்கறை செலுத்தினார். உயிரையே கொடுத்தார் என்பதற்கு இவரது புகழ்பெற்ற படமான PSYCHO ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கதாநாயகி குளிக்கும்போது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இந்த காட்சி 45 விநாடிகளே படத்தில் வருகிறது. ஆனால் இதற்கு அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு நாட்கள். பல்வேறு காட்சிகளை தனியே எடுத்த பின்னர் ஒட்டுப்போட்டுக் காட்டிய இந்தக் காட்சியை பார்த்தவர்களுக்கு கண்களால் கண்டதைவிட கற்பனை செய்து கொண்டது அதிகம். HITCHCOCKஇன் திறமை நமது கண்களையே ஏமாற்றிவிடும்.

          பறவைகள் BIRDS என்ற இவரது படமும் மிகவும் பயங்கரமான படம். திடீரென்று ஏராளமான பறவைகள் மனிதர்களைத் தாக்குவதாகக் கதை. இதில் கதாநாயகியை வீட்டிற்குள் பறவைகள் தாக்கும் காட்சிக்கு இயந்திரப் பறவகளை பயன்படுத்த முடியவில்லை. இதற்காக உண்மையான பறவைகளைப் பிடித்து பயிற்சி தந்து 7 நாட்கள் படமாக்கினார். அதில் கதாநாயகி பட்ட துன்பம் கொஞ்சமோ நஞ்சமோ அல்ல. ஒரு பறவை உண்மையிலேயே அவள் கண்ணைக் கொத்திக் கொடுமைப்படுத்தியது. அவ்வளவு கஷ்டபட்டு எடுக்கப்பட்ட படம். அந்த அளவுக்கு புகழையும் தந்தது.

HITCHCOCK அவர்கள் 81 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 1980ஆம் ஆண்டில் இறந்தார்.

இவரது படங்கள் NEW WAVE” புதிய அலைப் படங்களைத் தாயாரித்த இயக்குநர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

My old Articles

அதிசயத் தமிழன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

19 Apr 2012 — ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் …


டாப்னி மோரியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ட…

  1.  

13 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com. jam 2 … பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார். jam5.

—SUBHAM—

TAGS- ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் ,  டைரக்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: