வேதம் கூறும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி இடம்! (Post No.9580)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9580

Date uploaded in London – –  –8 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

ஸ்ரீ ராமரின் எல்லையற்ற கருணை:

இடம்: சுப்ரீம் கோர்ட். துளஸி பீடத்தின் ஸ்தாபகர் தர்ம சக்ரவர்த்தி, பத்ம விபூஷன் ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராசார்யா, ஸ்ரீ ராம ஜன்மபூமி வழக்கில் வாதியாக வந்து அமர்ந்திருக்கிறார். சர்ச்சையில் இருக்கும் அயோத்யா ராம ஜென்ம இடத்தைப் பற்றிய குறிப்புகளை, மேற்கோளுக்கு மேல் மேற்கோளாக சாஸ்திரங்களிலிருந்து அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அவர்.

நீதிபதியாக அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லீம். அவர், துளைக்கும் ஒரு கேள்வியை வாதியின் முன் வைத்தார்: நீங்கள் எப்போதுமே வேதம் சொன்னதையே நிரூபணமாகக் கேட்பவர்கள். குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் தான் ஸ்ரீ ராமர்  பிறந்தார் என்பதற்கு வேதத்தில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

ஜகத்குரு ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை. ஞானக் கண்ணைக் கொண்ட அவர், “ஓ! இருக்கிறதே, அதை என்னால் கூற முடியும் என்றார். உடனே ரிக் வேதத்தில் உள்ள  ஜைமீனிய சம்ஹிதாவிலிருந்து பல குறிப்புகளைக் கூற ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட திசையில், சரயு நதியில் உள்ள  ஒரு குறிப்பிட்ட இடத்தை, அதுவும் அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருப்பதை, ஸ்ரீ ராம ஜென்ம பூமியாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கூறினார் அவர். வழக்கில் சர்ச்சைக்குரிய இடமாகச் சொல்லப்பட்ட இடம் அந்த இடத்தில் அப்படியே இருந்தது. கோர்ட்டாரின் உத்தரவுப் படி ஜைமினீய சம்ஹிதா நீதிபதிக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. அவர் கூறிய விவரணம் அனைத்தும் அதில் அப்படியே இருந்தது. சர்ச்சைக்குரிய இடமானது சம்ஹிதா கூறியபடி அதே இடத்தில் தான் இருந்தது.

அந்தக் குறிப்பானது ஹிந்துக்களுக்கு சாதகமாக வழக்கை மாற்றியது. முஸ்லீம் நீதிபதி கூறினார்:இன்று நான் பாரதீய அறிவின் அதிசயத்தைக் கண்ணால் பார்த்தேன். எப்படி கண்பார்வையற்ற ஒருவர் அள்ள அள்ளக் குறையாத வேத ஞானத்திலிருந்து மேற்கோளை அனாயாசமாகக் கூற முடிகிறது என்பதைப் பார்த்தேன். இது தெய்வீக சக்தியே தான் அல்லவா?

ஸ்ரீ ராமபத்ராசார்யாஜி இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போதே கண்பார்வையை இழந்து விட்டார். இப்போது அவருக்கு 22 மொழிகள் தெரியும். 80 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

நன்றி Truth Volume 88 No 13 Reprinted again in Truth Volume 89 No 1 dated 16-4-2021

***

இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலக் கட்டுரை கீழே தரப்படுகிறது.

Lord Sri Rama’s Grace Infinite:

The scenario in the Supreme Court was as follows:– Dharma Chakravarty, Founder of the Tulsi Peeth, Padma Vibhushan, Jagadguru Sri Rambhadracharya was present, as the plaintiff in the Sri Ram Janmabhumi case, who was quoting references after references from the Shastras in favour of Sri Ram Janmasthan at the disputed site in Ayodhya.

The person sitting on the chair as Judge was a Muslim by religion. He asked a piercing question to him, “You always ask for Vedic references as proof. Can you cite a reference from the Vedas to prove that Sri Ram was born in Ayodhya at the same very place?”

Without wasting a second, the Prajna Ckakshu saint (one endowed with the eyes of wisdom) said, “Yes Sir, I can”… and he started quoting references from Jaiminiya Samhita of the Rig Vedas, pointing from a specific site in the Saryu river, in a particular direction at a definite distance identifying as the place of Sri Ram Janmasthan, that has been clearly indicated. The disputed site exists at just that

place. On the basis of Court orders, Jaiminiya Samhita was produced before him and all the descriptions quoted were found to be accurate. The disputed site exists at that very place.

And the statement turned the course in favour of the Hindus. The Muslim Judge acknowledged, “Today I have witnessed the wonder of Bharatiya wisdom…how a person who is devoid of physical eyes was extensively quoting from the inexhaustible source of the (Vangmay) Veda Shastras? Is it not the Divine Powers?”

Sri Rambhadracharyaji lost his vision, just at the age of two months. Today he knows 22 languages, and has already written eighty books. (Truth Vol. 88, No. 13)

***

tags- ஸ்ரீ ராம ஜென்ம பூமி, ராமபத்ராசார்யாஜி, ஜைமீனிய சம்ஹிதா,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: