
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9585
Date uploaded in London – –9 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 9-5-2021
இன்று May 9 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
அனுமன் பிறப்பிடம் விவாதம் ; கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு
அனுமன் பிறப்பிடம் சேஷாத்திரி மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்ற திருப்பதி தேவஸ்தான விவாதத்தை எதிர்த்து, ஆறு பக்க கடிதம் எழுதி, கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலைக்கு அனுப்பி உள்ளது.

ராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆய்வு செய்ய, பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழுவினர் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதி காசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என, முடிவு செய்யப்பட்டது. இதை ஸ்ரீராமநவமி அன்று, தேவஸ்தானம் திருமலையில் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.இதை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஆறு பக்க கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராச்சிகளின் முடிவில், ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது.இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது? இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்க, திருமலை தேவஸ்தானம் தயாராகி வருகிறது.
XXXXX
இந்து அமைப்பு சேவா இண்டெர்நேஷனல் பேருதவி

எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் உதவும் இந்து அறக்கட்டளையான சேவா இண்டெர்நேஷனல் அமைப்பு இந்திய கோவிட் வைரஸ் நெருக்கடியைத் தீர்க்க 70 லட்சம் டாலர் நிதியை ஒரே வாரத்தில் எழுப்பி இருக்கிறது. அமெரிக்கர்களின் கருணை உணர்வை தாராள மனப்பான்மையை சேவா இண்டெர்நேஷனல் தலைவர் அருண் காங்கனி புகழ்ந்தார் .
இதனிடையே வாஷிங்டனிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது
இந்தியாவுக்கு உதவும் குழுவில் சுந்தர் பிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ, 40க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்காவில், 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இணைந்து, இந்தியாவுக்கு உதவ, சிறப்பு குழு அமைத்துள்ளனர்.வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உட்பட, பல மருத்துவ உபகரணங்களை, இந்தியாவுக்கு, இந்த சிறப்பு குழு அனுப்பி வைத்துள்ளது.
இந்த குழுவில், அமெரிக்க வாழ் இந்தியர்களான, கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிலோட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி புனித் ரஞ்சன், ‘அடோப் இங்க்’ நிறுவன தலைமைச் செயலர் அதிகாரி ஷாந்தனு நாராயண் ஆகியோர் இணைந்துள்ளனர்.
XXX
கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்

இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை.
அருகாமை மாநிலமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருமே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மட்டும் ஏனோ கடவுள் பெயரால் யாரும் உறுதிமொழி எடுக்காமல் பதவியேற்றனர். இதற்கு காரணம் திமுகவின் கொள்கையா? இல்லை வேறு எதுவும் காரணமா என கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வு, பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது.
சுமார் 40,000 இந்தக் கோவில்களை பராமரிக்கும் அறநிலைய அமைச்சர் சேகர் பாபுவும் கூட கடவுள் பெயரில் உறுதி மொழி எடுக்காதது இந்துக்களிடையே அதிருப்தி அ லைகளைபி பரவ விட்டுள்ளது
XXX
திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை

திருப்பதி திருமலையிலுள்ள பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.
அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் மே மாதம் மூன்றாம் தேதி வழங்கினர்.
திருப்பதி கோவிலில் இந்த மாதம் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம்,
14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி.
16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம்,
17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி,
20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி,
25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி. ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன
XXXX
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பிறந்த தினம் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு
இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது பிறந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வருகிறது. எனவே ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்களை கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.
இதற்காக பிரத்தியேக பட்டு வஸ்திரங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு கூடையில் அவற்றை வைத்து கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்த பட்டு வஸ்திரங்களை இன்று நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின்போது ெரங்கநாதர் அணிந்துெகாண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் ஆண்டாளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஒன்றை பக்தர் ஒருவர் நேற்று வழங்கினார். இந்த புடவையில் ஆண்டாளின் உருவம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
XXXXX
பாகிஸ்தானில் சாதித்த ஹிந்து பெண்

பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.
பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., – 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி, சனா கூறுகையில், ”இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,” என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- உலக இந்து சமய, செய்தி மடல் 9-5-2021 ,