

Post No. 9642
Date uploaded in London – –24 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IBSEN
(1828 – 1906)

ஹென்ரிக் ஜோஹன் இப்சென் (HENRIK JOHAN IBSEN) நார்வே நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் ஒரு நாடக ஆசிரியர்.
தெற்கு நார்வேயில் ஸ்கீய்ன் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பணக்கார வர்த்தகர். ஆனால் 1836-இல் அவர் செல்வம் அனைத்தையும் இழந்து ஏழையானார்.
இப்சென் ஒரு மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய நாட்டம் முழுவதும் எழுத்திலேயே இருந்தது. கடையில் வேலைபார்த்துக் கொண்டே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ஆனால் அவை பாராட்டும்படியாக இல்லை. இதற்குப் பின்
நார்வே நாட்டின் தலை நகரான ஆஸ்லோ நகருக்குச் (OSLO) சென்று பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட பலருடன் டொடர்பு ஏற்பட்டது. படிப்பில் கூட கவனம் செலுத்தாது நாடகக் கலைஞர்களுடன் நேரத்தை செலவிட்டார். இறுதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடகம் எழுதத் துவங்கினார்.
1859-ஆம் ஆண்டில் ஆஸ்லோ நகரில் அவருடைய முதலாவது நாடகம் மேடை ஏறியது. இதைத் தொடர்ந்து BERGEN நகரில் நாடக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு ஏழாண்டுகளுக்குப் பிறகு அவருடைய புகழ்பெற்ற முதல் நாடகம் “LOVE’S COMEDY” வெளியானது. காதல் – திருமணம் பற்றிய இந்த நாடகம் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் நாடகக் கொட்டகையை நாட மறுத்து விட்டார்கள்.
இதற்கடுத்த 30 ஆண்டுகள் இப்சென் அவர்கள் இதாலியிலும் ஜெர்மனியிலும் காலந் தள்ளினார். அப்போதுதான் அவர் மிகவும் சிறந்த நாடகங்களைப் படைத்தார். “GHOSTS”, THE MASTER BUILDER, A DOLL’S HOUSE (பொம்மை வீடு), ROSMERSHOLM, THE WILD DUCK ஆகிய நாடகங்கள் வெளியிடப்பட்டன.
கடின உழைப்பு இன்சென் அவர்களைப் பாதித்தது. 74-ஆவது வயதுவரை வாழ்ந்தாலும் கடைசி 4 ஆண்டுகள் மனநிலை பாதிக்கப் பட்டநிலையில் வாழ நேரிட்டது.
xxxxxxxxxxxxxxxxx

tags- பொம்மை வீடு, நார்வே ,நாடக ஆசிரியர், இப்சென்,Ibsen


