அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Post No.9688)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9688

Date uploaded in London – –4 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HEMINGWAY

(1898 – 1963)

எர்னஸ்ட் ஹெமிங்

வே (ERNEST MILLER HEMINGWAY) அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் – நாவலாசிரியர். இவரது கதாபாதிரங்கள் துணிச்சல்மிக்கவர்கள் – உறுதிபடைத்தவர்கள் அவர்களது உரையாடல்களின் வாயிலாக ஹெமிங்வே தனது எழுத்துத் திறனை வெளிபடுத்தியுள்ளார்.

     இல்லினாய்ஸ் மாகாணத்தில் OAK PARK-இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு டாக்டர். தனது மகனையும் ஒரு டாக்டராக்க வேண்டும் என்பது அவரது ஆசை,

     ஆனால் ஹெமிங்வேயுக்கோ செய்தியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. 16 வயதினிலெயே பள்ளியை விட்டுச்சென்றார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார்.

     முதல் உலகப்போர் வந்தவுடன் படையில் சேர்ந்து இதாலியர்களுடன் —– கடுமையாகக் காயமடைந்தார். அவருக்கு CROIX DE GUERRE விருது அளிக்கப்பட்டது. இந்த அனுபவத்தை மையமாக வைத்து A FAREWELL TO ARMS என்ற நாவலை எழுதினார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிஸ் மாநகரம் சென்றார். அங்கு (EZRA POUND) எஸ்ரா பவுண்ட் (JAMES JOYCE) ஜேம்ஸ் ஜாய்ஸ் (GERTRUDE STEIN) ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் ஆகிய இலக்கிய உலகப் பெரும்புள்ளிகளைக் கண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்.

     பின்னர் அமெரிக்காவிலும் கியூபாவிலும் தங்கினார். கியூபாவில் தங்கிய காலத்தில் DEATH IN THE AFTERNOON என்ற நூலை எழுதினார். முரட்டுக் காளைகளை அடக்கும் விளையாட்டின் பெயரில் நடக்கும் கொடுமைகளை இந்த நூல் சித்தரிக்கிறது.

இவருக்கு வேட்டையாடுவதிலும் ஆர்வம் உண்டு. இதற்காக ஆப்பிரிக்கா சென்ற ஹெமிங்வே வேட்டையாடிய அனுபவங்களை THE GREEN HILLS OF AFRICA என்ற நூலில் வடித்தார். ஆப்பிரிக்காவில் இரண்டு விமான விபத்துகளிலிருந்து அதிசயமாக உயிர் தப்பினார்.

     1936ஆம் ஆண்டில் ஸ்பானிய உள்நாட்டுப் போர் (SPANISH CIVIL WAR) பற்றிய செய்திகளை திரட்டுவதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற FOR WHOM THE BELL TOLLS என்ற நாவல் இந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

     ஸ்பானியப் போர் முடிந்த பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பியவர், ஏராளமான சிறுகதைகளை எழுதி குவித்தார். அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர் வரிசையில் இவரும் ஒருவர்.

1952ஆம் ஆண்டில் THE OLD MAN AND THE SEA என்ற நூலை எழுதினார். 1954ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல்  பரிசைப் பெற்றார்.

     ஆனால் இறுதிநாட்களில் இவருக்கு எழுதமுடியவில்லை. மனம் தளர்ந்து நின்றார். 1962இல் ஒரு துப்பாக்கிச் சூட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அமெரிக்க,  நாவலாசிரியர், எர்னஸ்ட் ஹெமிங்வே,

–xxxx–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: