
Post No. 9702
Date uploaded in London – –7 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இந்தியாவின் அடிப்படையே வேதம், அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து மதம் நிற்கிறதது என்று ஆன்றோரும் சான்றோரும் பன்யாசங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இது முழுக்க முழுக்க சமயம் தொடர்பான விஷயம் என்று எண்ணியிருந்தேன்; அது தவறு; சமயத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்கும் ரிக் வேதமே அடிப்படை என்பது முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னேரே தெளிவாகிவிட்டது.

இதோ நான் கண்ட அற்புத விஷயங்கள்!
பாரதியார் கடன்வாங்கிய உத்தி
பாரதியார் பாடல்களில் எல்லோரும் மிகவும் ரசித்த பாடல்கள்
கண்ணன் என் தோழன்
கண்ணன் என் தாய்
கண்ணன் என் தந்தை
கண்ணன் என் சேவகன்
கண்ணன் என் அரசன்
கண்ணன் என் சீடன்
கண்ணன் என் சற் குரு
கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் என் காதலன் – 5 பாட்டுக்கள்
கண்ணன் என் காந்தன்
கண்ணன் என் ஆண்டான்
கண்ணம்மா என் குழந்தை
கண்ணம்மா என் காதலி – 6 பாடல்கள்
கண்ணம்மா எனது குலதெய்வம்
என்று 23 பாடல்களைக் காண்கிறோம் ; இவ்வாறு கண்ணன் அல்லது கண்ணம்மாவை பல்வேறு வகையில் உறவு கொண்டாடும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று எண்ணிப் பார்த்து வியப்பதுண்டு..
நாரத பக்தி சூத்திரம் முதலியவற்றில் இறைவனை குருவாக, தோழனாக, தலைவனாக பார்க்கும் பாவனைகள் இருந்த போதிலும் அதற்கும் முன்னதாகவே ரிக் வேதத்தில் இந்த அணுகுமுறை இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ரிக் வேதத்தில் உஷா என்னும் காலைப்பொழுதை , அருணோதய சமயத்தை வருணிக்கும் பாடல்கள் மிகவும் இயற்கை ரசனை மிக்கவை. அதில் உஷை என்னும் செக்கர்வானத்தை சகோதரி, காதலி, மனைவி, தாய், தோழி என்று வேத கால கவிகள்/ ரிஷிகள் வருணிக்கின்றனர்.
இதே போல அக்கினி தேவனையும் தூதன் , அறிஞன், நண்பன், தலைவன், தொண்டன் என்று வருணிக்கின்றனர்.
கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் ‘காம்ரேட்ஸ்/ தோழர்களே’ COMRADES என்று அழைப்பது போல ரிஷிகளும் “தோழர்களே! வாருங்கள் நாம் அனைவரும் பாடுவோம்” என்று சொல்லிக் கூடுகின்றனர்.
முதல் மண்டலத்தில் 191 துதிகளிலேயே எனக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன. பத்து மண்டலங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளைப் படித்து முடிக்கையில் இன்னும் பு தி ய விஷயங்கள் கிடைக்கக்கூடும் .
சம்பந்தர், மற்றும் அவருக்குப் பின்னர் வந்த தேவார , திருவாசக, திவ்யப் பிரபந்த பாடகர்கள், தங்கள் பெயரைச் சொல்லி பாடலில் ‘முத்திரை’ வைக்கின்றனர் அவருக்கு முன்னால் இப்படி பதிகத்துக்குப் பதிகம் தங்கள் பெயரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. பாரதியார் வேதம் படித்தது போலவே சம்பந்தரும் வேதம் படித்தவர்தான் . பல பாடல்களில் ருக் வேதம் என்று அவரே குறிப்பிடுகிறார். இப்படி பாடலின் இறுதியில் தன பெயரை வைத்து முத்திரை வைக்கும் வழக்கத்தை அவருக்கும் ரிக் வேதமே கற்பித்து இருக்க வேண்டும்.
குத்ஸ ஆங்கீரசன், அகஸ்தியர் போன்றோர் பாடிய துதிகளில் அவர்களுடைய பெயரைச் சேர்த்துப் பாடினார்கள். சில ரிஷிகள் கடைசி வரிகளை ஒரே மாதிரியாக அமைக்கின்றனர். ஆக இப்படி பாட்டில் தன அச்சை, முத்திரையைப் பதிக்கும் வழக்கத்தை ரிக் வேத காலத்திலேயே காண்கிறோம். வேதத்தின் பழமையை மிஞ்சக் கூடிய நூல் எதுவுமில்லை.
புரந்தரதாசர் முதல் பக்த மீரா வரை, தியாகராஜர் முதல் முத்துசாமி தீட்ஷிதர் வரை எல்லோரும் தான் இயற்றிய கிருதியாக் கண்டுபிடிக்க வசதியாக தனது பெயரையோ ஒரு சொல் தொடரையோ சேர்க்கின்றனர்.

இதை ரிக் வேதத்தில் நிறைய காணலாம்.
சில எடுத்துக்காட்டுகள்
குருகுஹ – முத்து சுவாமி தீட்சிதரின் முத்திரை
மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்
கபீர் கஹதா – கபீர் பாடல்கள்
தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் போன்றோர் தன பெயரை கடைசி வரியில் சொல்லிவிடுவார்கள்.
xxx
பல்லவி, அனுபல்லவி
பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றெல்லாம் தற்காலப் பாடல்களில், கிருதிகளில், சாஹித்யங்களில் காண்கிறோம். இதையும் அ கஸ்தியர் மந்திரங்களில் , து திகளில் காணலாம். முதல் மண்டலத்திலுள்ள அவரது 26 துதிகளும் கடைசி வேண்டுதல் ஒன்றாகவே இருக்கிறது.
சில ரிஷிகளின் மந்திரம் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி முடிவதைக் காண்கிறோம் .
Xxx
பஞ்ச தந்திரக் கதைகள்

ஈசாப் என்ற கிரேக்க அடிமை மிருகங்கள் வரக்கூடிய இந்தியாவின் கதைகளைப் பயன்படுத்தினான். அதே போல இந்து மதக் கதைகளை, நாடோடிக் கதைகளைத் திருடி அதில் பொதி சத்துவர் என்ற பெயரை நுழைத்து புத்த ஜாதகக்க தைகளை பெளத்தர்கள் எழுதினார்கள். அதற்கு முன்னரே உபநிஷதங்களில், ராமாயண, மஹாபாரத இதிகாசங்களில் பிராணிகள் பேசும் கதைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மூலம் ரிக் வேதம்தான். காடை என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து அஸ்வினிதேவர்கள் காதத கதை ரிக் வேதத்தில் வருகிறது. அற்புத மூலிகையான சோம லதையை மலையிலிருந்து பருந்துகள், கழுகுகள் கொண்டு தரும் அபூர்வ விஷயங்களும் முதல் மண்டலத்திலேயே கிடைக்கினறன. ஏனைய மண்டலங்களில் அஸ்வினி தேவர்களின் தேரை அன்னப் பறவைகள் இழுப்பதாகவும், மான்கள், இழுப்பதாகவும் வருகிறது. சாண்டா கிளாஸ் கதை போன்ற ரதங்கள் அப்போதே இருந்தன என்றே தோன்றுகிறது!
tags- பல்லவி, மிருகங்கள், முத்திரை, ரிக் வேதம்

xxxsubhamxxx